தமிழ்நாட்டு மாணவர்கள் 1 லிட்டருக்கு 148 கிமீ மைலேஜ் வழங்கும் பைக் உருவாக்கி சாதனை

By Staff

தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள், ஒரு லிட்டருக்கு 148 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் சுற்று சூழலுக்கு இணக்கமான பைக்கை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

ஹைட்ரஜன் தான் நமது பிரபஞ்ஜத்திலும், கிரகத்திலும் மிகவும் அபரிவிதமான அளவில் கிடைக்கும் பொருள் ஆகும். நமது கிரகமான பூமியில், தண்ணீர் தான் அதிகபடியான அளவில் நிரம்பியுள்ளது. நாம் பாஸில் ஃப்யூவல் எனப்படும் படிம எரிபொருட்களில் மீது சார்ந்திருக்கும் நிலையில் இருந்து ஹைட்ரஜன் தான் நம்மை காப்பாற்ற முடியும்.

தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் அமைந்துள்ள ஆர்விஎஸ் ஸ்கூல் ஆஃப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி என்ற கல்லூரியை சேர்ந்த 4 மாணவர்கள் தான், தாங்கள் உருவாக்கும் பைக்கிற்கு ஹைட்ரஜனை எரிபொருளாக (ஃயூவல்) உபயோகிக்க முடிவு செய்தனர். இதன் பலன் ஆச்சர்யமூட்டும் வகையில் இருந்தது.

ஆர். பாலாஜி, கௌதம் ராஜ், காலித் இப்ராஹிம் மற்றும் ஜெர்ரி ஜார்ஜ் என்ற 4 மாணவர்கள் இணைந்து, ஒரு பைக்கை வெரும் 7,000 ரூபாய் செலவில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வகையில் மாற்றி வடிவமைத்தனர்.

"உலகில் இன்றைய காலகட்டத்தில், நமது வாகனங்களை இயக்க சுற்று சூழலுக்கு இணக்கமான மாற்று ப்யூவல்களின் அவசியம் எழுந்துள்ளது. 4-ஸ்ட்ரோக் பைக்கில், ஹைட்ரஜனை சப்ளிமெண்டரி ப்யூவலாக இருக்கும் என நாங்கள் கண்டறிந்துள்ளோம்" என இந்த நால்வர் குழு, தி ஹிந்து இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

college-students-tamilnadu-create-hydrogen-bike-returning-148km-l-mileage

இந்த முயற்சிகாக, இவர்கள் உபயோகித்த பைக்கின் இஞ்ஜினில் எந்த விதமான மாற்றங்களையும் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஒறே ஒரு செயலை தான், இந்த மாணவர்கள் செய்ய வேண்டி இருந்தது.

ஒவ்வொரு 1,000 கிலோமீட்டருக்கும், ஒரு முறை இவர்கள் உபயோகிக்கும் பைக்கிலும், ஹைட்ரஜனை உருவாக்கும் வகையில் டிஸ்டில்ட் வாட்டர் எனப்படும் சுத்திகரிக்கபட்ட நீரை மாற்ற வேண்டும். இதன் மூலம் இந்த ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பைக் ஒரு லிட்டர் ஹைட்ரஜனுக்கு 148 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

ஹைட்ரஜன் ஒரு லிட்டருக்கு 30 ரூபாய் என்ற விலையில் விற்கபடுகிறது. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றிக்கு பதிலாக, ஹைட்ரஜனை மாற்று எரிபொருளாக உபயோகிக்க மக்கள் முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

Most Read Articles
English summary
A group of students from RVS School of Engineering and Technology in the Dindigul district of Tamil Nadu, created an Eco-Friendly Bike, which gives Mileage of 148km/l. R. Balaji, Gowthem Raj, Jerry George and Kalid Ibrahim converted a bike, in such a way to run on Hydrogen as fuel for just Rs. 7,000. To know more about Eco-Friendly bike, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X