பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 கோடியை வழங்கும் போஸ்ச் இந்தியா!

பிரதமர் நிவாரண நிதியில் போஸ்ச் இந்தியா நிறுவனம் ரூ.5 கோடியை உடனடியாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனுடன் கூடுதலாக ரூ.45 கோடியை சமூக நல அக்கறையாகவும், அடுத்தடுத்து நாட்டில் அமலுக்கு கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவை சமாளிக்கும் விதமாகவும் வழங்க இந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

bosch-india-commits-rs-50-crore-towards-pm-cares-fund-details

இந்த சமூக பணியின் ஒரு அங்கமாக, தற்சமயம் நாடு முழுவதும் நிலவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தீர்வு காண சில சமூக சேவைகளையும் இந்நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அதன்படி இந்நிறுவனத்தின் பிடாடி தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறது.

bosch-india-commits-rs-50-crore-towards-pm-cares-fund-details

இந்த உணவுகள் இந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் உள்ள 4,000 இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாழும் கலை அறக்கட்டளையின் மூலமாக நாள் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, ஊரடங்கு உத்தரவால் தினந்தோறும் தேவைப்படும் பொருட்களை 1,500 குடும்பங்களுக்கு வழங்கும் பணியையும் இந்நிறுவனம் ஏற்கனவே மேற்கொண்டு வருகிறது.

MOST READ: கொரோனா வைரஸை தில்லாக எதிர்க்கும் இந்தியா... புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கிறது மத்திய அரசு...

bosch-india-commits-rs-50-crore-towards-pm-cares-fund-details

இதுகுறித்து போஸ்ச் க்ரூப் இன் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், போஸ்ச் லிமிடேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான சௌமித்ரா பட்டாச்சார்யா கூறுகையில், போஸ்ச் எப்போதுமே சமூக அக்கறையுடனும் சமூகத்தின் தேவையை நிவர்த்தி செய்யவும் பணியாற்றி வருகிறது. இத்தகைய செயல்பாடுகளுக்காக தன் ஏரியாவை சுற்றியுள்ள அனைத்து நிறுவனங்களுடனும் நட்பு பாராட்டி வருகிறது என கூறினார்.

bosch-india-commits-rs-50-crore-towards-pm-cares-fund-details

தொடர்ந்து பேசிய அவர், இது நாட்டிற்கு சவாலான நேரமாகும். பிரதமர் மோடி அவர்களின் அழைப்பிற்கு இணங்க, இந்த உலக அளவிலான நெருக்கடியான சூழலை எதிர்த்து போராட அரசாங்கத்திற்கு எங்களால் முடிந்த அனைத்து விதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

MOST READ: கொரோனா தடுப்பு பணிகள்... ரூ.3 கோடி மதிப்புடைய உதவிகளை வழங்கும் பிஎம்டபிள்யூ!

bosch-india-commits-rs-50-crore-towards-pm-cares-fund-details

ஜெர்மனை தலைமையிடமாக கொண்ட போஸ்ச் நிறுவனம் கொரோனா வைரஸ் கண்டறிவதற்கான தன்னிச்சை விரைவான சோதனை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. போஸ்ச் விவாலிடிக் பகுப்பாய்வு என அழைக்கபடும் இந்த நடவடிக்கையின் மூலமாக வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறிவதற்கு உதவும் விதமாக மருத்துவர்களுக்கு அலுவலங்கள், மருத்துவமனைகள், ஆய்வகங்கள் மற்றும் சுகாதார மையங்கள் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகின்றன.

bosch-india-commits-rs-50-crore-towards-pm-cares-fund-details

இதற்காக போஸ்ச் சுகாதார தீர்வு மையம், வட அயர்லாந்தை சேர்ந்த ரேண்டாக்ஸ் ஆய்வகங்கள் நிறுவனத்துடன் கூட்டணியை ஏற்படுத்தி கொண்டுள்ளது. இந்த கூட்டணியின் விளைவாக விவாலிடிக் பகுப்பாய்வு கருவிகள் எனப்படும் விரைவான மூலக்கூறு கண்டறியும் சோதனை கருவிகள் போஸ்ச் சுகாதார தீர்வு மையத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

MOST READ: கடைசி ஆசை... விலை உயர்ந்த பென்ஸ் காரில் வைத்து அடக்கம் செய்யப்பட்ட அரசியல்வாதி!

bosch-india-commits-rs-50-crore-towards-pm-cares-fund-details

இந்த சுகாதார தீர்வு மையத்தின் சேர்மன் டாக்டர்.வோல்க்மர் டென்னர் கருத்து தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களை விரைவாக கண்டறிய எங்களுக்கு போஸ்ச் விரைவான கொரோனா சோதனை கருவிகள் தேவைப்படுகின்றன. இதன்மூலம் விரைவாக தொற்று உள்ளவர்களை அடையாளப்படுத்தவும், அவர்கள் இடம்பெயர்வதை தடுக்கவும் முடியும் என்றார்.

bosch-india-commits-rs-50-crore-towards-pm-cares-fund-details

இந்த தானியங்கி விரைவான சோதனை கருவிகள் 6 வாரங்களாக தயாரிப்பு பணியில் உள்ளன. இதன் மூலமாக நோயாளிகளிடம் SARS-CoV-2 கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை 2.30 மணிநேரங்களில் கண்டறிய இயலும். SARS-CoV-2 வைரஸ் உடன் வெவ்வேறு விதமான ஆய்வகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் போஸ்ச் நிறுவனம் 95 சதவீதம் துல்லியமான முடிவுகளை பெற்றுள்ளது.

இந்த சோதனை கருவிகள் தற்சமயம் ஜெர்மனி உள்பட சில ஐரோப்பிய நாடுகளில் மட்டும் தான் கிடைக்கிறது. போஸ்ச் நிறுவனத்தை போன்று மற்ற நிறுவனங்களும் விரைவில் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. போஸ்ச் நிறுவனத்தின் கொரோனா சோதனை கருவிகள் நிச்சயம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உதவும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bosch India Commits Rs 50 Crore Towards PM CARES FUND And Community Welfare Initiatives
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X