டக்கார் ராலியில் முதல் இந்திய வீரர் சி.எஸ்.சந்தோஷ் அசத்தல்!

By Saravana

டக்கார் ராலியின் நிறைவில் பைக் பிரிவில், இந்தியாவின் முதல் வீரராக பங்கேற்ற சி.எஸ்.சந்தோஷ் தரவரிசையில் 36வது இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறார்.

மிகவும் சவால்கள் நிறைந்த டக்கார் ராலி இந்த ஆண்டு தென் அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் சிலி ஆகிய நாடுகளில் நடந்தது. இதில், இந்தியாவிலிருந்து முதல் வீரராக பெங்களூரை சேர்ந்த சி.எஸ்.சந்தோஷ் பங்கு பெற்றார்.


 போட்டி தூரம்

போட்டி தூரம்

டக்கார் ராலியின் பைக் பிரிவில் மொத்தம் 168 வீரர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 9,295 கிமீ தூரத்தை இலக்காக வைத்து 13 கட்டங்களாக நடந்த இந்த போட்டியில் பல வீரர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் கழன்று கொண்டனர்.

கிளைமேக்ஸ்...

கிளைமேக்ஸ்...

ஒவ்வொரு கட்டத்தின் முடிவிலும் வீரர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை டக்கார் ராலி நிறைவடந்தைதது. இதில், 79 வீரர்கள் மட்டுமே இறுதிச்சுற்று வரை களத்தில் இருந்தனர்.

போராட்டம்

போராட்டம்

இந்த போட்டியில் முதல்முறையாக பங்கு கொண்ட இந்தியாவை சேர்ந்த சி.எஸ்.சந்தோஷ் இறுதி வரை சளைக்காமல் போராடி, குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்து முத்திரை பதித்திருக்கிறார். பைக் பிரிவில் ஒட்டுமொத்த தரவரிசையில் 36வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார் சந்தோஷ்.

காயம்

காயம்

இடையில் ஓர் ஆற்றைக்கடக்கும்போது பைக்கில் ஏற்பட்ட பிரச்னை, சில முறை கீழே விழந்ததால் மூக்கு மற்றும் தோள்பட்டை காயம் போன்றவற்றை பொருட்படுத்தாமல் இலக்கு ஒன்றை மட்டும் மனதில் வைத்து குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறார் சிஎஸ்.சந்தோஷ்.

கடினம்

கடினம்

டக்கார் ராலி என்றாலே பல ரேஸ் வீரர்கள் அலர்ஜியான ஒன்று. பல கடினமான சாலைநிலை, தட்பவெப்ப நிலை போன்றவற்றை அழகாக சமாளித்து அவர் நிறைவு சுற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்திருப்பது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

சி.எஸ்.சந்தோஷிற்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுகளையும் உரித்தாக்குகிறோம்.

Most Read Articles
English summary
2015 Dakar Rally: CS Santosh Creates History with first Indian to finish the world's most toughest rally.
Story first published: Monday, January 19, 2015, 10:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X