சீனாவில் உலகின் மிகப்பெரிய பேட்டரி ஃபேக்டரியை துவக்கியது பிஒய்டி நிறுவனம்

சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் தங்களது 24 ஜிகா வாட்ஸ் ஹவர் திறன் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய பேட்டரி தொழிற்சாலையை துவக்கியுள்ளது. இந்த தொழிற்சாலை 2020ல் 60 ஜிகா வாட்ஸ் ஹவர் திறன் கொண்ட தொழிற்சாலைய

By Balasubramanian

சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனம் தங்களது 24 ஜிகா வாட்ஸ் ஹவர் திறன் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய பேட்டரி தொழிற்சாலையை துவக்கியுள்ளது. இந்த தொழிற்சாலை 2020ல் 60 ஜிகா வாட்ஸ் ஹவர் திறன் கொண்ட தொழிற்சாலையாக மாறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உலகின் மிகப்பெரிய பேட்டரி ஃபேக்டரியை துவக்கியது பிஒய்டி நிறுவனம்

உயர்தர தொழிற்நுட்பத்துடன் துவங்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை 140 கால்பந்து மைதானத்திற்கு சமமான பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் கட்டுமான வேலைகள் இன்னும் முடியவில்லை. 2019ம் ஆண்டு பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவில் உலகின் மிகப்பெரிய பேட்டரி ஃபேக்டரியை துவக்கியது பிஒய்டி நிறுவனம்

அதன் பின் இது தான் உலகின் பெரிய பேட்டரி தொழிற்சாலையாக இருக்கும். பிஒய்டி நிறுவனம் சீனாவில் ஏற்கனவே இரண்டு தொழிற்சாலைகளை நிறுவியுள்ளது. தற்போது மூன்றாவதாக இந்த தொழிற்சாலையை நிறுவியுள்ளது.

சீனாவில் உலகின் மிகப்பெரிய பேட்டரி ஃபேக்டரியை துவக்கியது பிஒய்டி நிறுவனம்

இது குறித்து அந்நிறுவன தலைவர் வாங் சுவாங்பூ கூறுகையில் :" பல்வேறு நாடுகளில் கம்பஷன் இன்ஜினை நிறுத்தி திட்டமிட்டுள்ளனர். கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் பேட்டரி கார்களுக்கு மாறி வருகின்றனர். இதனால் எதிர்காலத்தில் பேட்டரியின் தேவை அதிகமாக இருக்கும் இதை கருத்தில் கொண்டு இந்த தொழிற்சாலை துவங்க திட்டமிட்டுள்ளோம்.

சீனாவில் உலகின் மிகப்பெரிய பேட்டரி ஃபேக்டரியை துவக்கியது பிஒய்டி நிறுவனம்

மேலும் சீனாவில் 2030க்குள் அனைத்து கார்களையும் எலெக்ட்ரிக் கார்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இதனால் அதிக பேட்டரி தேவை சமாளிக்கும் அளவிற்கு எங்களது உற்பத்தி இருக்கும். " என கூறினார்.

சீனாவில் உலகின் மிகப்பெரிய பேட்டரி ஃபேக்டரியை துவக்கியது பிஒய்டி நிறுவனம்

இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் காற்று மாசை மட்டும் கட்டுப்படுத்துவதில்லை, அதே நேரத்தில் அதிக உயர்தர தொழிற்நுட்பத்தை புகுத்தவும் பயன்படுகிறது. இந்தியாவிலேயே சமீபத்தில் முதல் ஸ்மார்ட் ஸ்கூட்டராக ஏத்தர் ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உலகின் மிகப்பெரிய பேட்டரி ஃபேக்டரியை துவக்கியது பிஒய்டி நிறுவனம்

இந்த தொழிற்சாலை பல உயர்ரக தொழிற்நுட்ப வசதியுடன் தயாரிக்கப்படுகிறது. இதில் மெனுபேச்சரிக் எக்ஸிக்யூஷன் சிஸ்டம், ஸ்மார்ட் லாகிஸ்டிக்ஸ், டிரைவர் இல்லாமல் ஆட்டோமெட்டிக் கைடென்ஸ் உடன் இயங்கும் வாகனம். இன்பர்மெஷன் இன்டகரேஷன் உடன் செயல்படுகிறது.

சீனாவில் உலகின் மிகப்பெரிய பேட்டரி ஃபேக்டரியை துவக்கியது பிஒய்டி நிறுவனம்

மேலும் இந்நிறுவனம் தற்போது தங்களது தயாரிப்பான பேட்டரியில் ஒரு புதிய தொழிற்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் ஒவ்வொரு பேட்டரிக்கும் தனித்தனி கோடு கொடுக்கப்படுகிறது.

சீனாவில் உலகின் மிகப்பெரிய பேட்டரி ஃபேக்டரியை துவக்கியது பிஒய்டி நிறுவனம்

இப்பொழுது நம் பேட்டரியில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் செல்போனில் அந்த பேட்டரியில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் போதும் நம் பேட்டரியில் உள்ள பிரச்னைகளுடன் இந்த தகவல் அந்நிறுவனத்திற்கு சென்று அதற்கான தீர்வு கிடைக்கும்.

சீனாவில் உலகின் மிகப்பெரிய பேட்டரி ஃபேக்டரியை துவக்கியது பிஒய்டி நிறுவனம்

இந்த க்யூ ஆர் கோடிலேயே பேட்டரியின் தயாரிப்பு தகவல்கள், மற்றும் பேட்டரி உள்ள நிலை குறித்த தொழிற்நுட்ப நிலை தகவல்கள் இருக்கும்.

சீனாவில் உலகின் மிகப்பெரிய பேட்டரி ஃபேக்டரியை துவக்கியது பிஒய்டி நிறுவனம்

மேலும் இந்நிறுவனம் 3சி பேட்டரி, பவர் பேட்டரி, சோலார் பேட்டரி, மற்றும் எனர்ஜி ஸ்டோரேஜ் பேட்டரி, பெரிய எக்கோ சிஸ்டத்திற்காக பயன்படுத்தப்படும் பேட்டரி, ரயில் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் பேட்டரி, சோலார் பவர் ஸ்டேஷன்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி என பல வகையான பேட்டரிகளை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

சீனாவில் உலகின் மிகப்பெரிய பேட்டரி ஃபேக்டரியை துவக்கியது பிஒய்டி நிறுவனம்

கார் பேட்டரியில் ஏற்கனவ சில இந்திய நிறுவனங்களுடன் இந்த நிறுவனம் ஒப்பந்தமிட்டுள்ளது. அதன் மூலம் இந்த நிறுவனத்தின் பேட்டரிகள் மூலம் கார் தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
China's BYD launches world's biggest battery factory.Read in Tamil
Story first published: Thursday, June 28, 2018, 19:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X