இந்தியாவிலேயே ஒரே பெண் மோட்டார்சைக்கிள் கோச் இவராக இருக்கலாம்..!!

Written By:

மோட்டார் சைக்கிள்களை ஓட்டவும், நெடுந்தூர பைக் பயணங்களை ஏற்பாடு செய்து கொடுக்கும் நிறுவனத்தில் பெண்களுக்காக பிரிவில் ஒரே ஒருவராக தன்னந்தனியாக பணியாற்றும் சேத்னா நாகேஷ் பண்டிட் என்ற 24 வயது பெண், மோட்டார் சைக்கிள் ரைடிங் என்பது பெண்களுக்கான தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்கிறார்.

பெண் ரைடர்களை உருவாக்கி வரும் சேத்னா நாகேஷ்..!

மும்பையைச் சேர்ந்த 24 வயதான சேத்னா நாகேஷ் பண்டிட் நாம் அன்றாடம் பார்க்கக்கூடிய வேலை பார்ப்பவர்களுள் ஒருவர் அல்ல. மாறாக இவர் பெண்கள் அதிகம் ஈடுபடாத ஒரு துறையில் இன்று கோலோய்ச்சி வருகிறார்.

பெண் ரைடர்களை உருவாக்கி வரும் சேத்னா நாகேஷ்..!

சேத்னா நாகேஷ்-ம் ஒரு சராசரி இந்தியப் பெண் போல கடந்த மூன்று ஆண்டுகளாக ஐடி துறையில் பணியாற்றி வந்திருக்கிறார். எனினும் அதில் அவருடைய மனது அதிகம் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை.

பெண் ரைடர்களை உருவாக்கி வரும் சேத்னா நாகேஷ்..!

இதன் காரணமாக ஐடி துறையில் இருந்து வெளியேறிய சேத்னாவுக்கு, அடுத்து கட்டம் குறித்து சிந்தித்த போது தான், தனக்கு பிடித்தமான மோட்டார்சைக்கிள் ரைடிங் துறையின் மீது கவனம் சென்றுள்ளது.

பெண் ரைடர்களை உருவாக்கி வரும் சேத்னா நாகேஷ்..!

இன்று மேக்னா மும்பையில் உள்ள "என்ஃபீல்டு ரைடர்ஸ்" என்ற நிறுவனத்தில் மோட்டார் சைக்கிள் ரைடிங் பயிற்றுனராக (கோச்) பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனம் மோட்டார் சைக்கிள் ரைடர்களுக்கான டூர்களை ஏற்பாடு செய்து தருகிறது.

பெண் ரைடர்களை உருவாக்கி வரும் சேத்னா நாகேஷ்..!

இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஒரே பெண் கோச், சேத்னா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பெண்களுக்கு என்ஃபீல்டு போன்ற ஆகாஜுபாகுவான மோட்டார் சைக்கிள்களின் ரைடிங் கற்றுத்தருவது, பெண் பைக் ரைடர்களுக்கான டூர் ஏற்பாடு செய்து தருவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுவருகிறார். (டூர்களின் போது இவரே முன்னின்று அந்த குழுவையும் வழிநடத்துகிறார்)

பெண் ரைடர்களை உருவாக்கி வரும் சேத்னா நாகேஷ்..!

அதிக எடை கொண்ட என்ஃபீல்டு பைக்குகளை ஸ்டேண்ட் போட சில ஆண்களே சிரமப்படுவதை பார்திருப்போம், அவ்வளவு முரட்டுத்தனம் கொண்ட என்ஃபீல்டு பைக்குகளை ஓட்டுவதும், மேலும் நாட்கணக்கில் சாலைபபயணம் செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல.

பெண் ரைடர்களை உருவாக்கி வரும் சேத்னா நாகேஷ்..!

இது தொடர்பாக சேத்னா கூறுகையில், தான் கல்லூரியில் படிக்கும் சமயத்தில் தன் நண்பர் ஒருவர் மூலம் மோட்டார்சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டதாகவும், அப்போது முதலே மோட்டார்சைக்கிள் மீது காதல் கொண்டதாகவும் கூறினார்.

பெண் ரைடர்களை உருவாக்கி வரும் சேத்னா நாகேஷ்..!

மோட்டார்சைக்கிள் ஓட்டுவதை தற்போது முழு நேரத் தொழிலாக கொண்டிருக்கும் சேத்னா மோட்டார்சைக்கிள் டர்ட் பந்தயத்திலும் ஈடுபாடு கொண்டிருக்கிறார். 2 பந்தயங்களிலும் இவர் பங்கேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் ரைடர்களை உருவாக்கி வரும் சேத்னா நாகேஷ்..!

தற்போது பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் கற்றுக்கொடுத்து அவர்களையும் ரைடர்களாக மாற்றி வரும் சேத்னா, தனக்கு விருப்பமான இந்த பணியில் மனமகிழ்வுடன் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.

பெண் ரைடர்களை உருவாக்கி வரும் சேத்னா நாகேஷ்..!

மேலும் மோட்டார்சைக்கிள் ஓட்டுவது பெண்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்று கூறும் சேத்னா ஒருமுறை மாறுபட்ட கால் உயர அளவு கொண்ட இளம் பெண் ஒருவருக்கு மோட்டார்சைக்கிள் ரைடிங் கற்றுக்கொடுத்ததை பெருமையாக கருதுவதாக தெரிவித்தார்.

English summary
read in tAamil about meet chetna nagesh - she may be india's first motorcycle coach
Story first published: Saturday, May 20, 2017, 11:53 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark