போயிங் நிறுவனத்தின் மிகப்பெரிய பயணிகள் விமானம்... வாங்குவதற்கு போட்டா போட்டி!

Written By:

ட்ரீம்லைனருக்கு பிறகு உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது புதிய போயிங் விமானம். போயிங் 777 9எக்ஸ் என்ற அந்த விமானம், இரட்டை எஞ்சின் கொண்ட உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் என்ற பெருமையுடன் வருகிறது.

மேலும், இந்த புதிய விமானத்தின் சிறப்பம்சங்களை பார்த்து, உலகின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனங்களான லூஃப்தான்ஸா, எதிஹாட் போன்றவை ஆர்டர்களை போட்டி போட்டு கொடுத்து வருகின்றன. இந்த விமானத்தின் சிறப்புகளை ஸ்லைடரில் காணலாம்.

 பெரிய இறக்கை

பெரிய இறக்கை

இந்த விமானத்தில் 235 அடி நீளமுடைய மிக பெரிய இறக்கைகள் கொண்டதாக இருக்கும். எனவே, விமான நிலையங்களில் தரையிறங்கும்போது, இந்த விமானத்தின் இறக்கைகள் 12 அடி வரை மடக்கிக் கொள்ளும்.

பயணிகள் எண்ணிக்கை

பயணிகள் எண்ணிக்கை

இந்த விமானத்தில் 400 பயணிகள் வரை செல்ல முடியும். இதன் நேரடி போட்டியாளரான ஏர்பஸ் 350 - 1000 விமானத்தைவிட 34 பயணிகள் கூடுதலாக பயணிக்க முடியும்.

 இடவசதி

இடவசதி

இதுவரை தயாரிக்கப்பட்ட போயிங் விமானங்களிலேயே மிகவும் அகலமான கேபின் கொண்ட விமானமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ட்ரீம்லைனர் விமானத்திற்கு பிறகு மிகப்பெரிய ஜன்னல்கள் கொண்ட விமானமாக இருப்பதுடன், கேபினில் அதிக இடவசதி கொண்டதாகவும் இருக்கும்.

இரட்டை எஞ்சின்

இரட்டை எஞ்சின்

இரட்டை எஞ்சின் கொண்ட விமானங்களிலேயே உலகின் மிகப்பெரிய விமானம் என்பதும் இதன் முக்கிய சிறப்பு. மேலும், எரிபொருள் சிக்கனத்திலும், செயல்திறனிலும் ட்ரீம்லைனர் விமானத்தைவிட சிறப்பாக இருக்குமாம்.

 செலவீனம் குறைவு

செலவீனம் குறைவு

இந்த விமானம் 12 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தையும், 10 சதவீதம் வரை குறைவான இயக்குதல் செலவீனத்தையும் கொண்டதாக போயிங் தெரிவிக்கிறது.

 உற்பத்தி

உற்பத்தி

வரும் 2017ம் ஆண்டு முதல் உற்பத்தி துவங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் டெலிவிரி துவங்கும்போது, நீண்ட தூர விமான வழித்தடங்களில் இந்த விமானம் ஆட்சி புரியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

குவியும் ஆர்டர்

குவியும் ஆர்டர்

லூஃப்தான்ஸா, எதிஹாட் ஏர்வேஸ், கத்தே பசிஃபிக், எமிரேட்ஸ் ஆகிய விமான சேவை நிறுவனங்களிடமிருந்து இந்த விமானத்திற்கு ஏராளமான ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 320 போயிங் 777 9எக்ஸ் விமானங்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

 விலை மதிப்பு

விலை மதிப்பு

ஒரு போயிங் 777 9எக்ஸ் விமானத்தின் விலை 400 மில்லியன் அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 
English summary
The Boeing 777-9x will have a wingspan so big that the tips have to be folded in so it can fit into airports. It will begin production in 2017 and will seat 400 passengers with a superwide cabin and bigger windows than the firm’s Dreamliner 787.
Story first published: Tuesday, September 8, 2015, 11:51 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark