எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கிய சைக்கிள் கடை உரிமையாளர்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

சைக்கிள் பழுது பார்க்கும் கடை உரிமையாளர் ஒருவர், மின்சார மோட்டார்சைக்கிளை உருவாக்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கிய சைக்கிள் கடை உரிமையாளர்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

இந்தியாவை சேர்ந்த ஏராளமானோர் பல்வேறு புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்குகின்றனர். அவர்களின் கதைகள் நமக்கு உத்வேகம் அளிப்பவையாக உள்ளன. ஒரு சிலர் கார் மற்றும் மோட்டார்சைக்கிள் போன்ற வாகனங்களை வீட்டிலேயே தயாரிக்கின்றனர். மின்சார வாகனங்களும் கூட வீட்டிலேயே தயார் செய்யப்படுகின்றன.

எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கிய சைக்கிள் கடை உரிமையாளர்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

இந்த வரிசையில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை உரிமையாளர் ஒருவர் சுயமாகவே மின்சார மோட்டார்சைக்கிளை உருவாக்கியிருக்கும் ஆச்சரியமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. இதற்கான பணிகள் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தொடங்கின. மற்ற வாகனங்களின் பழைய பாகங்களை கொண்டு, இந்த மின்சார மோட்டார்சைக்கிளை, சைக்கிள் பழுது பார்க்கும் கடை உரிமையாளர் தயாரித்துள்ளார்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கிய சைக்கிள் கடை உரிமையாளர்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

மற்ற பைக்குகள் மற்றும் சைக்கிள்களின் பாகங்கள் இந்த மின்சார மோட்டார்சைக்கிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர இந்த மின்சார மோட்டார்சைக்கிளில் பயன்படுத்தப்பட்டுள்ள பாகங்கள் அனைத்தும், சைக்கிள் பழுது பார்க்கும் கடை உரிமையாளரால், அவரது பட்டறையில் உருவாக்கப்பட்டவை ஆகும்.

எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கிய சைக்கிள் கடை உரிமையாளர்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

அவர் வெளியில் இருந்து பெற்ற ஒரே ஒரு பாகம் பின்புற ஸ்ப்ராக்கெட்தான். லேத் பட்டறை ஒன்றில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு சுமார் 4 மணி நேரம் ஆகும். பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 20-22 கிலோ மீட்டர்கள் தூரம் வரை இந்த மோட்டார்சைக்கிள் பயணிக்கும்.

எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கிய சைக்கிள் கடை உரிமையாளர்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

இது குறைவான ரேஞ்ச் போல் தோன்றலாம். ஆனால் எந்தவிதமான உதவியும் இல்லாமல், ஒருவர் சுயமாகவே இந்த மின்சார மோட்டார்சைக்கிளை உருவாக்கியுள்ளார் என்ற விஷயத்தை யோசிக்கும்போது, இது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். இந்த மின்சார மோட்டார்சைக்கிளின் எடை 170 கிலோ ஆகும்.

எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கிய சைக்கிள் கடை உரிமையாளர்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

இந்த பைக்கின் முன் மற்றும் பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. பாபர் போன்ற ஸ்டைலில் இந்த மின்சார மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் உயரமான ஹேண்டில்பார்களை பெற்றுள்ளது. இந்த மின்சார மோட்டார்சைக்கிளில் ஒரே ஒரு இருக்கை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கிய சைக்கிள் கடை உரிமையாளர்... எப்படினு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...

முன்பகுதியை பொறுத்தவரை வட்ட வடிவ ஹெட்லேம்ப்பை இந்த மின்சார மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது. இது ரெட்ரோ லுக்கை கொடுக்கிறது. இதுதொடர்பான காணொளி Ebadu Rahman Tech என்ற யூ-டியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் திறமைமிக்க நபர்கள் இதுபோன்ற மோட்டார்சைக்கிள்களை வீட்டிலேயே உருவாக்குவது என்பது இது முதல் முறை கிடையாது.

இதற்கு முன்பும் பலர் இதுபோன்ற மோட்டார்சைக்கிள்களை தாங்களாகவே உருவாக்கியுள்ளனர். அவர்களின் கதைகள் நமக்கு உத்வேகம் அளிக்க கூடியதாக இருந்தாலும், இத்தகைய வாகனங்களை சாலையில் இயக்குவது என்பது சட்டத்திற்கு எதிரானது. இதுபோன்ற வாகனங்கள் அரசு அதிகாரிகளால் பரிசோதிக்கப்படுவது கிடையாது. எனவே அவற்றை நீங்கள் பொது சாலைக்கு கொண்டு வர முடியாது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Cycle Repair Shop Owner Build Electric Bike. Read in Tamil
Story first published: Thursday, October 22, 2020, 20:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X