இசுஸு எம்யூ-7 எஸ்யூவியின் உட்புறத்தை சொர்க்க லோகமாக மாற்றிய டிசி டிசைன்ஸ்!

By Saravana Rajan

கார்களில் கூடுதல் வசதிகள் மற்றும் தோற்றத்தில் வித்தியாசத்தை கொடுத்து மறுவடிவமைப்பு செய்வதில் டிசி டிசைன்ஸ் நிறுவனம் பிரபலமாக விளங்குகிறது. டொயோட்டா இன்னோவாவுக்கு டிசி டிசைன் நிறுவனம் வழங்கி வரும் கஸ்டமைஸ் ஆப்ஷன்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலம்.

இந்த நிலையில், இசுஸு எம்யூ- 7 எஸ்யூவியின் இன்டிரியரை சொர்க்க லோகமாக மாற்றிக் காட்டியிருக்கிறது டிசி டிசைன்ஸ். இதுகுறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சத்தமில்லா வெற்றி...

சத்தமில்லா வெற்றி...

இசுஸு எம்யூ7 பிரிமியம் எஸ்யூவி இந்திய மார்க்கெட்டில் விற்பனையில் ஓரளவு வரவேற்பை பெற்றிருக்கிறது. சொகுசு கார்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் கூட அதிக எண்ணிக்கையில் இந்த எஸ்யூவியை வாங்கி வருகின்றன.

இடவசதிதான் காரணம்...

இடவசதிதான் காரணம்...

இசுஸு எம்யூ-7 எஸ்யூவியை பலரும் விரும்பி வாங்குவதற்கு காரணம் உட்புறத்தில் மிக சிறப்பான இடவசதியை அளிப்பதுதான். அதன் காரணமாகவே இந்த எஸ்யூவியை தேர்வு செய்து இன்டிரியர் கஸ்டமைஸ் ஆப்ஷனை வழங்குவதாக டிசி டிசைன்ஸ் தெரிவித்துள்ளது.

இன்டிரியர் சிறப்பம்சங்கள்

இன்டிரியர் சிறப்பம்சங்கள்

டேன் மற்றும் வெள்ளை நிறத்தில் இரட்டை வண்ணத்திலான அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. நான்கு கதவுகளின் உட்புறத்திலும், டி பில்லரிலும் தேக்கு மரத் தகடுகள் பதிக்கப்ப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. கருப்பு வண்ண மிதியடியும், கருப்பு வண்ணத்திலான உட்புற கூரை அலங்காரமும் ஆப்ஷனலாக தரப்படுகிறது.

சென்டர் கன்சோல்

சென்டர் கன்சோல்

சென்டர் கன்சோல் மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. புதிய ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சென்டர் கன்சோலை சுற்றிலும் தேக்கு மரத்தகடுகளாலும், க்ரோம் பூச்சு பாகங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், 2 பாட்டில் ஹோல்டர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இருக்கைகள்

இருக்கைகள்

அனைத்தும் லெதர் இருக்கைகள், அத்துடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருக்கின்றன. இதனால், மிக மிக சொகுசான பயணத்தை வழங்கும்.

ஏசி சிஸ்டம்

ஏசி சிஸ்டம்

மெக்கானிக்கல் ஏசி சிஸ்டம், தொடு திரை மூலமாக இயக்கக்கூடிய க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டமாக மாறுதல் செய்யப்பட்டிருக்கிறது.

 ஐ- பேட் ஆப்ஷனல்

ஐ- பேட் ஆப்ஷனல்

பின் வரிசை இருக்கைகளில் அமரும் பயணிகளுக்கு பொழுதுபோக்கை வழங்குவதற்காக டிரைவர் இருக்கை மற்றும் முன்வரிசை பயணிக்கான இருக்கையின் பின்புறத்தில் 2 ஐ-பேட் பொருத்தித் தரப்படுகிறது. இது ஆப்ஷனலாக வாடிக்கையாளர் விருப்பத்தின் பேரில் வாங்கிக் கொள்ளலாம்.

 கட்டணம்

கட்டணம்

இசுஸு எம்யூ-7 எஸ்யூவியை இதுபோன்று மாற்றித் தருவதற்கு தோராயமாக 3.5 லட்சம் கட்டணமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Most Read Articles
English summary
DC Design, has unveiled a new exclusive interior design concept for the spacious and powerful Isuzu MU-7 Sports Utility Vehicle (SUV). Though, the customised interiors offered by ‘DC Design’ will not come as standard features of the MU-7, currently.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X