விமான விபத்துக்களுக்கான பொதுவான காரணங்கள்!

Written By:

பிற விபத்துக்களில் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால், விமான விபத்து என்பது பெரும்பாலும் கூண்டோடு கைலாசம் என்பது போலவே அமைந்து வருகிறது.

அதுவும் விமானம் விபத்தில் சிக்கும் கடைசி நேர பதைபதைப்பே பலருக்கு மரணத்தை வரவழைத்துவிடும் அளவுக்கு திகில் நிறைந்ததாக இருக்கும். இந்த நிலையில், விமான விபத்துக்களுக்கு பல காரணங்கள் இருந்தாலும் சில பொதுவான காரணங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

பைலட் தவறு

பைலட் தவறு

சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து தாய்வான் நாட்டுக்கு 353 பயணிகளுடன் புறப்பட்ட இவிஏ ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 777 விமானமானது, தவறான திசையை நோக்கி பறக்கத் துவங்கியது. விபரீதத்தை புரிந்து கொண்ட விமான கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அந்த விமானத்தை சரியான திசையில் செலுத்துமாறு உத்தரவிட்டதுடன், அதே திசையில் வந்த மற்றொரு விமானத்தையும் வேறு திசையில் மாற்றி விபத்தை தவிர்த்தனர்.

தொழில்நுட்பக் கோளாறு

தொழில்நுட்பக் கோளாறு

விமானிகளின் தவறால் விமானங்கள் விபத்துக்களில் சிக்குவது முக்கிய காரணமாக இருப்பது போன்றே, பறந்து கொண்டிருக்கும்போது விமானத்தில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள், எஞ்சின் கோளாறும் விபத்துக்கு வழிகோலுகின்றன. இதுவரை நடந்திருக்கும் விபத்துக்களில் 22 சதவீதம் அளவுக்கு தொழில்நுட்பக் கோளாறுகளால் விமானங்கள் விபத்தில் சிக்கியிருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

 மோசமான டிசைன்

மோசமான டிசைன்

1974ம் ஆண்டு துருக்கி நாட்டு விமானம் ஒன்று பிரான்ஸ் நாட்டில் விழுந்து நொறுங்கியது. விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்தபோது, விமானத்தின் சரக்குப் பகுதி கதவை பூட்டுவதற்கான அமைப்பில் இருந்த பிரச்னையே விமானத்தை நிலைகுலைய செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்ற விமானம் காற்றை கிழித்துக்கொண்டு பறக்கும்போது உடல்கூடு பகுதியில் ஏற்படும் தெறிப்புகளும் காரணமாகின்றன. மேலும், இறக்கையின் அமைப்பு காரணமாகவும் விமானங்கள் விபத்தில் சிக்கிய சம்பவங்களுக்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், இப்போது விமானங்கள் வலுவான கலப்பு உலோக கட்டுமானத்தில் வருவதால் இதுபோன்ற தெறிப்புகள் ஏற்படுவது குறைந்துள்ளது.

 பறவைகளால் பிரச்னை

பறவைகளால் பிரச்னை

விமானம் தரையிறங்கும்போது இந்த பிரச்னை அதிகம். விமானத்தின் மீது பறவைகள் மோதியதால் இதுவரை 7 பெரிய விமான விபத்துக்கள் நடந்துள்ளன. ஒரு பறவையால் ஒட்டுமொத்த விமானத்தின் கட்டுப்பாடும் செயலிழக்கும் ஆபத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

வானிலை

வானிலை

இதுவரை நடந்த விமான விபத்துக்களில் 12 சதவீதம் அளவுக்கு மோசமான வானிலையால் நடந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் மூலமாக உறுதியாகி உள்ளது. சூறாவளி, கடும் பனிமூட்டம், மழை, மின்னல் போன்ற மோசமான வானிலை சமயங்களில் விமானங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குவதும் நடக்கின்றன. மின்னல் தாக்கும்போது விமானத்தின் மின்னணு கட்டுப்பாட்டு சாதனங்கள் செயலிழந்துவிடுவதும் காரணமாக இருக்கிறது. சில வேளைகளில் மின்னல் தாக்கும்போது எரிபொருள் இருக்கும் கொள்கலன்கள் மற்றும் எரிபொருள் குழாய்களில் தீப்பற்றி விபத்தில் சிக்கிய சம்பவங்களும் நமக்கு அச்சத்தை தருவதாகவே இருக்கிறது.

தரை இறக்கும்போது...

தரை இறக்கும்போது...

மோசமாான வானிலையின்போது விமானத்தை தரை இறக்குவது மிகவும் சவால் நிறைந்தது. நொடி தவறினாலும் மரணம்தான் என்ற நிலை. 2010ம் ஆண்டு 103 பயணிகளுடன் மோசமான வானிலையின்போது தரையிறங்கிய இந்தோனேஷிய சேர்ந்த விமானம் ஒன்று ஓடுபாதையில் சரியான இடத்தில் தரையிறங்காமல் சற்று கூடுதல் தூரத்தில் தரை இறங்கியது. வேகத்தை கட்டுப்படுத்த போதிய தூரம் இல்லாத நிலையில், அந்த விமானமானது ஓடுபாதையை விட்டு சறுக்கிச் சென்று மோசமான விபத்தில் சிக்கி இரண்டாக உடைந்தது.

கடத்தல் அபாயம்

கடத்தல் அபாயம்

இதுவரை நடந்த 9 சதவீத விமான விபத்துக்கள் தீவிரவாதிகள் அல்லது கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டு வேண்டுமென்றே தரையில் மோதி நொறுங்கச் செய்யப்பட்டவையாக இருக்கின்றன. இதற்கு அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்தை சரியான உதாரணமாக கூறலாம். விமானத்தில் ஏறுபவர்கள் பல்வேறு சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்பட்டாலும், அதையும் தாண்டி, வெடிப் பொருட்கள் அல்லது துப்பாக்கியுடன் விமானத்தில் புகுந்துவிடும் கடத்தல்காரர்களால் விமானங்களுக்கு எப்போதுமே ஆபத்து இருந்து வருகிறது.

கட்டுப்பாட்டு மைய குளறுபடி

கட்டுப்பாட்டு மைய குளறுபடி

சில வேளைகளில் விமானக் கட்டுப்பாட்டு மையத்தில் அளிக்கப்படும் தவறான வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவும் விமான விபத்துக்களுக்கு அடிகோலும் விஷயங்களாக இருக்கின்றன. விமான கட்டுப்பாட்டு மைய அதிகாரிகளின் தவறு காரணமாக 7 சதவீத விமான விபத்துக்கள் நடந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பணியாளர்கள் அஜாக்கிரதை

பணியாளர்கள் அஜாக்கிரதை

எரிபொருள் நிரப்பும்போது பணியாளர்கள் தவறாக கணக்கிட்டு எரிபொருள் நிரப்புவதும் விமான விபத்துக்கு அடிபோடும் சமாச்சாரமாகிவிடுகிறது. இதற்கு பல சம்பவங்கள் உதாரணங்களாக கூறப்படுகின்றன. அதேபோன்று, எரிபொருள் கலன்களின் மூடியை சரியாக மூடாமல் விடுவதும் பிரச்னைக்கு வழிவகுக்கிறது.

 பராமரிப்பு

பராமரிப்பு

போதிய பராமரிப்பு இல்லாத நிலையிலும் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும்போதும் விபத்துக்கள் நடக்கின்றன. எனவே, சரியான பராமரிப்பு முறையை கையாளும் நிறுவனத்தின் விமானங்களில் பயணிப்பது சாலச் சிறந்தது.

பொறியாளர்கள் கவனக்குறைவு

பொறியாளர்கள் கவனக்குறைவு

விமானம் புறப்படுவதற்கு முன் வழக்கமான சோதனைகளின்போது இருக்கும் பிரச்னைகளை சாதாரணமாக எடுத்துக் கொண்டு பராமரிப்பு பொறியாளர்கள் விமானத்தை இயக்க அனுமதிப்பதும் பிரச்னைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. அல்லது அவர்கள் கோளாறை சரிசெய்யும்போது கவனக்குறைவாக செய்யும் சில விஷயங்களும் விபத்துக்களுக்கு பொதுவான காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

நேவிகேஷன் கோளாறு

நேவிகேஷன் கோளாறு

1974ம் ஆண்டு ஏர் மாலி விமானம் ஒன்றின் நேவிகேஷன் சிஸ்டத்தில் கோளாறு ஏற்பட்டு தவறான இடத்திற்கு விமானம் சென்றுவிட்டது. இதனால், அந்த விமானத்தில் இருந்த எரிபொருள் அனைத்தும் தீர்ந்து போனதால், விமானம் கீழே விழந்து நொறுங்கியது. இவ்வாறு விமான விபத்துக்களுக்கு இதுவரை ஏராளமான காரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

English summary
Common Reasons of Plane Crashes.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark