டக்கார் ராலியில் 3 இடங்கள் முன்னேறிய சந்தோஷ்... கலக்கல் தொடர்கிறது!

Written By:

பரபரப்பாக நடந்து வரும் டக்கார் ராலியின் 4வது கட்ட போட்டியில் இந்தியாவின் சி.எஸ்.சந்தோஷ் மூன்று இடங்கள் முன்னேறி 50வது இடத்தில் இருக்கிறார்.

தென்அமெரிக்காவில் நடந்து வரும் டக்கார் ராலியின் 4வது கட்ட போட்டியின் முடிவுகள் வெளியாகியுள்ளன. மூன்றாவது கட்ட போட்டி முடிவில் 53வது இடத்தில் இருந்த சி.எஸ்.சந்தோஷ், 4வது கட்ட போட்டியின் முடிவில் 50வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார்.

CS Santosh
 

4வது கட்ட போட்டியில் அவர் 58வது இடத்தை பிடித்தாலும், ஒட்டுமொத்த தர வரிசையில் 50வது இடத்தில் இருக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த சாம் சுந்தர்லேண்ட் 4வது கட்டப் போட்டியின்போது விபத்தில் சிக்கி காயமடைந்ததால், போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

ஒட்டுமொத்த தர வரிசையில் ஜோன் பாரேடா முதலிடத்திலும், மார்க் கோமா இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

English summary
CS Santosh, stands at the 50th spot overall after stage 4 of the Dakar Rally 2015. The Bangalore based rider, and the only Indian in the history of Dakar Rally to compete, finished stage 4 in the 58th spot.
Story first published: Thursday, January 8, 2015, 17:16 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark