மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தை நூதனமாக அசிங்கப்படுத்திய வாடிக்கையாளர்..!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துக்கு எதிராக கேரளாவில் நூதன போராட்டம் ஒன்றை அதன் வாடிக்கையாளர் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

புதிதாக வாங்கிய மெர்சிடிஸ் பென்ஸ் கார் திடீரென செயல் இழந்து நின்றதால் கடுப்பாகிய வாடிக்கையாளர் ஒருவர் அந்நிறுவனத்தை நூதனமான முறையில் அவமானப்படுத்தியுள்ளார்.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவின் நம்பர்-1 சொகுசுக் கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வருகிறது.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ஹோட்டல் நிறுவனரான அனில்குமார் அப்புக்குட்டன் நாயர் என்பவர்.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

ரூ.80 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஈ250 என்ற எஸ்யூவி காரை சமீபத்தில் எர்னாகுளத்தில் உள்ள பென்ஸ் டீலரான ராஜஸ்ரீ மோட்டார்ஸில் வாங்கியுள்ளார்.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

விரைவில் நடக்கவுள்ள தனது மகளின் திருமண பரிசாக அளிக்க இக்காரை ஆசையாய் வாங்கியுள்ளார் அப்புக்குட்டன் நாயர்.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

இந்நிலையில், ஒரு நாள் புதிதாக வாங்கிய பென்ஸ் காரில் திருவனந்தபுரம் நோக்கி பயணப்பட்டுள்ளார் நாயர்.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

எதிர்பாராதவிதமாக புதிதாக வாங்கிய பென்ஸ் ஜிஎல்ஈ250 கார் திடீரென சாலையில் சென்றுகொண்டிருந்தபோது செயல் இழந்து நின்று விட்டது.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

இதற்கும் அந்த புதிய கார் வாங்கப்பட்ட வெறும் 745 கிமீ தூரம் மட்டுமே பயணப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

உடனடியாக இது தொடர்பாக காரை வாங்கிய ராஜஸ்ரீ மோட்டார்ஸை தொடர்பு கொண்டு முறையிட்டுள்ளார் அப்புக்குட்டன் நாயர்.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

புதிதாக வாங்கி 745 கிமீ மட்டுமே ஓடிய நிலையில் இப்படி திடீரென பிரச்சனை ஏற்பட்டதாலும், மகளுக்கு ஒரு ரிப்பேரான காரை பரிசளிக்க விரும்பாததாலும் இந்த காருக்கு மாற்றாக புதித காரை அளிக்கும்படி அந்நிறுவனத்தை கேட்டுக்கொண்டார் நாயர்.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

எனினும், இது தொடர்பாக ராஜஸ்ரீ மோட்டார்ஸ் நிறுவனத்தார், காரின் கியர்பாக்ஸில் ஏற்பட்டுள்ள கோளாரை சரிசெய்து தருவதாகவும் புதிய கார் அளிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

டீலரின் பதிலால் ஏமாற்றமடைந்த நாயர், இப்பிரச்சனையை நுகர்வோர் மன்றத்திற்கு எடுத்துச் செல்ல தீர்மானித்தார். அதற்கு முன்னதாக நூதர போராட்டம் ஒன்றையும் செய்ய தீர்மானித்தார்.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

கோளாறு ஏற்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஈ250 காரை ஒரு ஓபன் டிரக்கில் நிற்கவைத்து, அதில் 'RIP'என்ற ஆங்கில எழுத்துக்களால் எழுதப்பட்ட மலர் வளையங்களை வைத்தார்.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

'RIP' என்றால் Rest In Peace, அதாவது தமிழில் "ஆத்மா சாந்தியடையட்டும்" என்ற பொருள் தருவதாகும். இது இறந்தவர்களுக்காக சொல்லப்படும் வசனம் ஆகும்.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

இதுமட்டுமல்லாமல், "பென்ஸ் ஜிஎல்ஈ 250 கார் 745 கிலோமீட்டரில் இறந்துவிட்டது" என்ற எழுத்துக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட பெரிய ஃபிளக்ஸ் போர்டுகளை அந்த டிரக்கில் மாட்டி வைத்துவிட்டார்.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

இதையெல்லாம் விட அடுத்த அவர் செய்தது தான் சுவாரஸ்யத்தின் உச்சமாகும்.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

இந்த டிரக்கை தான் கார் வாங்கிய மெர்சிடிஸ் டீலரான ராஜஸ்ரீ மோட்டார்ஸ் முன்பாக நிறுத்தி வைத்துள்ளார் அவர்.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

இந்த நூதன போராட்டம் விரைவிலேயே பலராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. சமூக வலைத்தளங்களிலும் வைரலாக இந்த போராட்டம் பரவி வருகிறது.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

அதுமட்டுமில்லாமல் நாயரின் இந்த நூதன போராட்டத்தை உள்ளூர் செய்தி சேனல்களும் செய்தியாக்கி வருகின்றன.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

மதிப்புமிக்க பிராண்டாக விளங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு இந்த நூதன போராட்டம் பெரும் அவப்பெயரை தேடித் தந்துள்ளது.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

இவரின் இந்த நூதன போராட்டம் மெர்சிடிஸ் நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்களும் தங்களது நிலையில் இருந்து உடனடியாக இறங்கி வந்துள்ளனர்.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

பழுதடைந்துள்ள காருக்கு பதிலாக புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஈ250 காரை நாயருக்கு அளிக்கவுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

இது தொடர்பாக நாயரிடம் கேட்டபோது, "போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக புதிய ஜிஎல்ஈ250 காரை அளிக்க பென்ஸ் முன்வந்துள்ளது.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

அதுமட்டுமல்லாமல், புதிய காருக்கான சாலை வரி உள்ளிட்ட ஆன் ரோடு செலவுகள் அனைத்தையும் மெர்சிடிஸ் நிறுவனமே ஏற்கவுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

முன்னதாக ஏற்கெனவே நாயர் போல பலரும் நூதன போராட்டங்களை பிரபல நிறுவனங்களுக்கு எதிராக கையில் எடுத்துள்ளனர்.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஒருவர் தான் வாங்கிய ஸ்கோடா ஆக்டேவியா கார் அடிக்கடி பழுது ஏற்பட்டு நடுவழியில் நின்றுவிடுவதால் விரக்தி அடைந்தார்.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

அவருக்கு புதிதாக மாற்று ஏற்பாடு செய்யாததை கண்டித்து, பரபரப்பான சாலைகளில் கழுதைகளை கொண்டு தன் காரை இழுக்கச் செய்து ஸ்கோடா நிறுவனத்திற்கு எதிரான தனது ஏமாற்றத்தை வெளிக்காட்டினார்.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

இதற்கு முன்னதாக அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இதே போன்ற பிரச்சனை காரணமாக தனது ஜாகுவார் காரை கழுதைகளை வைத்து இழுத்துச் சென்றார்.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

வதோதராவில் ஒருவர் தனது மெர்சிடிஸ் இ-கிளாஸ் வாகனம் தொடர்ந்து சந்தித்து வந்த பிரச்சனையால், இதே போல கழுதைகளை கொண்டு கட்டி இழுத்தார்.

வாடிக்கையாளரிடம் அசிங்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்..!

இதைப்போன்ற பிரச்சனைகளுக்கு வெளிநாடுகளில் உள்ளது போன்ற கடுமையான சட்டங்கள் இங்கும் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே இதற்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதே உண்மை.

Most Read Articles
English summary
Read in Tamil about new Benz collapses in just 745 KMs’ drive. Company promises new car in the wake of rising protest
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X