ஸ்கானியா டிரெய்லர் லாரியை நடமாடும் நகைக் கடையாக மாற்றி அசத்திய டிசி!

Written By:

ஸ்கானியா டிரெய்லர் லாரியில் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் நடமாடும் நகைக் கடை கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அசத்தும் அம்சங்கள் நிறைந்த இந்த நகைக் கடையை டிசி டிசைன்ஸ் நிறுவனம் வடிவமைத்து கொடுத்துள்ளது.

சமீபத்தில் திறக்கப்பட்ட இந்த நடமாடும் நகைக் கடை கேரளாவின் பல முக்கிய நகரங்களுக்கு வருகை தர இருக்கிறது. இந்த நகைக்கடை குறித்த தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

பிரபல நகைக் கடை குழுமம்

பிரபல நகைக் கடை குழுமம்

கேரளாவை சேர்ந்த பாபி அண்ட் மரடோனா ஜூவல்லரி நிறுவனம்தான் இந்த நடமாடும் நகைக்கடையை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு கேரளா மட்டுமின்றி, வளைகுடா நாடுகளிலும், அமெரிக்காவிலும் விற்பனையகங்கள் உள்ளன. விரைவில் லண்டன், சிங்கப்பூர், சீனா, ஜப்பான், சவூதி, ஹாங்காங் ஆகிய இடங்களிலும் விற்பனையகங்களை திறக்க இருக்கிறது.

 சுவாரஸ்யம்

சுவாரஸ்யம்

பாபி செம்மனூர் இன்டர்நேஷனல் குழுமத்தின் கீழ் செயல்படும் இந்த நகைக்கடைகளில், பிரபலமான முன்னாள் கால்பந்தாட்ட வீரர் மரடோனாவும் பங்குதாரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய நகைக்கடைகளை திறக்கும்போது அவர் இந்தியா வந்து செல்வதும் குறிப்பிடத்தக்கது.

டிசி கைவண்ணம்

டிசி கைவண்ணம்

இந்த நடமாடும் ஜூவல்லரியை வடிவமைக்கும் பொறுப்பு, வாகனங்களை கஸ்டமைஸ் செய்வதில் புகழ்பெற்ற டிசி டிசைன் நிறுவனம் ஏற்றது. ஸ்கானியா ஜி410 டிரெய்லர் லாரியை நகைக்கடைக்கான கட்டமைப்பு வசதிகளுடன், பிரத்யேக அம்சங்களுடன் வடிவமைத்து கொடுத்திருக்கிறது.

அசத்தல்

அசத்தல்

மஞ்சள், கருப்பு, வெள்ளை ஆகிய வண்ணங்களுடன் வெளிப்புறம் அனைவரையும் கவரும் விதத்தில் இருப்பதுடன், இதன் அமைப்பும் விசேஷமாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. உட்புறத்தில், நகைக்கடை போன்று மிக சிறப்பாக காட்சியளிக்கிறது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

அதிநவீன பாதுகாப்பு வசதிகள், சிசிடிவி கேமரா உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளுடன் இந்த டிரெய்லரை டிசி டிசைன் நிறுவனம் கஸ்டமைஸ் செய்து கொடுத்துள்ளது. மேலும், இந்த நடமாடும் நகைக்கடையின் நகர்வு நேரடியாக பாபி அண்ட் மரடோனா நகைக் கடை நிறுவனத்தின் தலைமையகத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

திறப்பு விழா

திறப்பு விழா

கடந்த மாதம் 30ந் தேதி கோழிக்கோடு நகரில் இந்த நடமாடும் நகைக் கடையின் திறப்பு விழா நடந்தது. இதைத்தொடர்ந்து, கேரளாவின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கும் இந்த நடமாடும் நகைக் கடை செல்ல இருக்கிறது.

டிசி டிசைன் நிறுவனத்தை பிரபலமடையச் செய்த கஸ்டமைஸ் கார் மாடல்கள்!

டிசி டிசைன் நிறுவனத்தை பிரபலமடையச் செய்த கஸ்டமைஸ் கார் மாடல்கள்!

 

Source

English summary
DC Design Customises Scania Trailor into mobile jewellery.
Story first published: Saturday, July 9, 2016, 13:47 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark