இப்படியெல்லாம் கூட ஒரு வாகனமா? அசத்தி காட்டிய ஜப்பானிய நிறுவனம்!!

சாலை மற்றும் ரெயில்வே ட்ராக் என இரண்டிலும் இயங்கக்கூடிய பேருந்து ஒன்று ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இப்படியெல்லாம் கூடவா ஒரு வாகனமா? அசத்தி காட்டிய ஜப்பானிய நிறுவனம்!!

இவ்வாறான பேருந்தை எங்காவது இதற்கு முன்னர் கேள்விப்பட்டுள்ளீர்களா? நிச்சயமாக நானும் இல்லை. ஏனெனில் பேருந்து ஒன்றை இரயில்கள் இயங்கும் பாதையில் இயங்க வைப்பது என்பது சற்று கடினமான காரியமாகும், செலவு மிகுந்த காரியமாகும்.

இப்படியெல்லாம் கூடவா ஒரு வாகனமா? அசத்தி காட்டிய ஜப்பானிய நிறுவனம்!!

அதுமட்டுமின்றி நம் நாட்டில் தேவைப்படாத ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் ஜப்பானில் சிறிய போக்குவரத்து நிறுவனம் ஒன்று இத்தகைய இரு பயன்பாட்டு பேருத்தை உருவாக்கி கவனத்தை பெற்றுள்ளது.

இப்படியெல்லாம் கூடவா ஒரு வாகனமா? அசத்தி காட்டிய ஜப்பானிய நிறுவனம்!!

இந்த பேருந்துகளை தயாரிக்க விரைவில் துவங்கவுள்ள இந்த ஜப்பான் நிறுவனம் 23 பயணிகள் அமரக்கூடிய வழக்கமான அதன் பேருந்தையே மாடிஃபை செய்துள்ளது. இந்த மாடிஃபை பேருந்து ஜப்பான், டோக்குஷிமா மாகாணத்தில் உள்ள அஸா கடற்கரை பகுதியில் சோதனை செய்யப்பட்டுள்ளது.

Source: Asatetu

இப்படியெல்லாம் கூடவா ஒரு வாகனமா? அசத்தி காட்டிய ஜப்பானிய நிறுவனம்!!

பொத்தான் ஒன்றை அழுத்துவதின் மூலம் பேருந்து-மோடில் இருந்து இரயில்-மோடிற்கு இந்த பேருந்து மாறிவிடுமாம். இரயில் டிராக்கிற்கான சக்கரங்கள் பேருந்தின் அடிப்பகுதியில் இருந்து வெளிவர 15 நிமிடங்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியெல்லாம் கூடவா ஒரு வாகனமா? அசத்தி காட்டிய ஜப்பானிய நிறுவனம்!!

வெளிவரும் ஆறு சக்கரங்கள் பேருந்தின் மற்ற சக்கரங்களை காட்டிலும் அளவில் சிறியவைகளாக உள்ளன. பின்பக்கத்தில் இரு ரப்பர் டயர்கள் உள்ளடங்கும் இந்த 6 சிறிய சக்கரங்களின் உதவியுடன் இரயில்வே டிராக்கில் இந்த பேருந்தில் அதிகப்பட்சமாக மணிக்கு 30கிமீ வேகத்தில் இயக்க முடியும் என கூறப்படுகிறது. இது மிகவும் குறைவு.

இப்படியெல்லாம் கூடவா ஒரு வாகனமா? அசத்தி காட்டிய ஜப்பானிய நிறுவனம்!!

ஆனால் எரிபொருளை 75 சதவீதம் குறைப்பது மட்டுமில்லாமல் டிராக் பயன்பாடு மற்ற பாகங்களை தொடர்ந்து பராமரிப்பதற்கு ஆகும் செலவையும் குறைக்கும். சுற்றுலா பயணிகளை கவரும் அதேசமயம் உள்ளூர்வாசிகளுக்கு உதவிகரமானதாகவும் இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியெல்லாம் கூடவா ஒரு வாகனமா? அசத்தி காட்டிய ஜப்பானிய நிறுவனம்!!

முன்னதாக கடந்த டிசம்பரிலும் ஜப்பானில் முதன்முறையாக இந்த இரட்டை-பயன்பாடு பேருந்து சோதனை செய்யப்பட்டு இருந்தது. சாலையில் இருந்து இரயில் டிராக்கின் மீது பேருந்து ஏறுவதற்கு ஏற்ப ஜப்பானில் அஸா கடற்கரை இரயில்வே பகுதியில் ஒரு பகுதியை இவ்வாறு உருவாக்கி உள்ளனர்.

இப்படியெல்லாம் கூடவா ஒரு வாகனமா? அசத்தி காட்டிய ஜப்பானிய நிறுவனம்!!

இதன் பிறகு அனைத்தும் சரியாக சென்றால், இந்த பொது போக்குவரத்து பயன்பாட்டு வாகனம் விரைவில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டியில் காட்சிப்படுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளதாம்.

Most Read Articles

English summary
Bus in Japan can turn into a small rail coach and run on train tracks, may debut during Tokyo Olympics.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X