ஆட்டோபான் நெடுஞ்சாலையின் சில சுவாரஸ்யமான சாலை விதிகள்!

By Saravana Rajan

ஜெர்மனியின் ஆட்டோபான் நெடுஞ்சாலைகள் குறித்து நாம் வழங்கிய செய்திகளை படித்திருப்பீர்கள். அந்த சாலையை பற்றிய தெரியாதவர்கள் கூட இந்த செய்தியை படித்த பின்னர் அந்த சாலையில் ஒருமுறையேனும் செல்ல வேண்டும் என்ற உந்துதல் எழுந்திருக்கும்.

அதேவேளை, ஆட்டோபான் சாலையில் காரை ஓட்டுவதற்கு முன் அந்த சாலையில் கடைபிடிக்கப்படும் விதிமுறைகளையும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். மேலும், அந்த சாலையில் கடைபிடிக்கப்படும் சில வித்தியாசமான, விந்தையான விதிமுறைகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

சுவாரஸ்யமான சாலை விதிகளை ஸ்லைடரில் காணலாம்.

 பலமான கண்காணிப்பு

பலமான கண்காணிப்பு

அமெரிக்காவை போன்றே ஆட்டோபான் சாலைகளில் செல்லும் வாகனங்களை கண்காணிப்பதற்காக சிறப்பு போலீஸ் படை பிரிவு செயல்படுகிறது. விதி மீறுவோர்களை எளிதாக கண்டறிந்து அபராதம் மற்றும் இன்ன பிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Photo Credit: Vladislav Bezrukov

 மெதுவாக போனால்...

மெதுவாக போனால்...

ஆட்டோபான் சாலையில் மெதுவாக செல்வதும் விதியை மீறிய செயலாக பார்க்கப்படுகிறது.

Photo Credit: WikiPedia

 நடுவிரல் காட்டினால்

நடுவிரல் காட்டினால்

ஆட்டோபான் சாலையில் வரும் சில டிரைவர்கள் கற்ற வித்தையும் போட்டுக் காட்டிவிட்டு செல்வர். அதில் கோபமடைந்து சிலர் நடுவிரலை காட்டினால் 500 யூரோ அபராதம் அழ வேண்டியிருக்கும்.

Photo Credit: Wikipedia

டெயில்கேட் செய்தால்

டெயில்கேட் செய்தால்

டெயில்கேட் எனப்படும் மிக நெருக்கமாக பின்தொடர்வதும் அங்கு சாலை விதிமீறலாக பாவிக்கப்படுகிறது. முன்னால் செல்லும் வாகனத்துடன் மோதுவது போன்று பின்தொடர்ந்தால் 250 யூரோ அபராதம் விதிக்கப்படுகிறது.

Photo Credit: Wikipedia

 ஓவர்டேக்

ஓவர்டேக்

ஆட்டோபான் சாலையில் வலதுபுறம் ஓவர்டேக் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இடதுபுறத்தில் மட்டுமே ஓவர்டேக் செய்து செல்ல வேண்டும்.

Picture credit: Flickr

டயர்கள்

டயர்கள்

காரின் அதிகபட்ச வேகத்துக்கு தக்க டயர்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை, பனிக்கால டயர்கள் பொருத்தியிருந்தால் அதுகுறித்த போலீசாரிடம் அனுமதி பெற்று, அதுகுறித்த எச்சரிக்கை வாசகங்கள் வைன்ட்ஷீல்டுகளில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லையெனில், டிரைவிங் லைசென்ஸ் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும்.

Photo Credit: Wikipedia

 இதுவும் குற்றமே

இதுவும் குற்றமே

இடது தடத்தில் பின்னால் வேகமாக வரும் வாகனங்களுக்கு வழிகொடுக்காமல் ஆமை வேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். அதேபோன்று, பின்னால் வரும் வாகனங்கள் தொடர்ந்து ஹாரன் அடித்தாலோ அல்லது ஃப்ளாஷ் லைட்டை ஒளிர செய்து கொண்டே இருந்தாலும் அபராதம் உண்டு.

Photo Credit: Wikipedia

பெட்ரோல் இல்லாட்டியும்...

பெட்ரோல் இல்லாட்டியும்...

ஆட்டோபான் சாலையில் பெட்ரோல் இல்லாமல் வாகனங்கள் நிற்பதும் சட்டத்தை மீறும் செயலாக கருதப்படுகிறது. அவசர வழித்தடத்தில் கூட நிறுத்தக்கூடாது. அவசரத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது மிக தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது.

Picture credit: Flickr

 பிரேக் பிடித்தாலும்

பிரேக் பிடித்தாலும்

திடீரென பிரேக் பிடிக்கும்போதும், சந்திப்புகளில் காரின் வேகத்தை முழுவதுமாக குறைக்கும்போதும் ஹசார்டு எச்சரிக்கை விளக்குகளை கண்டிப்பாக ஒளிர விட வேண்டும். வழித்தடம் மாறும்போதும் ஹசார்டு லைட்டுகளை போட வேண்டும்.

Photo Credit: Wikipedia

ஓய்வு

ஓய்வு

ஆட்டோபான் சாலையில் செல்வோர் 2 மணிநேரத்துக்கு ஒருமுறை ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இதற்காக, ஆட்டோபான் சாலைகளின் நெடுகிலும் புத்துணர்ச்சி மையங்கள், ஓட்டல்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

Photo Credit: Wikipedia

 

Tamil
English summary
German autobahn network roads is one of the last places where you can drive as fast as you want, the fabled public highways aren't a free-for-all. Here are given some bizarre driving rules of Autobahn.
இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more