வீடு வாங்கினால் ரோல்ஸ்ராய்ஸ் கார் இலவசம்

அமெரிக்காவில் விற்பனையில் இருக்கும் ஒரு ஆடம்பர வீட்டை வாங்குபவருக்கு ரோல்ஸ்ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என அந்த வீட்டை கட்டிய ரியல் எஸ்டேட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒரு பொருள் வாங்கினால் இன்னொன்று இலவசம் என்ற கலாச்சாரம் எங்கும் நிறைந்துவிட்டது. அதிலும், மார்க்கெட் நிலவரத்தை பொறுத்து இந்த இலவச சலுகையின் மதிப்பு உயரும். அதுபோன்று, ஒரு அறிவிப்பை அமெரிக்க ரியல் எஸ்டேட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Rolls Royce Phantom

அமெரிக்காவில் பொருளாதார சுணக்க நிலை காரணமாக கட்டுமானத் தொழில் மந்தமாக இருந்து வருகிறது. இதனால், புதிதாக கட்டப்பட்ட வீடுகளை விற்க முடியாமல் கட்டுமான நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன.

இதேபோன்று, புளோரிடாவில் அமைக்கப்பட்ட ஆடம்பர வீடு ஒன்றை விற்க முடியாமல் அந்த வீட்டை கட்டிய கட்டுமான நிறுவனம் தவித்து வருகிறது.

இந்த நிலையில், அந்த பிரம்மாண்ட ஆடம்பர வீட்டை விற்பதற்கு அந்த நிறுவனம் தற்போது இலவசத்தை அறிவித்துள்ளது. ஆம், வீட்டை வாங்குபவருக்கு 5 லட்சம் டாலர் மதிப்புடைய ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கார் இலவசமாக வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

விற்பனைக்கு வந்திருக்கும் வீடு தண்ணீருக்கு நடுவில் மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. 7 அறைகள், 2 சமையலறைகள், உடற்பயிற்சி கூடம் என சகல வசதிகளுடன் 16,000 சதுர அடி பரப்பு கொண்ட இந்த வீட்டிற்கு 12.75 மில்லியன் டாலர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
The house in Boca Raton, Florida, is the largest in that area but realtors are having a tough time selling the home, so they are offering the unique "freebie" to help drive the sale.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X