1000 அடி ஹெலிபேடில் காரை ஸ்பின் செய்து வெற்றியை கொண்டாடிய ரெட்புல்

துபாயில் உள்ள உலக புகழ்பெற்ற புர்ஜ் அல் அராப் ஓட்டலின் ஹெலிபேடில் காரை ஸ்பின் செய்து ரெட்புல் அணி தனது பார்முலா - 1 சாம்பியன் வெற்றியை கொண்டாடியது.

இந்த ஆண்டு ஃபார்முலா 1 போட்டியில் ரெட்புல் அணியும், அதன் வீரர் செபாஸ்டியன் வெட்டலும் சாம்பியன் பட்டம் வென்றனர். மேலும், ரெட்புல் அணியும், செபாஸ்டியன் வெட்டலும் நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர். இதனை கொண்டாடும் விதமாக துபாயிலுள்ள புகழ்பெற்ற அல் அராப் ஓட்டலின் ஹெலிபேடில் காரை ஸ்பின் செய்து கொண்டாடினர்.

ஏற்பாடு

ஏற்பாடு

துபாயின் மிக பிரபலமான நிறுவனம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. காரை ஹெலிபேடில் கொண்டு வந்து நிறுத்தியது முதல் அனைத்து பொறுப்புகளையும் அந்த நிறுவனம் ஏற்றுக் கொண்டது.

ஹெலிபேட்

ஹெலிபேட்

கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் இருக்கும் இந்த ஹெலிபேட் 24 மீட்டர் விட்டம் கொண்டது.

முன்னாள் வீரர்

முன்னாள் வீரர்

ஹெலிபேடில் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட காரை முன்னாள் ஃபார்முலா 1 வீரர் டேவிட் கூல்தார்டு அந்த காரை ஸ்பின் செய்து அசத்தினார்.

வர்ணனையாளர்

வர்ணனையாளர்

ஹெலிபேடில் இருந்த மிகக் குறைந்த இடத்தில் காரை சாதுரியமாக ஸ்பின் செய்த ரெட்புல் அணியின் முன்னாள் வீரர் டேவிட் கூல்தர்டு தற்போது பார்முலா 1 போட்டிகளுக்கான வர்ணனையாளராக பணிபுரிகிறார்.

வெட்டல் சாதனை

வெட்டல் சாதனை

மிக இளம் வயதில் பார்முலா 1 சாம்பியன் பட்டத்தை நான்கு முறை வென்றவர்கள் பட்டியலில் ரெட்புல் அணியின் ஜெர்மனி வீரரான செபாஸ்டியன் வெட்டல் பெற்றுள்ளார்.

 ரெட்புல் சாதனை

ரெட்புல் சாதனை

பார்முலா 1 சாம்பியன் பட்டத்தை நான்கு முறை வென்ற மூன்றாவது அணி என்ற பெருமை ரெட்புல் அணிக்கு கிடைத்துள்ளது.

வெற்றி மேல் வெற்றி

வெற்றி மேல் வெற்றி

இந்தியாவிற்கு அடுத்து அபுதாபியில் நடந்து முடிந்த பார்முலா 1 கார் பந்தயத்திலும் செபாஸ்டியன் வெட்டலே முதலிடம் பிடித்து சாதனை புரிந்தார். இந்த வெற்றியை ருசித்த கையோடு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அஸ்டன் மார்ட்டின் கொண்டாட்டம்

அஸ்டன் மார்ட்டின் கொண்டாட்டம்

இந்த ஆண்டு துவக்கத்தில் பிரிட்டிஷ் நிறுவனமான அஸ்டன் மார்ட்டின் தனது நூற்றாண்டு விழாவையொட்டி வாங்குஷ் காரை ஹெலிகாப்டரில் தூக்கி வந்து இந்த ஹெலிபேடில் வைத்து கொண்டாடியது நினைவிருக்கலாம்.

புகழ்பெற்ற ஹெலிபேட்

புகழ்பெற்ற ஹெலிபேட்

துபாயிலுள்ள புர்ஜ் அல் அராப் ஓட்டலின் இந்த ஹெலிபேடில் பிரபல கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் விளையாடியுள்ளார். இதுபோன்று, ரோஜர் ஃபெடரர் மற்றும் ஆந்த்ரே அகஸ்ஸி ஆகியோர் டென்னிஸ் ஆடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பின் செய்த வீடியோ

காரை ஸ்பின் செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோ இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X