ரோல்ஸ்ராய்ஸ் முதல் புகாட்டி வரை... ஷாரூக்கானின் கார் கலெக்ஷன்!

Written By:

அண்மையில் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் அதிக சம்பளம் வாங்கும் டாப்-10 நடிகர்களில் பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கானும் இடம்பிடித்தார். கோடிகளில் கொழிக்கும் ஷாரூக்கான் சினிமாத் துறையில் பல வர்த்தகங்களிலும் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு கார்கள் என்றால் கொள்ளை பிரியம்.

சினிமா எடுத்து முடிந்து வெற்றி பெற்றுவிட்டால் விலை உயர்ந்த சொகுசு கார்களை தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு வழங்குவதை அவர் வாடிக்கையாக வைத்துள்ளார். பல கோடி மதிப்புடைய கார்களை பிறருக்கு பரிசாக வழங்கும் ஷாரூக்கானிடம் என்னென்ன கார்கள் உள்ளது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மிட்சுபிஷி பஜேரோ

மிட்சுபிஷி பஜேரோ

எஸ்யூவி வகை வாகனங்கள் இல்லாத பாலிவுட் இல்லங்கள் இல்லை எனலாம். குறிப்பாக, எஸ்யூவி வகையில் மிகவும் பிரபலமான மாடல் மிட்சுபிஷி பஜேரோ. இந்த எஸ்யூவியை விரும்பி வாங்கி கராஜில் நிறுத்தி வைத்திருக்கிறார் ஷாரூக்கான். ஆஃப்ரோடு அம்சங்கள் நிறைந்த இந்த எஸ்யூவியை எப்போதாவது பயன்படுத்தினாலும், பராமரிப்பதில் ஷாரூக்கான் தனி கவனம் செலுத்துகிறார்.

 ரோல்ஸ்ராய்ஸ் முதல் புகாட்டி வரை... ஷாரூக்கானின் கார் கலெக்ஷன்!

இந்த எஸ்யூவியில் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த எஸ்யூவியை ரூ.27 லட்சம் மதிப்பில் அவர் வாங்கியுள்ளார். இன்றைக்கும் மிட்சுபிஷி பஜேரோவுக்கு தனி வரவேற்பு இருப்பதால் இதனை கராஜில் வைத்து பராமரித்து வருகிறார் ஷாரூக்கான்.

ஆடி ஏ6 சொகுசு கார்

ஆடி ஏ6 சொகுசு கார்

நடிகர் ஷாரூக்கானிடம் ஏடி ஏ6 சொகுசு செடான் கார் உள்ளது. ஷாரூக்கானின் வாரிசுகளான சுஹானா மற்றும் ஆர்யன் கான் ஆகியோர் இந்த காரைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். மிகுந்த சொகுசு வசதிகள் நிறைந்த கார்.

 ரோல்ஸ்ராய்ஸ் முதல் புகாட்டி வரை... ஷாரூக்கானின் கார் கலெக்ஷன்!

இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. மணிக்கு 232 கிமீ வேகம் வரை செல்லும். ரூ.50 லட்சம் விலை மதிப்பு கொண்டது.

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கன்வெர்ட்டிபிள்

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் கன்வெர்ட்டிபிள்

பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் காரின் கன்வெர்ட்டிபிள் எனப்படும் திறந்து மூடும் கூரை வசதியுடைய கார் மாடலும் ஷாரூக்கானிடம் உள்ளது. ஓட்டுனர் இல்லாமல் தானே ஓட்டிச் செல்வதற்கு ஷாரூக்கான் விரும்பும் மாடல் இது.இந்த காரில் இருக்கும் 4.4 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை படைத்தது.

 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ

பெரும் கோடீஸ்வரர்கள், அரசியல் தலைவர்கள் விரும்பும் கம்பீரமான எஸ்யூவி மாடல் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ. இந்த எஸ்யூவியும் ஷாரூக்கானிடம் உள்ளது. கம்பீரமான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின், நிறைவான வசதிகள் இந்த எஸ்யூவியின் மதிப்பை உயர்த்தும் விஷயங்கள்.

 ரோல்ஸ்ராய்ஸ் முதல் புகாட்டி வரை... ஷாரூக்கானின் கார் கலெக்ஷன்!

இந்த எஸ்யூவியில் 5.7 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 310 பிஎச்பி பவரையும், 443 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஸ்யூவி ரூ.1.29 கோடி விலை மதிப்பு கொண்டது.

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதி உயர் சொகுசு ரக கார் மாடல் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ். இந்த காரில் 760எல்ஐ ப்யூர் எக்ஸலென்ஸ் என்ற மாடலை ஷாரூக்கான் வைத்திருக்கிறார். மிக மிக தாராள இடவசதியுடன், சொகுசான கார் என்பதே இதன் முக்கிய சிறப்பு.

 ரோல்ஸ்ராய்ஸ் முதல் புகாட்டி வரை... ஷாரூக்கானின் கார் கலெக்ஷன்!

இந்த காரில் இருக்கும் 6.0 லிட்டர் வி12 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 544 பிஎச்பி பவரையும், 750 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. மணிக்கு 254 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. இந்த பிரம்மாண்டமான சொகுசு கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 4.3 வினாடிகளில் தொட்டுவிடும்.

பிஎம்டபிள்யூ ஐ8

பிஎம்டபிள்யூ ஐ8

கடந்த ஆண்டு பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் காரையும் ஷாரூக்கான் வாங்கினார். சச்சின் டெண்டுல்கர், ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோரையடுத்து இந்த கார் மாடலை நடிகர் ஷாரூக்கான் வாங்கியுள்ளார். இந்த காரில் மும்பை கடற்கரையோர சாலைகளில் பயணித்து திரும்புவது அவருக்கு ஆறுதல் தரும் விஷயமாகி உள்ளது.

 ரோல்ஸ்ராய்ஸ் முதல் புகாட்டி வரை... ஷாரூக்கானின் கார் கலெக்ஷன்!

உலகின் மிகச் சிறந்த ஹைப்ரிட் ரக ஸ்போர்ட்ஸ் கார் மாடல் பிஎம்டபிள்யூ ஐ8 கார். இந்த காரில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் இணைந்து அதிகபட்சமாக 357 பிஎச்பி பவரை அளிக்கும். 0-100 கிமீ வேகத்தை வெறும் 4.4 வினாடிகளில் எட்டிவிடும். கணக்கீடுகளின்படி, இந்த ஹைப்ரிட் நுட்பம் கொண்ட கார் லிட்டருக்கு 47.4 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. இந்த கார் ரூ.2.30 கோடி விலை மதிப்பு கொண்டது.

பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி

பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி

பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி சொகுசு காரை ஷாரூக்கானின் மனைவி கவுரி கான் பயன்படுத்துகிறார். ரோல்ஸ்ராய்ஸ் கார்களை போன்றே மிக மிக உயர்வகை மாடலாக இருப்பதுடன், தனித்துவமான டிசைன், சொகுசு வசதிகள் ஷாரூக்கான் இந்த காரை விரும்புவதற்கான காரணங்களாகி உள்ளன.

 ரோல்ஸ்ராய்ஸ் முதல் புகாட்டி வரை... ஷாரூக்கானின் கார் கலெக்ஷன்!

இந்த காரில் இருக்கும் 6.0 லிட்டர் டர்போ எஞ்சின் அதிகபட்சமாக 587 பிஎச்பி பவரையும், 720 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0-100 கிமீ வேகத்தை வெறும் 4.4 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 319 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்த கார் மாடல் இது. ரூ.4.10 கோடி விலை மதிப்பு கொண்டது.

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் டிராப்ஹெட் கூபே

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் டிராப்ஹெட் கூபே

திறந்து மூடும் கூரை அமைப்புடைய கார்களை தானே ஓட்டுவது ஷாரூக்கானுக்கு பிடித்த விஷயமாக தெரிந்திருந்தோம். அந்த வகையில், அவரிடம் இருக்கும் மற்றொரு கன்வெர்ட்டிபிள் ரக கார் மாடல் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் டிராப்ஹெட் கூபே.இந்த காரில் 6.8 லிட்டர் வி12 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 460 பிஎச்பி பவரையும், 750 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கஸ்டமைஸ் செய்து வாங்கி வைத்திருக்கிறார் ஷாரூக்கான்.

புகாட்டி வேரான்

புகாட்டி வேரான்

இந்தியாவில் புகாட்டி வேரான் வைத்திருக்கும் பணக்காரர்கள் அரிது. இந்த காரின் விலையும், பராமரிப்பு செலவும் ஒரு பக்கம் இருந்தாலும், ஓட்டுவதற்கான சாலை கட்டமைப்பு வசதிகள் இங்கு குறைவு. ஆனாலும், உலகின் அதிவேக கார் மாடல் என்ற பெருமைக்குரிய புகாட்டி வேரான் கார் ஷாரூக்கானிடம் உள்ளதாக மீடியாக்கள் பரபரத்தன.

 ரோல்ஸ்ராய்ஸ் முதல் புகாட்டி வரை... ஷாரூக்கானின் கார் கலெக்ஷன்!

இந்த காரில் 8.0 லிட்டர் டபிள்யூ16 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 1,200 பிஎச்பி பவரையும், 1,500 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ரூ.15 கோடி விலை மதிப்பு கொண்டது. இந்த காரை வைத்திருக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய உலகின் கோடீஸ்வர கார் பிரியர்களி்ல ஒருவராக இருக்கிறார்.

 ரோல்ஸ்ராய்ஸ் முதல் புகாட்டி வரை... ஷாரூக்கானின் கார் கலெக்ஷன்!

டிசி டிசைன் நிறுவனம் கஸ்டமைஸ் செய்து கொடுத்த பிரம்மாண்டமான இரண்டு மல்டி ஆக்சில் பஸ்கள் ஷாரூக்கானிடம் உள்ளன. ஷாரூக்கான் கார் கலெக்ஷனில் முக்கியமான மாடல்களை மட்டுமே தந்து இருக்கிறோம். வேறு பல சொகுசு கார்களும் அவரது கராஜை அலங்கரித்து வருகின்றன.

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகள்!

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகளின் பிரத்யேக படங்களை கீழே உள்ள படத் தொகுப்பில் காணலாம்.

English summary
Bollywood Actor Sharukhan Car Collection.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark