நிலத்திலும், நீரிலும் செல்லும் உலகின் அதிவேக பீரங்கியை தயாரிக்கும் சீனா!

Written By:

ராணுவத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களை புகுத்துவதில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, நீரிலும், நிலத்திலும் செல்லும் உலகின் அதிவேக பீரங்கியை உருவாக்கும் பணியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறித்து பாப்புலர் சயின்ஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

 நீரிலும், நிலத்திலும் செல்லும் உலகின் அதிவேக பீரங்கியை தயாரிக்கும் சீனா!

பொதுவாக நீரிலும், நிலத்திலும் செல்லும் வாகனங்கள் தண்ணீரில் பயணிக்கும்போது வேகம் குறைவாக செல்லும். இந்த குறையை களையும் விதத்தில், புதிய பீரங்கியை சீனா உருவாக்கி வருகிறது.

 நீரிலும், நிலத்திலும் செல்லும் உலகின் அதிவேக பீரங்கியை தயாரிக்கும் சீனா!

ஆம், இந்த புதிய பீரங்கி அலையில்லாத நீர் பரப்பில் மணிக்கு 50 கிமீ வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தரையிலேயே இந்த அளவு வேகத்தில் பீரங்கிகள் செல்வதே பெரிய விஷயமாக இருக்கும்.

 நீரிலும், நிலத்திலும் செல்லும் உலகின் அதிவேக பீரங்கியை தயாரிக்கும் சீனா!

இந்த புதிய வாகனம் 4 வீல் டிரைவ் சிஸ்டம் முறையில் இயங்கும். எனவே, நிலத்தில் பயணிக்கும்போது, கடுமையான நிலப்பரப்புகளையும் கூட எளிதாக கடக்கும்.

 நீரிலும், நிலத்திலும் செல்லும் உலகின் அதிவேக பீரங்கியை தயாரிக்கும் சீனா!

இந்த வாகனத்தில் இருக்கும் V வடிவிலான ஹல் அமைப்பு, உராய்வு மற்றும் இழுவிசையை வெகுவாக குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, இந்த வாகனம் மிக வேகமாக செல்லும் திறனை பெற்றிருக்கிறது.

 நீரிலும், நிலத்திலும் செல்லும் உலகின் அதிவேக பீரங்கியை தயாரிக்கும் சீனா!

இந்த புதிய பீரங்கி இசட்டிடி-05 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. நீரில் பயணிக்கும்போது, இதன் நான்கு சக்கரங்களும், பீரங்கியின் ஹல் அமைப்பிற்குள் சென்றுவிடும். இதன் விசேஷமான ஹைட்ரோநியூமாட்டிக் சஸ்பென்ஷன் அமைப்பும் மிகவும் விசேஷ தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

 நீரிலும், நிலத்திலும் செல்லும் உலகின் அதிவேக பீரங்கியை தயாரிக்கும் சீனா!

இந்த பீரங்கி தற்போது சோதனை செய்து பார்க்கும் விதத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பீரங்கி ஆயுதங்கள் இல்லாத நிலையில் 5.5 டன் எடை கொண்டதாக இருக்கிறது. ஆயுதங்கள் பொருத்தினாலும், இது மணிக்கு 28 கிமீ வேகம் வரை செல்லும் திறன் படைத்ததாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 நீரிலும், நிலத்திலும் செல்லும் உலகின் அதிவேக பீரங்கியை தயாரிக்கும் சீனா!

105மிமீ விட்டமுடைய முக்கிய தாக்குதல் பீரங்கியும், தற்காப்பு ஆயுதங்களும் இந்த பீரங்கியில் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

 நீரிலும், நிலத்திலும் செல்லும் உலகின் அதிவேக பீரங்கியை தயாரிக்கும் சீனா!

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இதுபோன்ற நீரிலும், நிலத்திலும் செல்லும் பீரங்கிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனால், அவற்றின் வேகம் மிக மிக குறைவு. ஆனால், சீனாவின் இந்த பீரங்கி பன்மடங்கு கூடுதல் வேகத்தில் செல்லும் திறன் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #ராணுவம் #military
English summary
China is developing the world's fastest amphibious tank.
Story first published: Saturday, July 15, 2017, 14:58 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos