ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறி வைத்து செல்போன்களை திருடிய இளைஞர்... காரணத்தை கேட்டு ஸ்டன் ஆன போலீஸ்

ஆட்டோ ஓட்டுனர்களை மட்டும் குறி வைத்து ஸ்மார்ட்போன்களை திருடியதற்காக இளைஞர் ஒருவர் சொன்ன காரணத்தை கேட்டு காவல் துறையினர் ஆடிப்போயுள்ளனர்.

ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறி வைத்து செல்போன்களை திருடிய இளைஞர்... காரணத்தை கேட்டு ஸ்டன் ஆன போலீஸ்

கொரோனா வைரஸ் (கோவிட்-19) பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமலுக்கு கொண்டு வரப்பட்ட ஊரடங்கு பலரின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பல லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் பலருக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறி வைத்து செல்போன்களை திருடிய இளைஞர்... காரணத்தை கேட்டு ஸ்டன் ஆன போலீஸ்

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் மிகவும் முக்கியமானவர்கள். இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து ஆட்டோக்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. எனவே ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் வருமானம் இழந்து, குடும்பம் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறி வைத்து செல்போன்களை திருடிய இளைஞர்... காரணத்தை கேட்டு ஸ்டன் ஆன போலீஸ்

அதன்பின்னர் ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக ஆட்டோக்களை இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக சொந்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதையே மக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். எனவே தற்போதும் போதிய வருமானம் கிடைக்காமல் ஆட்டோ ஓட்டுனர்கள் தவித்து வருகின்றனர்.

ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறி வைத்து செல்போன்களை திருடிய இளைஞர்... காரணத்தை கேட்டு ஸ்டன் ஆன போலீஸ்

இப்படி வறுமையில் சிக்கி தவித்து கொண்டுள்ள ஆட்டோ ஓட்டுனர்களை மட்டும் குறி வைத்து, அவர்களின் செல்போன்களை ஒருவர் திருடியுள்ளார். மொத்தம் 70 ஆட்டோ ஓட்டுனர்களிடம் இருந்து ஸ்மார்ட்போன்கள் திருடப்பட்டுள்ளன. செல்போன்களை திருடிய நபரை, நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஒரு வழியாக காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.

ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறி வைத்து செல்போன்களை திருடிய இளைஞர்... காரணத்தை கேட்டு ஸ்டன் ஆன போலீஸ்

ஆட்டோ ஓட்டுனர்களை மட்டும் குறி வைத்து செல்போன்களை கொள்ளையடிக்க என்ன காரணம்? என்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கு அவர் கூறிய வினோதமான பதில் காவல் துறையினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்த துணிகர செயலில் ஈடுபட்ட நபரின் பெயர் ஆஷிப் என்கிற பூராபாய் ஆரிப் ஷேக். இவருக்கு தற்போது 36 வயதாகிறது.

ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறி வைத்து செல்போன்களை திருடிய இளைஞர்... காரணத்தை கேட்டு ஸ்டன் ஆன போலீஸ்

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் வைத்து ஆஷிப்பை, காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர் மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள கட்ராஜ்-கோந்த்வா வழித்தடத்தில் இயங்கி கொண்டுள்ள ஆட்டோக்களை குறி வைத்து, அதன் ஓட்டுனர்களிடம் இருந்து ஸ்மார்ட்போன்களை திருடியுள்ளார். ஸ்மார்ட்போன்களை அவர் திருடியதற்கு காரணம் பொருளாதார நெருக்கடி அல்ல.

ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறி வைத்து செல்போன்களை திருடிய இளைஞர்... காரணத்தை கேட்டு ஸ்டன் ஆன போலீஸ்

மாறாக ஆட்டோ ஓட்டுனர்களை பழி வாங்குவதற்காகவே அவர் ஸ்மார்ட்போன்களை திருடியுள்ளார். இதன் பின்னணியில் ஒரு காதல் கதை உள்ளது. தற்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ஆஷிப் ஒரு காலத்தில் செல்வ செழிப்புடன் நல்ல நிலைமையில்தான் இருந்தார். அகமதாபாத் நகரில் உணவகம் ஒன்றை அவர் சொந்தமாக நடத்தி வந்தார்.

ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறி வைத்து செல்போன்களை திருடிய இளைஞர்... காரணத்தை கேட்டு ஸ்டன் ஆன போலீஸ்

ஆனால் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்த நிலையில், தனது பணத்தை எல்லாம் இழந்து இப்படி ஒரு மோசமான நிலைக்கு அவர் ஆளாகியுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், ''27 வயதான ஒரு பெண்ணை ஆஷிப் காதலித்து வந்தார். ஆனால் அவர்களின் காதலுக்கு ஆஷிப்பின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறி வைத்து செல்போன்களை திருடிய இளைஞர்... காரணத்தை கேட்டு ஸ்டன் ஆன போலீஸ்

எனினும் காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் ஆஷிப் மிக உறுதியாக இருந்தார். இதனால் அகமதாபாத்தில் இருந்த உணவகத்தை விற்பனை செய்து விட்டு, அந்த பணத்துடன் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் புனேவிற்கு வந்தார். தன்னுடன் காதலியையும் அவர் அழைத்து வந்தார்.

ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறி வைத்து செல்போன்களை திருடிய இளைஞர்... காரணத்தை கேட்டு ஸ்டன் ஆன போலீஸ்

காதலியை திருமணம் செய்து கொண்டு, புதிய நகரில் புதிய தொழில் உடன் புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பது அவரது எண்ணம். ஆனால் புனேவிற்கு வந்த இரண்டே நாட்களில், ஆஷிப்பின் பணத்தை எல்லாம் எடுத்து கொண்டு, அவரின் காதலி மீண்டும் குஜராத் மாநிலத்திற்கே ஓடி விட்டார். அவர் எங்கு சென்றார்? என்பது ஆஷிப்பிற்கு தெரியவில்லை.

ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறி வைத்து செல்போன்களை திருடிய இளைஞர்... காரணத்தை கேட்டு ஸ்டன் ஆன போலீஸ்

இருந்தாலும் காதலியை தேட தொடங்கினார். ஆனால் தனது காதலியை அவர் கண்டுபிடித்த நேரத்தில், சூழல் தலைகீழாக மாறியிருந்தது. ஆம், ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை ஆஷிப்பின் காதலி திருமணம் செய்து விட்டார். இதனால் ஆஷிப்பின் மனம் நொறுங்கியது. இருந்தாலும் உடைந்த மனதுடன் ஆஷிப் மீண்டும் புனேவிற்கே திரும்பினார். அங்கு தனது தூரத்து உறவினர் ஒருவரிடம் அவர் வேலை செய்து வந்தார்.

ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறி வைத்து செல்போன்களை திருடிய இளைஞர்... காரணத்தை கேட்டு ஸ்டன் ஆன போலீஸ்

உயிருக்கு உயிராக நேசித்த காதலி ஆட்டோ ஓட்டுனருடன் ஓடி விட்டதால், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எதிராக அவரது மனதில் வெறுப்பு உருவானது. இதன் விளைவாக ஆட்டோ ஓட்டுனர்கள் எல்லாம் கஷ்டப்படுவதை பார்த்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. இதனால்தான் ஆட்டோ ஓட்டுனர்களை மட்டும் குறி வைத்து, அவர்களின் செல்போன்களை ஆஷிப் திருடியுள்ளார்.

ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறி வைத்து செல்போன்களை திருடிய இளைஞர்... காரணத்தை கேட்டு ஸ்டன் ஆன போலீஸ்

கட்ராஜ்-கோந்த்வா வழித்தடத்தில் அடிக்கடி பயணம் செய்யும் ஆஷிப், ஆட்டோ ஓட்டுனர்களின் கவனத்தை திசை திருப்பி, அவர்களின் செல்போன்களை கொள்ளையடித்து விடுவார். இதில், அவருக்கு ஒரு விதமான சந்தோஷம் கிடைத்து வந்துள்ளது. தன்னுடைய மோசமான பொருளாதார நிலைமை மற்றும் உடைந்த மனதிற்கு ஒரு ஆட்டோ ஓட்டுனர்தான் காரணம் என ஆஷிப் கருதுகிறார்.

ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறி வைத்து செல்போன்களை திருடிய இளைஞர்... காரணத்தை கேட்டு ஸ்டன் ஆன போலீஸ்

எனவே அவர்களிடம் இருந்து செல்போன்களை திருடுவது எனக்கு ஒருவிதமான நிவாரணத்தை வழங்குகிறது என அவர் எங்களிடம் கூறினார். அதே சமயம் தனது காதலி மீது எந்தவிதமான மன கசப்பும் தனக்கு இல்லை என அவர் எங்களிடம் தெரிவித்துள்ளார். 70க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களிடம் இருந்து செல்போன்களை திருடியதை விசாரணையின்போது ஆஷிப் ஒப்பு கொண்டுள்ளார்.

ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறி வைத்து செல்போன்களை திருடிய இளைஞர்... காரணத்தை கேட்டு ஸ்டன் ஆன போலீஸ்

ஆட்டோ ஓட்டுனர்களிடம் இருந்து செல்போன்கள் கொள்ளையடிக்கப்படுவதாக எங்களுக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டே இருந்தது. இதன்பேரில் நாங்கள் உடனே விசாரணையை தொடங்கி, தற்போது ஆஷிப்பை கைது செய்துள்ளோம். ஆஷிப்பின் கதையை கேட்டு நாங்கள் திகைத்து போய் விட்டோம். அவரிடம் இன்னும் நிறைய விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறி வைத்து செல்போன்களை திருடிய இளைஞர்... காரணத்தை கேட்டு ஸ்டன் ஆன போலீஸ்

கொள்ளையடித்த செல்போன்களை வைத்து அவர் என்ன செய்தார்? என்பது உள்பட பல்வேறு விஷயங்களை நாங்கள் கண்டுபிடிக்க போகிறோம். ஆட்டோ ஓட்டுனர்களிடம் இருந்து, ஸ்மார்ட்போன்களை திருடுவது என முடிவு செய்த பின், ஆஷிப் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டுள்ளார். ஆடம்பரமாக இருக்கும் ஆட்டோக்களை மட்டுமே அவர் வாடகைக்கு அழைப்பார்.

ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறி வைத்து செல்போன்களை திருடிய இளைஞர்... காரணத்தை கேட்டு ஸ்டன் ஆன போலீஸ்

ஆட்டோவில் ஏறிய பின்பு, அவசரமாக ஒருவரை தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது என்ற பெயரிலோ அல்லது ஓட்டுனர்களின் கவனத்தை திசை திருப்பியோ, அவர்களின் ஸ்மார்ட்போனை ஆஷிப் கொள்ளையடித்து விடுவார். நடை, உடை, பாவனை மற்றும் மொழி வல்லமை உள்ளிட்ட காரணங்களால், ஆஷிப் மீது யாருக்குமே சந்தேகம் ஏற்படவில்லை.

ஆட்டோ டிரைவர்களை மட்டும் குறி வைத்து செல்போன்களை திருடிய இளைஞர்... காரணத்தை கேட்டு ஸ்டன் ஆன போலீஸ்

மிகவும் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் ஓட்டுனர்களை மட்டுமே குறி வைத்து, ஆஷிப் வாடகைக்கு அழைத்து செல்வார்'' என்றனர். ஆட்டோ ஓட்டுனருடன் காதலி ஓடி போனதால், ஆட்டோ ஓட்டுனர்களை மட்டும் குறி வைத்து, ஸ்மார்ட்போன்கள் திருடப்பட்டுள்ள இந்த வினோத சம்பவம் தொடர்பான செய்தியை மும்பை மிரர் வெளியிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bizarre Incident! Ahmedabad Man Steals Smartphones From 70 Auto Drivers in Pune - Here Is Why. Read in Tamil
Story first published: Wednesday, August 26, 2020, 20:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X