அதிவேக சாதனை படைக்க தயாரான பார்வை இழந்த கார் பந்தய வீரர்!

கார் பந்தயத்தின்போது விபத்தில் பார்வையை இழந்த அமெரிக்க வீரர் மீண்டும் ஒரு புதிய வேக சாதனைக்காக காரை உருவாக்கி வருகிறார். அவர் பற்றியும், அவரது கார் பற்றியும் சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அதிவேக சாதனை படைக்க தயாரான பார்வை இழந்த கார் பந்தய வீரர்!

அமெரிக்காவை சேர்ந்தவர் டேன் பார்க்கெர். இவரது குடும்பத்தினர் பலர் மோட்டார் பந்தய வீரர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில், அதே சூழ்நிலையில் வளர்ந்த டேன் பார்க்கெரும் கார் பந்தய வீரராக மாறினார். இந்த நிலையில், கடந்த 2012ம் ஆண்டு நடந்த கார் பந்தய விபத்தில் டென் மார்க்கெர் படுகாயமடைந்தார்.

அதிவேக சாதனை படைக்க தயாரான பார்வை இழந்த கார் பந்தய வீரர்!

அவர் ஓட்டிச் சென்ற கார் மணிக்கு 175 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது, தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அவரது இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனது.

அதிவேக சாதனை படைக்க தயாரான பார்வை இழந்த கார் பந்தய வீரர்!

இருப்பினும், பார்வையை இழந்தாலும் அவர் முடங்கிவிடவில்லை. அடுத்த ஆண்டிலேயே அவர் அமெரிக்காவில் உள்ள பிரபலமான சால்ட் பிளாட் லேக் பகுதியில் அதிவேக சாதனைகளை நிகழ்த்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதிவேக சாதனை படைக்க தயாரான பார்வை இழந்த கார் பந்தய வீரர்!

தற்போது இந்த அதிவேக சாதனை களத்தில் புதிய சாதனை படைக்கும் முயற்சிகளில் இறங்கி இருக்கிறார். இந்த களத்தில் மைக் நியூமேன் நிகழ்ச்சி மணிக்கு 200.9 மைல் வேகம் என்ற அதிகபட்ச வேக சாதனையை முறியடிப்பதற்காக தயாராகி வருகிறார்.

அதிவேக சாதனை படைக்க தயாரான பார்வை இழந்த கார் பந்தய வீரர்!

இதற்காக, தன்னிடம் இருந்த பொருட்களை விற்றும், ஆன்லைனில் நிதி திரட்டியும் விபத்தில் சிக்கி சின்னாபின்னமான நிலையில் இருந்த 2008 சி6 கார்வெட் காரை வாங்கி இருக்கிறார். அந்த காரில் முன்புறம் சிதைந்து போன நிலையில் எஞ்சின் எதுவும் இல்லாமல் வாங்கியுள்ளார். தற்போது அந்த காரை கஸ்டமைஸ் செய்து வருகிறார்.

MOST READ: அடி வேலைக்கு ஆகவே ஆகாது... தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்... தரமான சம்பவம் சார்

அதிவேக சாதனை படைக்க தயாரான பார்வை இழந்த கார் பந்தய வீரர்!

தனது அதிவேக சாதனைக்கு கார்வெட் கார் மிகச் சிறந்த கட்டமைப்பு கொண்டதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த காரை வைத்து புதிய அதிவேக சாதனை படைத்துவிடுவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

MOST READ: வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எல்லாரும் ஆசைப்பட்ட அறிவிப்பு வெளியானது... மத்திய அரசு அதிரடி...

அதிவேக சாதனை படைக்க தயாரான பார்வை இழந்த கார் பந்தய வீரர்!

இந்த சாதனையை படைப்பதற்கான தேதி எதுவும் இதுவரை அவர் நாள் குறிக்கவில்லை. எனினும், விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு அவரிடம் இருந்து வரும் என்று மோட்டார் பந்தய வீரர்களும், ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

MOST READ: கடவுள் சார் நீங்க... மிக மிக மலிவான விலையில் உயிர் காக்கும் கருவி... உலகையே அசத்தும் நம்ம மஹிந்திரா

அதிவேக சாதனை படைக்க தயாரான பார்வை இழந்த கார் பந்தய வீரர்!

தற்போது தனது சி6 கார்வெட் காரை அதிவேக சாதனைக்காக தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும், தன்னுடைய கண் பார்வை பறிபோக காரணமாக இருந்த விபத்தின்போது பயன்படுத்திய காரின் வண்ணக் கலவையையே இந்த காருக்கும் பயன்படுத்தி இருக்கிறாராம்.

Source: Caranddriver

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
US based blind car racer Dan parker is developing new car to set new speed record on salt flat lake.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X