3 வயது மகள் செய்த காரியம்... ரூ.8 லட்சத்தை பறிகொடுத்த பெற்றோர்... மேட்டர் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

3 வயது மகள் செய்த காரியத்தால், 8 லட்ச ரூபாயை பெற்றோர் இழந்துள்ளனர். இதுகுறித்த அதிர வைக்கும் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

3 வயது மகள் செய்த காரியம்... ரூ.8 லட்சத்தை பறிகொடுத்த பெற்றோர்... மேட்டர் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

குழந்தைகள் எப்போது என்ன செய்வார்கள்? என்பதை யாராலும் கணிக்க முடியாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எந்நேரமும் கவனித்து கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேவையில்லாத பிரச்னைகளை சந்திக்க நேரிடும். ஆனால் ஒரு சில பெற்றோர்கள் சில சமயங்களில் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதில் அலட்சியமாக இருந்து விடுகின்றனர்.

3 வயது மகள் செய்த காரியம்... ரூ.8 லட்சத்தை பறிகொடுத்த பெற்றோர்... மேட்டர் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

அப்படி அலட்சியமாக இருந்த தம்பதியினர், அதற்குரிய விலையை தற்போது கொடுத்துள்ளனர். சீனாவின் குய்லின் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குய்லின் பகுதியை சேர்ந்த தம்பதி சமீபத்தில் தங்களது மூன்று வயது மகளை கார் ஷோரூம் ஒன்றுக்கு அழைத்து சென்றனர். அது சாதாரண கார் ஷோரூம் கிடையாது. உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஆடி நிறுவனத்தின் ஷோரூம்.

3 வயது மகள் செய்த காரியம்... ரூ.8 லட்சத்தை பறிகொடுத்த பெற்றோர்... மேட்டர் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

ஆடி நிறுவனம் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். விலை உயர்ந்த லக்ஸரி கார்களை ஆடி விற்பனை செய்து வருகிறது. எனவே வாடிக்கையாளர்கள் பார்வையிடுவதற்காக ஆடி நிறுவன ஷோரூம்களில் சொகுசு கார்கள், காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். இதன்படி குய்லின் நகரை சேர்ந்த தம்பதியும் ஆடி ஷோரூமில் இருந்த கார்களை பார்வையிட்டு கொண்டிருந்தனர்.

3 வயது மகள் செய்த காரியம்... ரூ.8 லட்சத்தை பறிகொடுத்த பெற்றோர்... மேட்டர் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

ஆடி கார்களை பார்த்த பரவசத்தில், தங்களது 3 வயது மகளை அவர்கள் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால் அந்த குழந்தை ஷோரூமில் தனியாக சுற்றி திரிந்து கொண்டிருந்தது. ஆனால் அந்த குழந்தை, ஆடி நிறுவனத்தின் பகட்டான கார்களை பார்த்து ரசிப்பதுடன் நிற்கவில்லை. அதற்கு மாறாக அந்த குழந்தை செய்த காரியம், அதன் பெற்றோருக்கு சிக்கலை உண்டாக்கியுள்ளது.

3 வயது மகள் செய்த காரியம்... ரூ.8 லட்சத்தை பறிகொடுத்த பெற்றோர்... மேட்டர் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

பெற்றோருக்கு தெரியாமல், கையில் சிறிய கல்லை அந்த குழந்தை வைத்திருந்தது. பெற்றோர் கவனிக்காத காரணத்தால் கிடைத்த சுதந்திரத்தை பயன்படுத்தி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புத்தம் புதிய கார்களை, அந்த குழந்தை ஸ்கிராட்ச் செய்து விட்டது. சுமார் 10 கார்களை அந்த குழந்தை ஸ்கிராட்ச் செய்துள்ளது.

3 வயது மகள் செய்த காரியம்... ரூ.8 லட்சத்தை பறிகொடுத்த பெற்றோர்... மேட்டர் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

அதுவும் பார்த்த உடனேயே கண்டுபிடித்து விடக்கூடிய வகையில் கார்களில் ஸ்கிராட்ச் ஏற்பட்டிருந்தது. சற்று நேரத்திற்கு பின்னர்தான் பெற்றோருக்கும், ஷோரூம் ஊழியர்களுக்கும் இந்த விஷயம் தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கார் டீலர் தரப்பினர், 2 லட்சம் யுவான்களை, அதாவது சுமார் 29 ஆயிரம் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என அக்குழந்தையின் பெற்றோரிடம் வலியுறுத்தினர்.

3 வயது மகள் செய்த காரியம்... ரூ.8 லட்சத்தை பறிகொடுத்த பெற்றோர்... மேட்டர் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 22 லட்ச ரூபாய். இது மிகப்பெரிய தொகை என்பதால், அதனை செலுத்த முடியாது என அந்த குழந்தையின் பெற்றோர் கூறி விட்டனர். இதனால் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றது. குழந்தை கல்லை வைத்து கீறியதால், கார்கள் சேதமடைந்திருப்பதாக, டீலர் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

3 வயது மகள் செய்த காரியம்... ரூ.8 லட்சத்தை பறிகொடுத்த பெற்றோர்... மேட்டர் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

பெயிண்ட் அடித்து ஸ்கிராட்ச்களை மறைத்தாலும், அதனை புதிய கார் என விற்பனை செய்ய முடியாது என்று டீலர் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இதன் காரணமாக கார்களின் விலையை குறைக்க நேரிடும் எனவும், அதன் விளைவாக நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்படும் எனவும் நீதிமன்றத்தில் வாதம் செய்யப்பட்டது.

3 வயது மகள் செய்த காரியம்... ரூ.8 லட்சத்தை பறிகொடுத்த பெற்றோர்... மேட்டர் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

அதையும் மீறி கார்களை விற்பனை செய்தால், வாடிக்கையாளர்கள் அதனை கண்டுபிடித்து விடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், எனவே மோசடி நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் கார் டீலர் தரப்பில் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இறுதியில் கார் டீலர், பெற்றோர் என இரு தரப்பினரும் சமரசம் செய்து கொள்வது என முடிவெடுத்தனர்.

3 வயது மகள் செய்த காரியம்... ரூ.8 லட்சத்தை பறிகொடுத்த பெற்றோர்... மேட்டர் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

இதன்படி 70 ஆயிரம் யுவான்களை வழங்க வேண்டும் என கார் டீலர் வலியுறுத்தினார். அதாவது 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் கணக்கிட்டால் சுமார் 8 லட்ச ரூபாய். இந்த தொகையை செலுத்த குழந்தையின் பெற்றோர்கள் ஒப்பு கொண்டனர். எனினும் குழந்தையை சரியாக கவனித்து கொள்ளாத பெற்றோருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

3 வயது மகள் செய்த காரியம்... ரூ.8 லட்சத்தை பறிகொடுத்த பெற்றோர்... மேட்டர் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

குழந்தையை இனி மேல் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் எனவும், குழந்தையின் நடவடிக்கைகளில் எது சரி? எது தவறு? என்பதை குழந்தைக்கு எடுத்து கூற வேண்டும் எனவும் பெற்றோருக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. இந்த சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்து கொண்டு அந்த குழந்தையின் பெற்றோர் இனி கவனமாக இருப்பார்கள் என நம்பலாம். இதுகுறித்து சின்ச்சா டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
China: Couple Asked To Pay Rs.8 Lakh After 3-Year-Old Daughter Scratches 10 Audi Cars In Dealership. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X