லம்போர்கினி சூப்பர் காரில் வேலைக்கு வரும் பஸ் டிரைவர்!

By Saravana

சீனாவில் பஸ் டிரைவர் ஒருவர் சூப்பர் கார்களில் பணிக்கு வந்து செல்வது, அந்நாட்டு சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அவ்வளவு பெரிய பணக்காரர் ஏன் பஸ் டிரைவர் வேலைக்கு வர வேண்டும் என்ற விவாதமும் எழுந்திருக்கிறது. கூடுதல் தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

சீன பஸ் டிரைவர்

சீன பஸ் டிரைவர்

வடக்கு சீனாவின் தையூவான் நகரில் 104 என்ற வழித்தட எண் கொண்ட பஸ் டிரைவர்தான் தற்போது அந்த நகரத்திலும், உலக அளவில் இன்டர்நெட்டிலும் திடீர் ஹீரோவாக மாறியிருக்கிறார்.

ஆடியில் வலம்

ஆடியில் வலம்

இவர் தினசரி பணிக்கு வருவது லம்போ மற்றும் ஆடி சூப்பர் கார்களில்தானாம்.

 இரண்டு கார்கள்

இரண்டு கார்கள்

லம்போர்கினி கல்லார்டோ மற்றும் ஆடி ஆர்8 ஸ்போர்ட்ஸ் கார்களை அவர் வைத்திருக்கிறார். பெரும்பாலும் பணிக்கு வருவது லம்போ காரில்தானாம். எப்போதாவது ஆடி ஆர்8 காரை பயன்படுத்துவாராம்.

உறுப்பினர்

உறுப்பினர்

அந்த நகரத்தின் சூப்பர் கார் கிளப்பிலும் இவர் உறுப்பினராக உள்ளார். இவரை பற்றிய பேச்சுதான் தற்போது அந்த நகரத்தின் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது.

டிரைவர் வேலை

டிரைவர் வேலை

இரண்டு சூப்பர் கார்களை வைத்திருப்பவர் எதற்கு பஸ் டிரைவர் வேலைக்கு வர வேண்டும். அவ்வளவு பணம் இருந்தால் வேலையை ராஜினாமா செய்ய வேண்டியதுதானே, வேலை இல்லாத இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாமே," என்று சமூக வலைதளங்களில் இவரைப் பற்றிய விவாதங்கள் சூடுபறக்கின்றன. இவர் பற்றிய ஃபேஸ்புக் பதிவில் 8,000க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதிப்பு

மதிப்பு

இந்த பஸ் டிரைவர் பயன்படுத்தும் லம்போர்கினி கார் 1.40 லட்சம் பவுண்ட் விலை மதிப்பும், ஆடி ஆர்8 கார் 1.20 லட்சம் பவுண்ட் விலை மதிப்பும் கொண்டவை.

திடீர் பணக்காரர்கள்

திடீர் பணக்காரர்கள்

நிலக்கரி சுரங்கங்கள் அதிகம் உள்ள தையூவான் நகரில் ஊழலும், மோசடிகளும் மலிந்து இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கிந்றன. மேலும், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இளைஞர்கள் பலர் குறுக்கு வழியில் கோடிக்கணக்கில் பணம் சேர்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பதில் இல்லை

பதில் இல்லை

இந்த பஸ் டிரைவர் இயற்கையிலேயே பணக்காரரா அல்லது, அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து இதுவரை முறையான தகவல் இல்லை.

Most Read Articles
English summary
The Chinese section of the interweb has recently been buzzing about because of bus driver in the city of Taiyuan in northern China. The reason, the driver drives to work in a Lamborghini.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X