பெங்களூரில் முதல் மாநகர எலக்ட்ரிக் பேருந்து அறிமுகம்!! சென்னையில் 2019லேயே வந்துவிட்டது!

இந்தியாவின் வேகமாக வளர்ந்துவரும் நகரங்களுள் ஒன்றான பெங்களூர் அதன் எலக்ட்ரிக் மாநகர பேருந்தை தற்போது பெற்றுள்ளது. இந்த எலக்ட்ரிக் பேருந்து பெங்களூரு பெருநகர போக்குவரத்து கழகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் முதல் மாநகர எலக்ட்ரிக் பேருந்து அறிமுகம்!! சென்னையில் 2019லேயே வந்துவிட்டது!

இந்த எலக்ட்ரிக் பேருந்தை ஜேபிஎம் ஆட்டோ நிறுவனம் தயாரித்து கொடுத்துள்ளது. இதனை மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீராமலு கொடியசைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளார். 9 மீட்டர்கள் நீளம் கொண்டதாக உள்ள இந்த எலக்ட்ரிக் பேருந்தில் அதிகப்பட்சமாக 33 பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய முடியும்.

சிங்கிள்-முழு சார்ஜில் இந்த எலக்ட்ரிக் பேருந்தில் 120கிமீ தூரத்திற்கு பயணிக்கலாம் என தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது. இந்த பேருந்தின் அதிகப்பட்ச வேகம் 70kmph ஆகும். இதன் பேட்டரியை விரைவான சார்ஜர் மூலம் 60% சார்ஜ் நிரப்ப 45 நிமிடங்கள் தேவைப்படுமாம்.

பெங்களூரில் முதல் மாநகர எலக்ட்ரிக் பேருந்து அறிமுகம்!! சென்னையில் 2019லேயே வந்துவிட்டது!

இந்த எலக்ட்ரிக் பேருந்தின் முன்பக்கத்தில் ஒன்று, பின்பக்கத்தில் ஒன்று என இரு சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மற்ற பெங்களூர் மாநகர பேருந்துகளில் வழங்கப்படுவதை போல் இந்த எலக்ட்ரிக் பேருந்திலும் முன்பக்கத்தில் மற்றும் மத்தியில் இரு ஆட்டோமேட்டிக் கதவுகள் வழங்கப்பட்டுள்ளன.

பெங்களூரில் முதல் மாநகர எலக்ட்ரிக் பேருந்து அறிமுகம்!! சென்னையில் 2019லேயே வந்துவிட்டது!

பயணிகள் ஏறுவதற்கு போதுமான அளவில் படிக்கட்டுகளை கொடுத்துள்ளனர். உள்ளே இருக்கைகள் ஒவ்வொன்றிற்கும் பாதுகாப்பு பொத்தான் ஒன்றை கொடுத்துள்ளனர். இதை அழுத்தினால் பயணிக்கு உதவி தேவை என்பதை அறிந்து ஓட்டுனர் உடனே பேருந்தை நிறுத்த வேண்டுமாம்.

இதுகுறித்து பி ஸ்ரீராமுலு பேசுகையில், ரூ.130 கோடி மதிப்பில் மொத்தம் 90 எலக்ட்ரிக் பேருந்துகள் பெங்களூர் மாநகரம் முழுவதும் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. மாநில போக்குவரத்து துறையில் இருந்து முறையான அனுமதி கிடைக்கும் வரையில் இந்த எலக்ட்ரிக் பேருந்து சில சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட உள்ளது.

பெங்களூரில் முதல் மாநகர எலக்ட்ரிக் பேருந்து அறிமுகம்!! சென்னையில் 2019லேயே வந்துவிட்டது!

பெங்களூரில் அடுத்தடுத்ததாக பயன்பாட்டிற்கு வரும் 90 எலக்ட்ரிக் பேருந்துகளை தயாரிப்பதற்கான குத்தகை தேசிய அனல்மின் கழகம் வியாபர் வித்யுத் நிகாம்-இன் முன்னிலையில் நடத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து வரும் நாட்களில் மேலும் 300 மின்சார பேருந்துகளை சேர்க்க அரசு (கர்நாடக அரசு) திட்டமிட்டுள்ளது என்றார்.

பெங்களூரில் முதல் மாநகர எலக்ட்ரிக் பேருந்து அறிமுகம்!! சென்னையில் 2019லேயே வந்துவிட்டது!

பொது பயன்பாட்டிற்கு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எலக்ட்ரிக் பேருந்தை ஆய்வு செய்த பின் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், மக்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதிகளை வழங்க எங்கள் அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது. மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மின்சார பேருந்து அதிக எண்ணிக்கையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அனைத்து மக்களும் இந்த போக்குவரத்து வசதியை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளவும். போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் என தெரிவித்துள்ளார். இதேபோன்று தான் 2019இல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2 எலக்ட்ரிக் பேருந்துகளை கொடியசைத்து திறந்து வைத்தார். சென்னை- திருவான்மியூர், பிராட்வே- கோயம்பேடு வழித்தடங்களில் சில நாட்களுக்கு அவை இயக்கப்பட்டன.

பெங்களூரில் முதல் மாநகர எலக்ட்ரிக் பேருந்து அறிமுகம்!! சென்னையில் 2019லேயே வந்துவிட்டது!

சோதனை முடிவுகள் என்ன ஆனது, எலக்ட்ரிக் பேருந்துகள் தயாரிக்கப்படுகின்றனவா என்பது தெரியவில்லை. ஆனால் ஆக மொத்தத்தில் தற்போதைக்கு சென்னையில் எந்தவொரு மாநகர எலக்ட்ரிக் பேருந்தையும் சாலையில் பார்க்க முடிவதில்லை. 2019 மட்டும் அல்ல, 2017 ஜூலை மாதத்தில் கூட இவ்வாறு ஒரு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை பெருக்கும் விதமாக சில மானியங்களை அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. புதிய திமுக அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சிங்கார சென்னை 2.0 திட்டத்திலும் இ-பேருந்துகள் இடம்பிடித்துள்ளன.

பெங்களூரில் முதல் மாநகர எலக்ட்ரிக் பேருந்து அறிமுகம்!! சென்னையில் 2019லேயே வந்துவிட்டது!

எலக்ட்ரிக் போக்குவரத்தை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசாங்கம் 2015இல் ஃபேம்-1 திட்டத்தையும், 2019இல் ஃபேம்-2 திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. இந்த இரு திட்டங்களிலும் சென்னை உட்படுத்தப்படவில்லை. கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர் மற்றும் தஞ்சாவூர் என தமிழகத்தின் டயர்-2 நகரங்கள் கூட இந்த லிஸ்ட்களில் இடம்பிடித்தன. ஆனால் சென்னை இல்லை.

இதனால் எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்குவதில் தமிழக அரசாங்கத்திற்கு சற்று பெரிய முதலீட்டிற்கு வழிவகுத்தது. அதுமட்டுமின்றி எலக்ட்ரிக் பேருந்துகளை தயாரிக்கும் அளவிற்கு போதுமான தொழிற்சாலை வசதியும் நமது மாநிலத்தில் இல்லை என்பதையே ஒத்து கொண்டே ஆக வேண்டும். இவையெல்லாம் தான், சென்னை சாலைகளில் இப்போது வரையில் எந்தவொரு எலக்ட்ரிக் பேருந்தையும் பார்க்க முடியாததற்கு காரணங்களாகும்.

மத்திய அரசாங்கத்தின் மானியங்களில் உள்ளடங்கும் டெல்லி, மும்பை போன்ற நகரங்கள் இ-பேருந்துகளை மாநகர பொது பயன்பாட்டிற்கு கொண்டுவர தயாராகி வருகின்றன. இவ்வாறான பொது போக்குவரத்திற்கான எலக்ட்ரிக் பேருந்துகளை பயன்படுத்துவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனெனில் அவற்றிற்கென தனியாக சார்ஜிங் நிலையங்கள், பேட்டரி திறன்களை கொண்டுவர வேண்டிய நிர்பந்தம் உள்ளது.

Most Read Articles

English summary
Karnataka Transport minister to unveil Bengaluru’s first e-bus.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X