ட்வின் பிரதர்ஸ்... டட்சன் ரெடிகோ Vs ரெனோ க்விட்: ரெண்டில் எது வாங்கலாம்?

Written By:

ஆல்ட்டோ ஆதிக்கத்தில் குறைவான போட்டி கொண்டதாக இருந்த சிறிய ரக கார் மார்க்கெட் தற்போது புதிய மாடல்களின் வரவால் போட்டி அதிகரித்துள்ளது. ஆல்ட்டோ மார்க்கெட்டை ரெனோ க்விட் கார் வந்து கலகலக்க வைத்திருக்கும் நிலையில், அடுத்ததாக டட்சன் பிராண்டில் ரெடிகோ என்ற புதிய குட்டி கார் வரும் 1ந் தேதி விற்பனைக்கு வர இருக்கிறது.

ஆல்ட்டோ 800 காரைவிட ரெனோ க்விட் கார் சிறப்பான சாய்ஸாக மாறியிருக்கும் நிலையில், ரெனோ க்விட் கார் வடிவமைக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருக்கும் டட்சன் ரெடிகோ கார், ரெனோ க்விட் விஸ்வரூபத்தை சமாளிக்க வேண்டிய நிர்பந்தத்தில் களமிறங்குகிறது. இந்தநிலையில், இரண்டு கார்களின் சிறப்பம்சங்களை இங்கே ஒப்பிட்டு காணலாம்.

 டிசைன்: டட்சன் ரெடிகோ

டிசைன்: டட்சன் ரெடிகோ

டட்சன் ரெடிகோ கார் வலுவான உடல் கட்டமைப்பு கொண்ட குட்டி காராக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. தேன்கூடு போன்ற அமைப்புடன் கூடிய அறுகோண வடிவ க்ரில் அமைப்பும், ஹெட்லைட்டும், பகல்நேர விளக்குடன் கம்பீரமான முக அமைப்பை பெற்றிருக்கிறது. பக்கவாட்டில் வலுவான பாடி லைன், பெரிய வீல் ஆர்ச்சுகளும், பின்புறத்தில் டெயில் லைட் க்ளஸ்ட்டரும் எல்லா வாடிக்கையாளர்களையும் கவரும் விதத்தில் இல்லை.

டிசைன்: ரெனோ க்விட்

டிசைன்: ரெனோ க்விட்

மினி க்ராஸ்ஓவர் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பெரிய எஸ்யூவி போன்ற முக அமைப்பு, அழகான பக்கவாட்டு தோற்றம், அதனுடன் இயைந்து போகும் பின்புற டிசைன் என நேர்த்தியான வடிவமைப்பை பெற்று நெஞ்சை கொள்ளை கொள்கிறது ரெனோ க்விட். தோற்றத்தை பொறுத்தவரையில் அனைத்து தரப்பினரையும் கவரும் டிசைன் கொண்ட மாடல் ரெனோ க்விட்தான்.

வடிவம்

வடிவம்

நீளம்:

ரெனோ க்விட் கார் 3,679மிமீ

டட்சன் ரெடிகோ கார் 3,429மிமீ

அகலம்:

ரெனோ க்விட் கார் 1,579மிமீ

டட்சன் ரெடிகோ கார் 1,560மிமீ

உயரம்:

ரெனோ க்விட் கார் 1,478மிமீ

டட்சன் ரெடிகோ கார் 1,541மிமீ

 இன்டீரியர்: டட்சன் ரெடிகோ

இன்டீரியர்: டட்சன் ரெடிகோ

டட்சன் ரெடிகோ காரின் இன்டீரியர் மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பட்ஜெட் காருக்கு இவ்வளவுதான் என்று பார்த்து பார்த்து வடிவமைத்தது போல இருக்கிறது. டேஷ்போர்டில் அட்ஜெஸ்ட் வசதி இல்லாத நடுவில் கொடுக்கப்பட்டிருக்கும் ஏசி வென்ட், பிற டட்சன் கார்களில் பார்த்த மீட்டர் கன்சோல் அமைப்புதான் இதிலும் இடம்பெற்று இருக்கிறது. சிறிய க்ளவ் பாக்ஸ் இடம்பெற்று இருக்கிறது. சொல்லிக்கொள்ளும்படி இந்த காரில் புதிய அம்சங்கள் இல்லை.

இன்டீரியர்: ரெனோ க்விட்

இன்டீரியர்: ரெனோ க்விட்

ஏ செக்மென்ட் கார்களில் டிரென்ட்டை மாற்றிக் காட்டியிருப்பது ரெனோ க்விட். வெளிப்புறத்தில் மட்டுமல்ல, உட்புறத்திலும் பல சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. புளூடூத் தொடர்பு வசதி கொண்ட டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மிக முக்கிய அம்சமாக இருக்கிறது. அடுத்து, முழுவதும் டிஜிட்டல் மீட்டர் கன்சோல் அமைப்பு என மிக கவர்ச்சியாகவும், நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கிறது ரெனோ க்விட். இன்டீரியர் அமைப்பு, வசதிகளில் ரெனோ க்விட் முன்னிலை பெறுகிறது.

எஞ்சின் ஒப்பீடு

எஞ்சின் ஒப்பீடு

எஞ்சினை மட்டும் ஒப்பிட இயலாது. ஏனெனில், இரண்டு கார்களிலும் ஒரே எஞ்சின்தான் இடம்பெற்று இருக்கிறது. 53 பிஎச்பி பவரையும், 72 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 3 சிலிண்டர்கள் கொண்ட 799சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 செயல்திறன் ஒப்பீடு

செயல்திறன் ஒப்பீடு

எஞ்சின் ஒன்றுதான் என்றாலும், இரண்டு கார்களையுமே டிரைவ்ஸ்பார்க் டீம் டெஸ்ட் டிரைவ் செய்த முறையில், ரெனோ க்விட் காரைவிட டட்சன் ரெடிகோ கார் செயல்திறனில் சற்று சிறப்பாக தெரிகிறது. ஆரம்ப நிலை பிக்கப்பில் ரெடிகோ முன்னிலை பெறுகிறது. எனவே, நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு எளிதாக இருக்கிறது.

மைலேஜ் ஒப்பீடு

மைலேஜ் ஒப்பீடு

இரண்டு கார்களின் மைலேஜும் ஒன்றுதான். அராய் சான்றின்படி, ரெனோ க்விட் மற்றும் டட்சன் ரெடிகோ என இரண்டு கார்களுமே லிட்டருக்கு 25.17 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. எமது டெஸ்ட் டிரைவின்போது ரெடிகோ கார் லிட்டருக்கு 19 கிமீ மைலேஜ் தந்தது.

இடவசதி ஒப்பீடு

இடவசதி ஒப்பீடு

சிறந்த ஹெட்ரூம் மற்றும் கால் வைக்கும் இடவசதியில் ரெனோ க்விட் காரைவிட டட்சன் ரெடிகோ கார் சிறப்பானதாக இருக்கிறது. எனவே, டட்சன் ரெடிகோ இந்த விஷயத்தில் கவனத்தை ஈர்க்கும் என நம்பலாம்.

பூட்ரூம் ஒப்பீடு

பூட்ரூம் ஒப்பீடு

டட்சன் ரெடிகோ கார் 222 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் இடவசதியை கொண்டதாக இருக்கும் நிலையில், ரெனோ க்விட் கார் 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் இடவசதியை கொண்டிருக்கிறது. அதாவது, பெரிய ஹேட்ச்பேக் கார்களைவிட அதிக பூட்ரூம் இடவசதியை ரெனோ க்விட் கார் கொண்டிருப்பது மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

கிரவுண்ட் கிளியரன்ஸ் ஒப்பீடு

கிரவுண்ட் கிளியரன்ஸ் ஒப்பீடு

ரெனோ க்விட் கார் 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கும் நிலையில், டட்சன் ரெடிகோ கார் 185மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கிறது. போட்டியாளர்களைவிட இரண்டு கார்களுமே சிறப்பான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருப்பதோடு, இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்றதாக இருக்கும். வேகத்தடைகளை கண்டு அஞ்ச வைக்காது.

விலை ஒப்பீடு

விலை ஒப்பீடு

ரெனோ க்விட் கார் ரூ.2.62 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கும் நிலையில், டட்சன் ரெடிகோ கார் ரூ.2.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. ரெனோ க்விட் காருக்கு இணையான விலையிலேயே எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு

டிசைன், சிறப்பம்சங்கள், விலை என அனைத்திலும் கொடுக்கும் பணத்திற்கு சிறப்பான கார் மாடலாக எல்லா விதத்திலும் ஸ்கோர் செய்கிறது ரெனோ க்விட். அதாவது, இதன் செக்மென்ட்டிலேயே மிகச்சிறப்பானதாக இருக்கிறது. அதிக காத்திருப்பு காலம் இருந்தாலும், ரெனோ க்விட் காருக்காக உங்களின் காத்திருப்பு வீண்போகாது. அதேநேரத்தில், புத்தம் புதிய மாடலை எதிர்பார்ப்போருக்கும், ரெனோ க்விட் காத்திருக்க முடியாது என்று முடிவு செய்தவர்களுக்கும் டட்சன் ரெடிகோ கார் மாற்றாக அமையும்.

 
English summary
Datsun RediGo Vs Renault Kwid: Comparison.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark