அடுத்து கார்களுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ்...!!

By Saravana
Gorilla Glass Windshield
ஆட்டோமொபைல் துறையின் தொழில்நுட்பங்கள் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றன. இதில், ஒரு புதுமையாக விரைவில் வாகனங்களுக்கான வைன்ட்ஷீல்டு எனப்படும் கண்ணாடிகள் புதிய தொழில்நுட்பத்தில் வர இருக்கின்றன. கார்னிங் கொரில்லா கிளாஸ் எனப்படும் உயர்தர கண்ணாடிகளை பலவிதமான பயன்கள் கிடைக்கும்.

தற்போது ஆப்பிள் ஐபோன், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களின் திரையில் பயன்படுத்தப்படும் இந்த கொரில்லா கிளாஸ் எதிர்காலத்தில் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கான வைன்ட்ஷீல்டு மற்றும் கதவு கண்ணாடிகளில் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த கொரில்லா கிளாஸ் இலகு எடை கொண்டது என்பதால் வாகனங்களின் மைலேஜ் கூடுதலாகும் என கூறப்படுகிறது.

மேலும், கொரில்லா கிளாஸ் எளிதில் கீறல்கள் விழாது என்பதுடன், தெறிப்பு, உடைந்து போகும் ஆபத்துக்களும் குறைவு. அதிக உறுதியும், நீண்ட ஆயுட்காலத்தையும் கொண்டவை.

எனவே, எதிர்வரும் ஆண்டுகளில் இந்த புதிய கொரில்லா கிளாஸை கார் உள்ளிட்ட வாகனங்களில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரில்லா கிளாஸை பயன்படுத்துவதற்கு கார் நிறுவனங்கள் தயங்குவதற்கு அதன் அதிக விலைதான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
The next advancement in automobiles could come in the form of better glass panels for windshields and windows. At present all automobiles make use of tempered glass panels. For added safety and durability a clear plastic layer is added between two panels of tempered glass. This prevents the glass from shatter.
Story first published: Thursday, June 13, 2013, 12:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X