உலகின் பிரம்மாண்டமான டாப் 5 நீர்மூழ்கி கப்பல்கள்

Written By:

இராணுவ பிரிவில் கடற்படை என்றுமே தனித்துவமான செயல்பாடுகள் கொண்டது.

கண்ணுக்கு தெரியும் ஆபத்துகளை தாண்டி வருவது எளிதான ஒன்று தான், ஆனால் நீருக்கு அடியில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஆபத்துக்களின் எண்ணிக்கை கடவுள் படைத்த நீர்வாழ் உயிரனங்களை விட வலிமையானவை. அவை தான் நீர்மூழ்கி கப்பல்கள்.

மதி நிறைந்த தொழில்நுட்பமான நீர்மூழ்கி கப்பல்கள் சாதரண சரக்கு போக்குவரத்திற்கோ அல்லது ஆடம்பர போக்குவரத்திற்கானதோ அல்ல. நாட்டின் பாதுகாப்பிற்கு எந்த ஆபத்து நேர்ந்தாலும், உடனே செயல்படக்கூடிய திறன் படைத்தவை நீர்மூழ்கி கப்பல்கள். அதற்கான ஆணு ஆயுதங்கள் உட்பட பல்வேறு ஏவுகணைகளுடன் என்றுமே நீர்மூழ்கி கப்பல்கள் தயார் நிலையில் இருக்கும்.

உலகின் டாப் 5 நீர்மூழ்கி கப்பல்கள்

ஒரு நாட்டின் இராணுவ பலத்தை உலகிற்கு காட்டும் ஒரு பெருமிதமாக இருக்கும் நீர்மூழ்கி கப்பல்களில் ரஷ்யா நாடு தான் பல ஆண்டு காலமாக முதன்மை வகிக்கிறது, அதற்கு பிறகு அமெரிக்காவும் வலிமையான நீர்மூழ்கி கப்பல்களை வைத்துள்ளது.

1. டிமிட்ரி டான்ஸ்காய் (ரஷ்யா)

1. டிமிட்ரி டான்ஸ்காய் (ரஷ்யா)

உலக நாடுகளுக்கு எல்லாம் (குறிப்பாக அமெரிக்காவிற்கு) ஆணு ஆயுதத்தில் தனது பலத்தை காட்ட 1981ம் ஆண்டில் ரஷ்யா தயாரித்த நீர்மூழ்கி கப்பல் தான் டிமிட்ரி டான்ஸ்காய். உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கப்பலான இதில் அணு ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் அணு ஏவுகணைகள், கப்பல் ஏவுகணைகள் என கிட்டத்தட்ட உலகையே அழிக்கக் கூடிய ஆபாயம் நிறைந்த ஆயுதங்கள் டிமிட்ரி டான்ஸ்காய் கப்பலில் உள்ளது.

உலகின் டாப் 5 நீர்மூழ்கி கப்பல்கள்

பல்நோக்கு தாக்குதல்களை மேற்கொள்ளும் விதமாக இந்த கப்பலை ரஷ்யா கட்டமைத்தது. கிட்டத்தட்ட 574 அடி நீளம் கொண்ட டிமிட்ரி டான்ஸ்காய் நீர்மூழ்கி கப்பலில் 160பேர் வரை இருக்கலாம். கடலுக்கு அடியில் மட்டும் சுமார் 120 நாட்கள் வரை இதனால் திறனுடன் செயல்பட முடியும்.

உலகின் டாப் 5 நீர்மூழ்கி கப்பல்கள்

டிமிட்ரி டான்ஸ்காய் கப்பலை விட, அர்ஹான்ஜெல்ஸ்க், கிராஸ்னோயார்ஸ்க், நோவொஸிப்ரிஸ்க் மற்றும் பெர்ம் என்ற பெயர்களில் 4 புதிய நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யா தயாரித்து வருகிறது. இவை அனைத்தும் ரஷ்யாவின் கடல்புற எல்லைகளில் 2023ம் ஆண்டிற்குள் நிலைநிறுத்தப்படவுள்ளன.

2. யூரி டால்கோருகி (ரஷ்யா)

2. யூரி டால்கோருகி (ரஷ்யா)

இரண்டாவது உலகின் பெரிய நீர்மூழ்கிக்கான கப்பல்களின் பட்டியில் இருப்பது யூரி டால்கோருகி. இதுவும் ரஷ்யா நாட்டின் தயாரிப்பு தான். 1996ம் ஆண்டு இதற்கான வடிவமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு, 2008ம் ஆண்டு முடிக்கப்பட்டது. பல கட்ட தேர்வுகளுக்கு பிறகு 2013ம் ஆண்டில் யூரி டால்கோருகி நீர்மூழ்கி கப்பல் ரஷ்ய இராணுவத்தோடு இணைத்துக்கொள்ளப்பட்டது.

உலகின் டாப் 5 நீர்மூழ்கி கப்பல்கள்

ரூபின் டிசைன் பிரோ என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த நீர்மூழ்கி கப்பல் 770 மில்லியன் டாலர்களில் உருவாக்கப்பட்டது. 557.9 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் நீருக்கடியில் ஒரு மணி நேரத்திற்கு 54 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும், அதேபோல நீருக்கு வெளியில் 27 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய திறன் பெற்றது.

உலகின் முதல் 5 பெரிய நீர்மூழ்கி கப்பல்கள்

யூரி டால்கோருகி நீர்மூழ்கி கப்பலில் 16 ஏவுகணைகள், 45ற்கும் மேற்பட்ட கப்பல் ஏவுகணைகள். உள்ளன.

3. ஓஹாயோ கிளாஸ் (அமெரிக்கா)

3. ஓஹாயோ கிளாஸ் (அமெரிக்கா)

ரஷ்யா நாட்டின் பெரும்பாலான இராணுவ உபகரணங்களை அனைத்தும் அமெரிக்காவிற்காக தாயரித்தது தான். உலகின் வல்லரசான அமெரிக்கா, ரஷ்யாவிற்கு இணையான போர் கருவிகளை தன் வசம் வைத்துள்ளது. அதிலும் ரஷ்யாவிற்கு பலமான வலிமை மிகுந்த போர்கப்பல்கள் இருப்பதை தெரிந்துக்கொண்ட பின், நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பில் ரஷ்யாவிற்கு இணையான நுட்பத்தை அமெரிக்காவும் கையாண்டது.

உலகின் டாப் 5 நீர்மூழ்கி கப்பல்கள்

அதில் தயாரான நீர்மூழ்கி கப்பல் தான் ஓஹாயோ கிளாஸ். உலகின் மூன்றாவது பெரிய நீர்மூழ்கி கப்பலாகவும், அமெரிக்க நாட்டை பொறுத்தவரையில் முதல் பெரிய நீர்மூழ்கி கப்பல் என்ற பெருமையை ஓஹாயோ கிளாஸ் பெற்றுள்ளது. 1976ம் ஆண்டிலிருந்து 1997ம் ஆண்டு வரை இதற்கான கட்டமைப்பு பணிகளை அமெரிக்க மேற்கொண்டது.

உலகின் டாப் 5 நீர்மூழ்கி கப்பல்கள்

துணை உந்துவிசையில் இயக்கப்படும் அளவில் தயாரிக்கப்பட்டுள்ள ஓஹாயோ கிளாஸ் நீர்மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் ஒரு மணி நேரத்திற்கு 46 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது, அதுவே கடலின் மேற்பரப்பில் இருந்தால், 22 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.

உலகின் டாப் 5 நீர்மூழ்கி கப்பல்கள்

பெலிடிக் கடல் பகுதியில் தற்போது நிலை நிறுத்தப்பட்டுள்ள ஓஹாயோ கிளாஸ் நீர்மூழ்கி கப்பலுக்கு 2029 ஆண்டோடு அமெரிக்க அரசு ஓய்வளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

4. வாங்கார்டு கிளாஸ் (இங்கிலாந்து)

4. வாங்கார்டு கிளாஸ் (இங்கிலாந்து)

ரஷ்யா, அமெரிக்கா மட்டும் தான் வல்லரசு நாடுகளா என ஒரு நாடு கேள்வி கேட்கிறது என்றால். அது நிச்சயம் இங்கிலாந்தாகத்தான் இருக்க முடியும். அந்நாட்டின் அணு ஆயுதங்கள், ஏவுகணைகள், கப்பல் மிசைல்கள் அகியவற்றை தாங்கிக்கொண்டு ஸ்காட்லாந்து பகுதியில் வலம் வரும் நீர்மூழ்கி கப்பல் தான் வாங்கார்ட் கிளாஸ்.

உலகின் டாப் 5 நீர்மூழ்கி கப்பல்கள்

ரஷ்யா, அமெரிக்கா நாடுகள் இராணுவ கட்டமைப்பில் உலகின் வல்லமையானதை பார்த்த பிறகு இங்கிலாந்து 1986ம் ஆண்டில் தனது வாங்கார்ட் கிளாஸ் நீர்மூழ்கி கப்பலுக்கான தயாரிப்பு பணிகளை தொடங்கியது. 1993ம் ஆண்டு முதல் இங்கிலாந்து இராணுவத்தால் இணைத்துக்கொள்ளப்பட்ட இது, இன்றும் சேவையாற்றி வருகிறது.

உலகின் டாப் 5 நீர்மூழ்கி கப்பல்கள்

திரிசூலம் அணுசக்தி திட்டம் ( Trident nuclear programme) என்ற பெயரில் உருவாக்கப்பட்ட வாங்கார்ட் கிளாஸுடன் விக்டோரியஸ், விஜிலண்ட் மற்றும் வெஞ்சன்ஸ் என கூடுதலாக மூன்று நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கப்பட்டன. 149 அடி நீளம் கொண்ட இது கடலுக்கு அடியில் 46 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியளவில் திறன் கொண்டது.

5. ட்ரியம்பாண்ட் கிளாஸ் (ஃபிரான்ஸ்)

5. ட்ரியம்பாண்ட் கிளாஸ் (ஃபிரான்ஸ்)

ட்ரியம்பாண்ட் பிரிவில் ஃபிரான்ஸ் நாடு நான்கு நீர்மூழ்கி கப்பல்களை தயாரித்தது. 1997ம் ஆண்டு முதல் 2010 வரை அவை ஒவ்வொன்றாக சேவைகளை வரத்தொடங்கின. இதில் முதலாவதாக வெளியான ட்ரியம்பாண்ட் நீர்மூழ்கி கப்பல் உலகிலேயே பெரிய நீர்மூழ்கி கப்பல்களுக்கான வரிசையில் 5வது இடத்தை பிடித்துள்ளது.

உலகின் டாப் 5 நீர்மூழ்கி கப்பல்கள்

1986ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இதற்கான கட்டமைப்பு பணிகள் 1994ம் ஆண்டில் முடிக்கப்பட்டு, 1997ம் ஆண்டு மார்ச் முதல் ஃபிரான்ஸ் இராணுவத்தோடு இணைத்துக்கொள்ளப்பட்டது. 453 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் நீருக்கும் அடியில் ஒரு மணிநேரத்தில் 46 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய திறன் பெற்றதாகும்.

உலகின் டாப் 5 நீர்மூழ்கி கப்பல்கள்

1986ம் ஆண்டில் கட்டமைக்கப்பட்டு இருந்தாலும், தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்றவாற்றான அனைத்து வசதிகளையும் ட்ரியம்பாண்ட் நீர்மூழ்கி கப்பல் பெற்றுள்ளது.

English summary
Top 5 greatest and deadliest submarine, analysis is based on the combined score of offensive weapons, stealthiness, and some other features.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark