10 ஆண்டுகள் நிறைவு செய்த சென்னை பிஎம்டபிள்யூ கார் தொழிற்சாலை!

Written By:

ஜெர்மன் கார் தயாரிப்பாளரும் உலகின் முன்னோடி சொகுசு கார் உற்பத்தியாளருமான 'பிஎம்டபிள்யூ' நிறுவனத்திற்கு தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் கார் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. தற்போது இந்த தொழிற்சாலை, கார் உற்பத்தியில் 10 ஆண்டுகள் நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது.

சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலைக்கு 10வது பிறந்தநாள்

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் தனது கார் தொழிற்சாலையை நிறுவ 2005ஆம் ஆண்டு தீர்மானித்தபோது மகராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்கள் இதற்காக கடுமையாக போட்டியிட்டன. எனினும் தனது தொழிற்சாலையை அமைக்க ஏற்ற இடமாக தமிழ்நாட்டையே அந்நிறுவனம் தேர்ந்தெடுத்தது.

சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலைக்கு 10வது பிறந்தநாள்

பல்வேறு மாநிலங்களும் பல்வேறு சலுகைகளை அளிக்க முன்வந்த நிலையிலும் தொழில்துறைக்கு தமிழகத்தில் நிலவும் ஆதரவான சூழல், அடிப்படை கட்டமைப்பு, ஏற்றுமதி - இறக்குமதி வசதி, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ‘தெற்காசியாவின் டெட்ராய்ட்' என செல்லமாக அழைக்கப்படும் சென்னையில் இந்தத் தொழிற்சாலையை அமைக்க பிஎம்டபிள்யூ முடிவு செய்தது.

சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலைக்கு 10வது பிறந்தநாள்

இதற்கான ஒப்பந்தம் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா முன்னிலையில் டிசம்பர் 8, 2005ஆம் ஆண்டு போடப்பட்டது. இதில் பிஎம்டபிள்யூ பொது மேலாளர்களான ரொனால்ட் ஜென்ட்ஸ், பீட்டர் ரோண்ட்னாபில் ஆகியோரும் தமிழக தொழில்துறைச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோரும் கையெழுத்திட்டனர்.

சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலைக்கு 10வது பிறந்தநாள்

ரூ.180 கோடியில் சென்னையை அடுத்துள்ள மறைமலை நகரில் உள்ள ‘மகிந்திரா வோர்ல்டு சிட்டி' என்றழைக்கப்படும் உலகத்தரமான தொழிற்சாலை வளாகத்தில் பிஎம்டபிள்யூ தனது தொழிற்சாலையை அமைத்தது. இதுவே இந்தியாவில் உள்ள ஒரே பிஎம்டபிள்யூ தொழிற்சாலை ஆகும்.

சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலைக்கு 10வது பிறந்தநாள்

மார்ச் 29, 2007 ஆம் ஆண்டு இங்கு கார் உற்பத்தியை அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இந்த ஆண்டுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலை இதுவரையில் 57,000 கார்களை உற்பத்தி செய்துள்ளது.

சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலைக்கு 10வது பிறந்தநாள்

பிஎம்டபிள்யூ 1 சீரீஸ், 3 சீரீஸ், க்ரேன் டூரிஸ்மோ, 5 சீரீஸ், 7 சீரீஸ், எக்ஸ்1, எக்ஸ்3, எக்ஸ்5 மற்றும் எக்ஸ்6 மாடல் கார்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. 2016ஆம் ஆண்டு வரை மினி கண்ட்ரிமேன் கார்களும் இங்குதான் தயாரிக்கப்பட்டு வந்தன.

சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலைக்கு 10வது பிறந்தநாள்

இரண்டு அசெம்பிளி லேன்களை கொண்ட இந்த தொழிற்சாலையின் ஒரு ஆண்டு உற்பத்தி திறன் (இரண்டு ஷிப்ஃட்களில்) 11,000 கார்கள் ஆகும்.

சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலைக்கு 10வது பிறந்தநாள்

10 ஆண்டுகள் நிறைவு விழாவில் இது தொடர்பாக பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பாவா கூறுகையில், "சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலை 10ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது பெருமையளிக்கிறது, இந்திய சொகுசு கார் தேவையை சென்னை தொழிற்சாலை வருங்காலங்களில் பெரிய அளவில் பூர்த்தி செய்யப்போகிறது" என்றார்.

சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலைக்கு 10வது பிறந்தநாள்

சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் கார் அசெம்பிளிக்காக பயன்படுத்தப்படும் பாகங்களில் "மேக் இன் இந்தியா" கொள்கையின்படி உள்நாட்டு பாகங்களின் அளவு, 2015ஆம் ஆண்டில் 50 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலைக்கு 10வது பிறந்தநாள்

இந்த தருணத்தை கொண்டாடுவதற்காக அப்போது இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கரை அழைத்து வந்து 5 சீரீஸ் மாடலில் ஒன்றான 530டி கார் ஒன்றை தன் கையால் அசெம்பிள் செய்ய வைத்து பிஎம்டபிள்யூ நிறுவனம் சிறப்பித்திருந்தது நினைவுகூறத்தக்கதாகும்.

சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலைக்கு 10வது பிறந்தநாள்

சென்னையிலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இத்தொழிற்சாலையில் சுமார் 500 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் இத்தொழிற்சாலை முன்னோடியான தொழில்நுட்பங்கள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

English summary
bmw chennai plant completes ten years
Story first published: Saturday, April 1, 2017, 8:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark