பாகிஸ்தானின் ஜேஎஃப்-17 போர் விமானம் Vs இந்தியாவின் தேஜஸ் போர் விமானம்: ஒப்பீடு

Written By:

இந்தியாவும் பாகிஸ்தானும் எப்போதுமே வைரி நாடுகளாகவே செயல்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையில் நிலவும் பதட்டத்தை தணிப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகளும் முட்டுக் கட்டைகள் ஏராளமாக இருக்கின்றன. இந்தநிலையில், இரு நாடுகளுக்கும் தங்கள் நாட்டு மக்களையும், எல்லைகளையும் பாதுகாக்க ஆயுத பலத்தை போட்டி போட்டு பெருக்கி வருகின்றன.

இந்த நிலையில்,  சீனா உதவியுடன் பாகிஸ்தான் தயாரித்திருக்கும் ஜேஎஃப் 17 போர் விமானத்தையும், இந்தியா சொந்தமாக உருவாக்கியிருக்கும் தேஜஸ் போர் விமானத்தையும் சர்வதேச அளவில் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தொடர்ந்து ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், இரு விமானங்களுக்கு இடையிலான சிறப்பம்சங்கள் பற்றிய ஒப்பீட்டு பார்வையை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

பேச்சு அடிபட காரணம்

பேச்சு அடிபட காரணம்

கடந்த மாதம் பஹ்ரைனில் நடந்த சர்வதேச விமான கண்காட்சியில், இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் முதல்முறையாக பங்கேற்றதுடன், சாகசங்களை செய்து காட்சி அசத்தியது. ஆனால், இதற்கு நேர் போட்டியாக கருதப்பட்ட பாகிஸ்தானின் ஜேஎஃப்17 தண்டர் விமானத்தின் சாகச நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்தானது. ஏர் ஷோவில் பங்கேற்றால், இந்தியாவின் தேஜஸ் போர் விமானத்துடன் சர்வதேச நிபுணர்கள் ஒப்பிட்டு பேசுவார்கள் என்ற நிலையை கருதியே, பாகிஸ்தான் தவிர்த்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனா ஒத்துழைப்பு

சீனா ஒத்துழைப்பு

சீனாவின் செங்குடு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ஜேஎஃப்17 போர் விமானத்தை பாகிஸ்தான் தயாரித்திருக்கிறது. கடந்த 2010ம் ஆண்டிலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. இது மூன்றாம் தலைமுறை அம்சங்களை பெற்றிருக்கும் போர் விமானம்.

தேஜஸ் போர் விமானம்

தேஜஸ் போர் விமானம்

பாகிஸ்தானின் ஜேஎஃப் போர் விமானம் மூன்றாம் தலைமுறை சிறப்பம்சங்களை பெற்றிருக்கும் அதேநேரத்தில், இந்தியாவின் தேஜஸ் நான்காம் தலைமுறைக்கு மேலான சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. இதன்மூலமாக, போர் சமயங்களில் மிகச் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதில், தேஜஸ் முன்னிலை பெறுகிறது. அத்துடன் ஐந்தாம் தலைமுறை போர் விமானமாகவும் பயன்படுத்தலாம்.

 எரிபொருள் கொள்ளளவு

எரிபொருள் கொள்ளளவு

பாகிஸ்தானின் ஜேஎஃப் 17 போர் விமானத்தில் 2,268 கிலோ கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கும், தேஜஸ் விமானத்தில் 2,458 கிலோ கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்கும் பொருத்தப்பட்டிருக்கிறது.

 டேக் ஆஃப்

டேக் ஆஃப்

பாகிஸ்தானின் ஜேஎஃப்17 விமானம் டேக் ஆஃப் செய்வதற்கு 609 மீட்டர் நீளமுடைய ஓடுபாதை தேவைப்படும். ஆனால், தேஜஸ் விமானத்தை 460 மீட்டர் ஓடுபாதை இருந்தாலே போதுமானது. அதேபோன்று, தரை இறக்குவதற்கு பாகிஸ்தானின் ஜேஎஃப்17 விமானத்திற்கு 823 மீட்டர் நீளமுடைய ஓடுபாதையும், தேஜஸ் விமானத்திற்கு 750 மீட்டர் நீளமுடைய ஓடுபாதையும் மட்டுமே தேவைப்படும்.

எடை சுமக்கும் திறன்

எடை சுமக்கும் திறன்

பாகிஸ்தானின் ஜேஎஃப் 17 போர் விமானம் அதிகபட்சமாக 12,474 கிலோ எடையையும், தேஜஸ் போர் விமானம் அதிகபட்சமாக 14,735 கிலோ எடையையும் சுமந்து செல்லும் திறன் படைத்தது.

இலகு எடை பாடி

இலகு எடை பாடி

பாகிஸ்தானின் ஜேஎஃப்17 போர்விமானம் அலுமினியம் மற்றும் ஸ்டீல் அலாய் கலுப்பு உலோகங்கள் மூலமாக செமி மோனாகாக் சேஸீயில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவின் தேஜஸ் கார்பன் ஃபைபர் பாகங்கள், அலுமினியம் அலாய் பாகங்கள் மற்றும் டைட்டானியம் அலாய் ஆகிய கலப்பு உலோக பாகங்கள் மூலமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதிக வெப்பத்தை தாங்குவதிலும், உறுதி மற்றும் இலகு எடை கொண்டதிலும் தேஜஸ் மிகச்சிறப்பானதாக இருக்கிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

பாகிஸ்தானின் ஜேஎஃப்17 போர் விமானம் அதிகபட்சமாக 1,960 கிமீ வேகத்திலும், தேஜஸ் மணிக்கு 2,376 கிமீ வேகத்திலும் பறக்கும் வல்லமை கொண்டது.

 வடிவம்

வடிவம்

ஜேஎஃப்17 போர் விமானம் 15 மீட்டர் நீளமும், 9.45 மீட்டர் அகலமும், 6,586 கிலோ எடையையும் கொண்டது. மறுபுறம் தேஜஸ் போர் விமானம் 13 மீட்டர் நீளமும், 8.2 மீட்டர் அகலமும், 6,500 கிலோ எடையும் கொண்டது.

எஞ்சின்

எஞ்சின்

தேஜஸ் விமானத்தி்ல ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் F404-GE-IN20 டர்போஃபேன் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானின் ஜேஎஃப் 17 விமானத்தில் க்ளிமோவ் ஆர்டி90 டர்போஃபேன் எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

தேஜஸ் விமானம் அதிகபட்சமாக 3,000 கிமீ தூரமும், பாகிஸ்தானின் ஜேஎஃப் 17 போர் விமானம் 3,482 கிமீ தூரமும் பயணிக்கும். மேலும், தேஜஸ் போர் விமானம் அதிகபட்சமாக 16,500 மீட்டர் உயரம் வரையிலும், ஜேஎஃப்17 போர் விமானம் 16,920 மீட்டர் உயரத்திலும் பறக்கும் திறன் கொண்டவை.

 ஆயுதங்கள்: தேஜஸ்

ஆயுதங்கள்: தேஜஸ்

தேஜஸ் போர் விமானத்தில் 23மிமீ விட்டம் கொண்ட ஜிஎஸ்எச்-23 இரட்டைக் குழல் துப்பாக்கி பொருத்தப்பட்டிருக்கிறது. தவிர, வானிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணை, வானிலிருந்து தரை இலக்கை தாக்கும் ஏவுகணைகள் உள்ளன.

ஆயுதங்கள்: ஜேஎஃப்17

ஆயுதங்கள்: ஜேஎஃப்17

ஜேஎஃப் 17 போர் விமானத்தில் 23மிமீ விட்டம் கொண்ட ஜிஎஸ்எச் இரட்டைக் குழல் துப்பாக்கியும், 30மிமீ விட்டம் கொண்ட ஜிஎஸ்எச்30-2 துப்பாக்கியும் உள்ளது. ஏவுகணைகள், லேசர் வழிகாட்டுதல் குண்டுகளை பொருத்தி தாக்க முடியும்.

எளிதாக வீழ்த்தலாம்...

எளிதாக வீழ்த்தலாம்...

இரு விமானங்களும் வெவ்வேறு தலைமுறை அம்சங்களை கொண்டிருந்தாலும்,, போர் என்று வரும்போது பாகிஸ்தானின் ஜேஎஃப்17 போர் விமானத்தை இந்தியாவின் சுகோய், தேஜஸ் மற்றும் பிரான்ஸிடமிருந்து வாங்கப்படும் ரஃபேல் ஆகிய விமானங்களை வைத்து வானிலேயே எளிதாக மடக்கிவிட முடியும் என்கின்றனர் விமானவியல் துறையினர். மேலும், ஜேஎஃப்17 விமானத்தை பிவிஆர் ஏவுகணைகள் முலமாக எளிதாக இலக்கு வைத்து அடிக்க முடியும்.

இந்தியாவுக்கான சாதகம்

இந்தியாவுக்கான சாதகம்

தேஜஸ் விமானத்திற்கான சில பாகங்களை வெளிநாடுகளில் இருந்து பெற்றாலும், இந்தியா சொந்தமாக தயாரிப்பதால் பல்வேறு அனுகூலங்கள் இருக்கின்றன. அதன்படி, அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் இந்தியாவால் மிகச் சிறந்த போர் விமானங்களை உருவாக்க முடியும். ஆனால், ஜேஎஃப் 17 விமானத்தை சீனாவின் ஒத்துழைப்புடன் பாகிஸ்தான் தயாரிப்பதால், இந்தியா அளவுக்கு போர் விமானத் தயாரிப்பில் பாகிஸ்தான் சொந்த காலில் சிறப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்படும் நிலை இருப்பதாக விமானவியல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

 
மேலும்... #ராணுவம் #military
English summary
Comparison of Indian Tejas vs Pakistan JF-17 Thunder Fighter Jets.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark