300கிமீ வேகத்தில் இயங்கும் உலகின் முதல் முழு-எலக்ட்ரிக் விங்-சூட்!! அடுத்தடுத்த லெவலில் பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ நிறுவனம் வானில் பறப்பதற்கு தேவையான முழு-எலக்ட்ரிக் இறக்கை ஆடையை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை பற்றிய முழு விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

300கிமீ வேகத்தில் இயங்கும் உலகின் முதல் முழு-எலக்ட்ரிக் விங்-சூட்!! அடுத்தடுத்த லெவலில் பிஎம்டபிள்யூ

டிசைன்வொர்க்ஸ் (Designworks) உடன் பிஎம்டபிள்யூ ஐ வடிவமைத்துள்ள இந்த புதிய எலக்ட்ரிக் இறக்கை-ஆடையின் மூலமாக அதிகப்பட்சமாக மணிக்கு 300 கிமீ வேகத்தில் பறக்க முடியும். இந்த சாதனம், மூன்று வருடங்களுக்கு முன்பு பீட்டர் சால்ஸ்மான் என்பரால் கான்செப்ட் ஆகவே கொண்டுவரப்பட்டிருந்தது.

300கிமீ வேகத்தில் இயங்கும் உலகின் முதல் முழு-எலக்ட்ரிக் விங்-சூட்!! அடுத்தடுத்த லெவலில் பிஎம்டபிள்யூ

பீட்டர் சால்மான், தொழிற்முறை விங்-சூட் பைலட் ஆவார். அதுமட்டுமின்றி ஸ்கைடைவர் மற்றும் பாராகிளைடிங் பயிற்றுவிப்பாளராகவும் இவர் உள்ளார். பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் விங்-சூட் முழுக்க முழுக்க எலக்ட்ரிக் மூலமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

300கிமீ வேகத்தில் இயங்கும் உலகின் முதல் முழு-எலக்ட்ரிக் விங்-சூட்!! அடுத்தடுத்த லெவலில் பிஎம்டபிள்யூ

இந்த எலக்ட்ரிக் விங்-சூட்டில் ரைடரின் மார்பு பகுதிக்கு சற்று கீழே இரு கார்பன் ப்ரோபெல்லர்ஸ் எனப்படும் இயக்குறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 25,000 ஆர்பிஎம் வேகத்தில் இரண்டும் தலா 7.5 எச்பி பவரை அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

300கிமீ வேகத்தில் இயங்கும் உலகின் முதல் முழு-எலக்ட்ரிக் விங்-சூட்!! அடுத்தடுத்த லெவலில் பிஎம்டபிள்யூ

இவற்றின் மூலமாக ஐந்து நிமிடங்களில் மொத்தமாக 20 பிஎச்பி பவரை பெற முடியும். இந்த விங்-சூட் எவ்வாறு செயல்படுகிறது என்பதை வெளிக்காட்டும் வீடியோ ஒன்று ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ இதோ உங்களுக்காக,

இந்த வீடியோவில் காட்டப்படும் சோதனை முயற்சியில் சால்ஸ்மான் தான் ஈடுப்படுகிறார். ஆஸ்டிரியா நாட்டில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த வீடியோவில் ஹெலிகாப்டர் உதவியுடன் சுமார் 9000 அடி உயரத்தில் இருந்து அவர் கீழே குதிக்கிறார். ஆனால் யாரும் பயப்பட வேண்டாம், ஏனெனில் இவ்வாறான சோதனைகளில் எப்போதுமே பீட்டர் சால்ஸ்மான் வழக்கமான விங்சூட்களையும் பயன்படுத்துவார்.

300கிமீ வேகத்தில் இயங்கும் உலகின் முதல் முழு-எலக்ட்ரிக் விங்-சூட்!! அடுத்தடுத்த லெவலில் பிஎம்டபிள்யூ

ஏனெனில் அவை தான் செங்குத்தாக தரையை நோக்கி இறங்கவும், சறுக்கு விகிதத்தை அதிகரிக்கவும் அவருக்கு உதவியாக இருக்கும். ஆனால் வழக்கமான சூட்கள் 100 kmph வேகத்திற்குதான் சரியானவைகள் உள்ளன. பிஎம்டபிள்யூவின் இந்த எலக்ட்ரிக் விங்-சூட் 300 kmph என்ற வேகத்திலும் சிறப்பாக செயல்படுவதை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

300கிமீ வேகத்தில் இயங்கும் உலகின் முதல் முழு-எலக்ட்ரிக் விங்-சூட்!! அடுத்தடுத்த லெவலில் பிஎம்டபிள்யூ

மற்றப்படி இந்த எலக்ட்ரிக் இறக்கை-உடையை அதிகளவிலான தயாரிப்பு பணிகளுக்கு உட்படுத்தும் திட்டம் பிஎம்டபிள்யூவிடம் உள்ளதா என்பது தெரியவில்லை. ஹாலிவுட் கதாபாத்திரம் பேட்மேனை போல் நம்மை உணர வைக்கும் இந்த விங்-சூட் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தால் நன்றாக தான் இருக்கும்.

Most Read Articles

English summary
Now fly like a Batman! World’s first all-electric wingsuit by BMW lets you do 300 kmph
Story first published: Thursday, November 12, 2020, 8:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X