6,000 கிமீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்சானிக் விமான தயாரிப்பில் சீனா மும்முரம்... !!

By Saravana Rajan

மணிக்கு 6,000 கிமீ வேகத்தில் செல்லும், ஹைப்பர்சானிக் விமான தயாரிப்பில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் பெரும் ஆவலையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

6,000 கிமீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்சானிக் விமான தயாரிப்பில் சீனா மும்முரம்... !!

உலகில் ஆயுதப்போட்டியில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்து சீனா மிக முக்கிய நாடாக விளங்குகிறது. இந்த நிலையில், ஹைப்பர்சானிக் விமானத்தை தயாரிக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சிக்கான மறுபயன்பாட்டு ராக்கெட் மற்றும் ஹைப்பர்சானிக் ராணுவ விமானங்களை தயாரிப்பதற்கான அடித்தளமாக இந்த முயற்சி பார்க்கப்படுகிறது.

6,000 கிமீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்சானிக் விமான தயாரிப்பில் சீனா மும்முரம்... !!

கடந்த பிப்ரவரி மாதம் சீனாவின் ஹைப்பர்சானிக் விமானத்தின் வடிவமைப்பு குறித்த செய்திகள் வெளியாகின. சீனாவின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் இந்த ஹைப்பர்சானிக் ஸ்பேஸ்பிளேன் வடிவமைப்பு திட்டத்தை ஏற்றுள்ளது.

6,000 கிமீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்சானிக் விமான தயாரிப்பில் சீனா மும்முரம்... !!

சீனாவின் ஹைப்பர்சானிக் விமானமானது இரண்டு ஜதை இறக்கைகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு ஜதை இறக்கை முன்னோக்கியும், மற்றொரு ஜதை றெக்கைகள் பின்னோக்கியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

6,000 கிமீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்சானிக் விமான தயாரிப்பில் சீனா மும்முரம்... !!

இந்த சூழலில், தற்போது ஹைப்பர்சானிக் விமானத்திற்கான விசேஷ எஞ்சின் ஆலையை சீனா அமைத்து வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த ஹைப்பர்சானிக் எஞ்சின் ஏற்கனவே பயன்படுத்தப்படும் ஸ்க்ராம்ஜெட் மற்றும் ராம்ஜெட் எஞ்சின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.

6,000 கிமீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்சானிக் விமான தயாரிப்பில் சீனா மும்முரம்... !!

முதலில் விண்வெளிக்கான ஸ்பேஸ்பிளேன் மற்றும் ராணுவ விமானங்களில் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் பொருத்தப்பட்ட ஹைப்பர்சானிக் விமானம் அதிகபட்சமாக 3,700 கிமீ முதல் 6,000 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டதாக இருக்கும்.

6,000 கிமீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்சானிக் விமான தயாரிப்பில் சீனா மும்முரம்... !!

இந்த ஸ்பேஸ்பிளேன் கடல் மட்டத்திலிருந்து 20 கிமீ முதல் 100 கிமீ உயரம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கும். முதல்கட்டமாக ஸ்பேஸ்பிளேனில் பொருத்தப்பட்டு சோதிக்கப்பட இருக்கிறது.

6,000 கிமீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்சானிக் விமான தயாரிப்பில் சீனா மும்முரம்... !!

பின்னர் பயணிகள் விமானங்களிலும் பொருத்தும் திட்டம் சீனாவிடம் இருப்பதாக சொல்லப்படுகிறது. தொடர்ச்சியாக அதிவேக பயணிகள் விமானங்களை தயாரிக்கும் முயற்சியையும் சீனா மேற்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

6,000 கிமீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்சானிக் விமான தயாரிப்பில் சீனா மும்முரம்... !!

இதன்மூலமாக, தற்போது பீஜிங் மற்றும் நியூயார்க் நகரங்களுக்கு இடையிலான தற்போதுள்ள 13.5 மணி நேர பயணம் எதிர்காலத்தில் 2 மணிநேரமாக குறையும் வாய்ப்புள்ளது. இதேபோன்று, உலகின் பல்வேறு நீண்ட தூர விமான பயணங்களும் ஒரு சில மணிநேரத்திற்கு உள்ளாகவே குறையும்.

6,000 கிமீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்சானிக் விமான தயாரிப்பில் சீனா மும்முரம்... !!

ஹைப்பர்சானிக் விமான எஞ்சின்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக பிரம்மாண்ட ஆலையை அமைப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கிவிட்டன. இந்த ஆலையின் கட்டுமானப் பணிகள் முடிவடைவதற்கான காலக்கெடு குறித்து எந்த தகவலும் இல்லை.

6,000 கிமீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்சானிக் விமான தயாரிப்பில் சீனா மும்முரம்... !!

எனினும், மறைமுகமாக ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரிப்பதற்காக சீனாவின் தீவிர முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது. பொதுவாகவே, ராணுவ விமானங்களில் பயன்படுத்தப்படும் விசேஷ தொழில்நுட்பங்கள்தான் பின்னாளில் பயணிகள் விமானங்களிலும் கொண்டு வரப்படும்.

6,000 கிமீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்சானிக் விமான தயாரிப்பில் சீனா மும்முரம்... !!

அதுபோலவே, சீனாவின் ஹைப்பர்சானிக் விமான தொழில்நுட்பம் எதிர்காலத்தில் சாதாரண பயணிகள் விமானங்களிலும் பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதன்மூலமாக, நீண்ட தூர பயணங்கள் ஒரு சில மணிநேரத்திற்கு உள்ளாக மாறும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Image Source: 2,6,11, 4,7,8,9

Most Read Articles

மேலும்... #ராணுவம் #military
English summary
China Is Developing Own Tech Hypersonic Spaceplane.
Story first published: Friday, May 4, 2018, 13:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X