ராலி ஸ்போர்ட் ஸ்டைலில் மாருதி ஆல்ட்டோ கே10... நம்ம கைவண்ணம் எப்படியிருக்கு?!

By Saravana

இந்திய கார் மார்க்கெட்டில் பல ஆண்டுகளாக விற்பனையில் முதலிடத்தில் இருந்து வருகிறது மாருதி ஆல்ட்டோ. பட்ஜெட் விலை, சிறப்பான எரிபொருள் சிக்கனம், குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் சிறப்பான விற்பனைக்கு பிந்தைய சேவை என ஆல்ட்டோ முதலிடத்தில் இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள்.

இந்த நிலையில், ஆல்ட்டோ பிராண்டுக்கு வலு சேர்க்கும் விதத்தில், கடந்த ஆண்டு ஆல்ட்டோ 800 அடிப்படையிலான புதிய ஆல்ட்டோ கே10 கார் அறிமுகம் செய்யப்பட்டது. ஆல்ட்டோ 800 காரைவிட கூடுதல் சக்தி கொண்டதாக வந்த இந்த புதிய மாடல் பட்ஜெட் விலையில் பெர்ஃபார்மென்ஸ் மாடலை விரும்புபவர்களுக்கு சிறந்த சாய்ஸ்.

இந்த நிலையில், மாருதி ஆல்ட்டோ கே10 காரை ராலி ஸ்போர்ட்ஸ் ஸ்டைலில் மாற்றினால் எப்படியிருக்கும் என்பதை மனதில் வைத்து எமது ஆங்கில எடிட்டர் சந்தோஷ் ராஜ்குமார் பென்சில் ஸ்கெட்ச் வரைந்துள்ளார். சந்தோஷ் வரைந்த இந்த பென்சில் ஸ்கெட்ச்சில் புதிய அவதாரம் எடுத்திருக்கும் ஆல்ட்டோ கே10 காரை ஸ்லைடரில் காணலாம்.

ஆல்ட்டோ கே10 RS

ஆல்ட்டோ கே10 RS

சில எளிய மாறுதல்களை செய்து ராலி ஸ்போர்ட் ஸ்டைலுக்கு ஆல்ட்டோ கே10 கார் மாற்றப்பட்டிருக்கிறது. அதனை அடுத்தடுத்த படங்களில் காணலாம்.

ராலி லைட்ஸ்

ராலி லைட்ஸ்

முன்பக்கத்தில் மூன்று கூடுதல் ராலி லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏர்டேமில் மெஷ் க்ரில் அமைப்புக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

ஹெட்லைட்ஸ்

ஹெட்லைட்ஸ்

ராலி ஸ்போர்ட் கார்களை போன்று நம்பர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அலாய் வீல்

அலாய் வீல்

விசேஷ டயர்கள், புதிய அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பானட் ஏர்இன்டேக்

பானட் ஏர்இன்டேக்

பானட்டில் ஏர் இன்டேக் கூடுதலாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

பாடி டீகெல்

பாடி டீகெல்

ராலி ஸ்போர்ட் ஸ்டைலில் கார் முழுவதும் டீகெல்கள் மற்றும் கோடுகள் வரையப்பட்டிருக்கின்றன.

வேணுமா?

வேணுமா?

ஒருவேளை, இந்த ஆல்ட்டோ கே10 ஆர்எஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரியர்களை கவருமா? உங்களது கருத்து என்ன?

Most Read Articles
English summary
Thus, a car like the Maruti Alto K10 could do very well with a limited-edition model such as the one seen here, where driving enthusiasts would appreciate some show with the go. Maruti could even up-spec the engine and exhaust system slightly, to add some more oomph as well. My idea of a K10 RS (or Rally Sport) includes some changes to the styling, like a new grille, extra rally lights, bonnet air intake, a simple bodykit and custom number decals and stripes.
Story first published: Wednesday, March 11, 2015, 14:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X