இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்ற சிறந்த சஸ்பென்ஷன் அமைப்புடைய கார்கள்!

Written By:

கார் வாங்குவோரில் பெரும்பாலானோர் அதன் எஞ்சின் பவர், மைலேஜ், விலை மற்றும் வசதிகளை பார்த்து வாங்குவதை கண்டிருக்கிறோம். ஆனால், இதையெல்லாம் தாண்டி, உங்களது ஒவ்வொரு பயணமும் இனிதாகவும், பாதுகாப்பானதாகவும் அமைவதற்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த விஷயம், அந்த காரின் சஸ்பென்ஷன் அமைப்பு.

சொகுசான பயணத்திற்கு என்றில்லை, சிறப்பான கையாளுமையுடன் பாதுகாப்பானதாகவும் உங்களது பயணங்களை மாற்றுவதில் கார் சஸ்பென்ஷன் அமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அவ்வாறு, சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்புடைய வெவ்வேறு ரக கார்களை உங்களது கவனத்திற்கு முன் வைக்கிறோம்.

01. டாடா டியாகோ

01. டாடா டியாகோ

சமீபத்தில் மார்க்கெட்டில் அறிமுகமான புத்தம் புதிய டாடா டியாகோ கார் மிகச்சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்புடையது. இதனால், எந்தவொரு சாலையிலும் இனிமையான பயணத்தையும், சிறப்பான கையாளுமையையும் வழங்குகிறது. இதன் ஸ்டீயரிங் அமைப்பும் சிறப்பாக இருப்பதால், இந்திய சாலை நிலைகளுக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது.

02. ரெனோ டஸ்ட்டர்

02. ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியும் மிகச்சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பு கொண்டது. அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பு காரணமாக இந்திய சாலைநிலைகளை எளிதாக எதிர்கொள்ளும் மாடலாக கூறலாம். இதன் ரகத்தில் ஹூண்டாய் க்ரெட்டாவும் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்புடைய மாடல்.

 03. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

03. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ சிறப்பாக மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்புடையது. அத்துடன், தற்போது ஆன்டி ரோல் எனப்படும் கார் கவிழாத வகையில் செலுத்தும் தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டிருப்பதால், சிறப்பான கையாளுமையையும், சொகுசையும் வழங்குகிறது. குறிப்பாக, அதிவேகத்தில் முந்தைய மாடலைவிட நம்பிக்கையாக ஓட்ட முடிவதற்கு காரணம் இதன் சஸ்பென்ஷன் அமைப்பு மிக முக்கிய காரணமாக கூறலாம்.

 04. மாருதி ஸ்விஃப்ட்

04. மாருதி ஸ்விஃப்ட்

ஹேட்ச்பேக் கார்களிலேயே கையாளுமைக்கு பெயர் பெற்றது மாருதி ஸ்விஃப்ட். நெடுஞ்சாலைகளில் செல்லும் ஸ்விஃப்ட் கார்கள் அதிரடியாக கட் அடித்து செல்வதற்கு, அதன் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பும், ஸ்டீயரிங் வீலும் முக்கிய காரணம். இதன் ரகத்தில் ஃபோர்டு ஃபிகோவும் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்புடைய மாடல்.

05. ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

05. ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

மிட்சைஸ் செடான் கார்களில் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார் மிகச்சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பு கொண்டது. இதனால், கையாளுமை, நிலைத்தன்மை, சொகுசு என அனைத்திலும் ஓட்டுபவருக்கும், பயணிப்பவருக்கும் முழு திருப்தியை வழங்குகிறது. இதேபோன்று, இந்த செக்மென்ட்டில், ஃபியட் லீனியா சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்புடையது.

06. ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர்

06. ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர்

ஃபோர்டு ஆஸ்பயர் காரின் சஸ்பென்ஷன் அமைப்பும் மிகச்சிறப்பானது. இதனால், அதிவேகங்களிலும், சீராக இல்லாத சாலைகளிலும் கூட சிறப்பான கையாளுமையையும், சொகுசையும் வழங்குகிறது. ஸ்டீயரிங் அமைப்பும் துணைபுரிகிறது. ஹோண்டா அமேஸ் காரும் சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பு கொண்டது.

 07. ஃபோக்ஸ்வேகன் போலோ

07. ஃபோக்ஸ்வேகன் போலோ

ஃபோக்ஸ்வேகன் போலோ ஓட்டுனர்களின் கார் என்று செல்லமாக குறிப்பிடுவது உங்களுக்கு தெரிந்திருக்கும். இதற்கு மிக முக்கிய காரணம், இந்த காரின் சிறந்த சஸ்பென்ஷன் அமைப்புதான். ஓட்டுனருக்கு பாதுகாப்பாகவும், நம்பிக்கையான உணர்வை தருவதில் ஃபோக்ஸ்வேகன் போலோ சிறந்த மாடலாக விளங்குகிறது. ஃபியட் புன்ட்டோ காரும் மிகச்சிறப்பான சஸ்பென்ஷன் கொண்டது.

08. மாருதி டிசையர்

08. மாருதி டிசையர்

டிசையர் காரின் பின்புறத் தோற்றம் பிடிக்கவில்லை, லேசாக உரசினாலே உடைந்துபோகும் பாடி பேனல்கள் என சிலர் குறை சொல்வதில் உண்மை இல்லாமலில்லை. ஆனால், இதன் சஸ்பென்ஷன் மிகவும் சிறப்பானது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இந்த காரின் வெற்றிக்கு மைலேஜ், பராமரிப்பு செலவு குறைவு என்பதோடு, சிறந்த சஸ்பென்ஷன் அமைப்பை கொண்டிருக்கிறது. நடுத்தர வேகத்தில் இந்த கார் மிகவும் நம்பிக்கையான ஓட்டுதல் அனுபவத்தை வழங்குவதற்கு சஸ்பென்ஷன் அமைப்பும் மிக முக்கிய காரணம்.

சொகுசு கார்களும், அதன் மலைக்க வைக்கும் இன்ஸ்யூரன்ஸ் தொகையும்...!!

சொகுசு கார்களும், அதன் மலைக்க வைக்கும் இன்ஸ்யூரன்ஸ் தொகையும்...!!

 
English summary
Cars With Best Suspension Setup In India.
Story first published: Friday, June 17, 2016, 12:56 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark