பா.ஜ.க அதிகாரிகள், ஆட் - ஈவன் திட்டத்தினால் குதிரைகளிலும், சைக்கிளிலும் பயணம்

Written By:

பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) அதிகாரிகள், இந்திய தலைநகர் டெல்லியில் அமலில் இருக்கும் ஆட் - ஈவன் நடைமுறையை அடுத்து குதிரைகளிலும், சைக்கிளிலும் பயணிக்கின்றனர்.

டெல்லியில் மாசு உமிழ்வை குறைக்கும் வகையில் ஆட் - ஈவன் திட்டம் பின்பற்றபடுகிறது. இது பா.ஜ.க அதிகாரிகளுக்கு ஏற்று கொள்ளும் விஷயம் போல் இருப்பதாக தெரியவில்லை. இந்த ஆட் - ஈவன் திட்டம் தொடர்பாக தங்களின் நிலைபாட்டை வெளிபடுத்த பா.ஜ.க அதிகாரிகள் வினோதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் பா.ஜ.க எம்பி பரேஷ் ராவல், ஆட் - ஈவன் திட்டத்தை பகிரங்கமாக மீறினார். பரேஷ் ராவல், ஆட் - ஈவன் திட்டத்தின் படி, தனக்கு அனுமதிக்கபடாத நாளில், அவரின் காரை கொண்டு நாடாளுமன்றம் சென்றார். இதற்காக, எம்பி-யான பரேஷ் ராவல், டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கேஜரிவால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

bjp-officials-ride-horses-cycles-protesting-against-delhi-odd-even-scheme

பாஜக எம்பி-யான ராம் பிரசாத் ஷர்மா, குதிரை மேல் சவாரி செய்து கொண்டு, நாடாளுமன்றம் சென்றார். மற்றொரு பாஜக எம்பி-யான மனோஜ் திவாரி, ராம் பிரசாத் ஷர்மா-வை போல வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற முனைப்பில் சைக்கிள் ஓட்டி கொண்டு நாடாளுமன்றம் சென்றார். இவர்கள் டெல்லி அரசின் செயல்களை விமர்சிக்கிறார்களா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

இதற்கிடையில், பரேஷ் ராவல், ஆட் - ஈவன் திட்டத்தின் படி தனக்கு அனுமதிக்கபடாத நாளில் அவரின் காரை கொண்டு நாடாளுமன்றம் சென்றதற்காக அவருக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கபட்டது. இந்த அபராதம் கட்டியதற்கான சலான் ரசீதினை பரேஷ் ராவல் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டார். எப்படி பார்த்தாலும், நமது தலைவர்கள். முன் வந்து அபராதம் செலுத்துவது போன்ற நடவடிக்கைகள் நிச்சயம் பாராட்ட வேண்டிய விஷயமாக உள்ளது.

English summary
BJP Officials use Horses and Cycles expressing their stand on Odd/Even Scheme in Delhi. Ram Prasad Sharma, BJP, Member of Parliament, rode a horse during the Odd/Even scheme. Manoj Tiwari, BJP, Member of Parliament, reached Parliament by riding a cycle. Paresh Rawal, violated the Odd/Even scheme blatantly and paid fine. To know more, check here...
Story first published: Friday, April 29, 2016, 11:28 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark