ஜெர்மனியின் கார்பிளேன்... அடுத்து ஒரு புதிய பறக்கும் கார்!

By Saravana Rajan

டெரஃபியூஜியா, ஏரோமொபில் போன்ற பறக்கும் கார்கள் குறித்த தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தளத்தில் தொடர்ச்சியாக படித்து வருகிறீர்கள். இந்த திட்டங்களின் வேகம் விரைவில் பறக்கும் காரை நனவாக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த வரிசையில், தற்போது புதிய பறக்கும் கார் ஒன்று இணைந்திருக்கிறது. ஜெர்மனியில் தயாராகி வரும் இந்த புதிய பறக்கும் காருக்கு கார்பிளைன் என்று பெயரில் அழைக்கின்றனர். ஐரோப்பிய யூனியனின் நிதி உதவி திட்டத்தில் உருவாகி வரும், இந்த புதிய பறக்கும் கார், இன்னும் இரு ஆண்டுகளில் வர்த்தக ரீதியில் வர இருப்பதாக கணிக்கப்படுகிறது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த கார்பிளேனில் இரண்டு பேர் பயணிக்க முடியும். பிற பறக்கும் கார்கள் போன்று அல்லாமல், இந்த காரின் இருக்கைகள் நடுப்பகுதியில் மடங்கி அடங்குவதால், சாலையில் வரும் பிற வாகனங்களை எளிதாக கணித்து ஓட்டுவதற்கும், போக்குவரத்துக்கு இடைஞ்சல் தராது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சில நொடிகளில் விமானம்

சில நொடிகளில் விமானம்

இந்த காரின் இறக்கைகள் மற்றும் வால் பகுதி காரின் நடுப்பகுதியில் அடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பறப்பதற்கான பொத்தானை அழுத்தினால், 15 நொடுகளில் குட்டி விமானமாக மாறிவிடுகிறது.

ஓடுபாதை

ஓடுபாதை

இந்த கார் தரையிலிருந்து எழும்பி வானில் பறப்பதற்கு 300 அடி நீளமுடைய சாலை அல்லது ஓடுபாதை தேவைப்படும்.

 இலகு எடை

இலகு எடை

இந்த கார்பிளேன் வெறும் 453 கிலோ மட்டுமே எடை கொண்டது. மேலும், சாதாரண கார் பார்க்கிங் பகுதியிலேயே அடங்கிவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த கார்பிளேனில் 151 எச்பி பவரை அளிக்கும் 2 சிலிண்டர் பிஸ்டன் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின்கள் காரின் பின் சக்கரங்களையும், பறக்கும்போது புரொப்பல்லர்களுக்கும் சக்தியை வழங்கும்.

அதிகபட்ச வேகம்

அதிகபட்ச வேகம்

தரையில் ஓடும்போது அதிகபட்சமாக மணிக்கு 175 கிமீ வேகத்திலும், பறக்கும்போது 222 கிமீ வேகம் வரையிலும் பறக்கும். இந்த கார்பிளேன் மணிக்கு 201 கிமீ க்ரூஸ் வேகத்தில் பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு சான்று

பாதுகாப்பு சான்று

ஐரோப்பிய விமான பாதுகாப்பு அமைப்பின் சான்றினை இந்த விமானம் பெற்றுவிட்டது. மேலும், தரையில் இயங்கும் வாகனங்களுக்கான யூரோ-6 மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டதாகவும், இந்த விமானம் சான்றளிக்கப்பட்டிருக்கிறது.

விரைவில் நனவு

விரைவில் நனவு

வரும் 2017ல் இந்த விமானம் வர்த்தக ரீதியிலான அறிமுகத்துக்கு தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், இந்த கார்பிளேனுக்கு அமெரிக்க விமான பாதுகாப்பு அமைப்பு இந்த விமானத்திற்கு தகுதிச் சான்று வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கார்பிளேனின் போட்டியாளர்கள்

கார்பிளேனின் போட்டியாளர்கள்

Most Read Articles
English summary
The Carplane is a bimodal vehicle for individual road and air transport. It will be the world's first regularly-certified aircraft to conform to road particle emissions standards.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X