ஸ்விஃப்ட் காரின் அழகை சிதைத்த டிசி டிசைன்ஸ்

Written By:

மாருதி ஸ்விஃப்ட் காரை கஸ்டமைஸ் செய்து வெளியிட்டிருக்கிறது டிசி டிசைன்ஸ் நிறுவனம். ஆனால், அனைவரும் அதிருப்தியுறும் வகையில், இந்த முறை ஸ்விஃப்ட் காரை கஸ்டமைஸ் செய்திருக்கிறது டிசி டிசைன்ஸ்.

ஸ்விஃப்ட் காரின் டிசைனில் கை வைக்க சுஸுகி டிசைன் நிபுணர்களேஅச்சப்படும் நிலையில், புதிய ஸ்விஃப்ட் காரின் வெளித்தோற்ற டிசைனை எதிர்பார்த்த அளவு மாற்றங்கள் இல்லாமல், அழகு கெடுத்துவிடும் வகையில், டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை வெளியிடப்பட்ட டிசி டிசைன் நிறுவனத்தின் கஸ்டமைஸ் மாடல்களில் மிக மோசமான டிசைனாக இதுவே இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. கஸ்டமைஸ் செய்யப்பட்ட ஸ்விஃப்ட் காரின் படங்களை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

முன்னழகு

முன்னழகு

காரில் அழகு சேர்ப்பதற்காக எல்இடி விளக்குகள் பொருத்தப்படுகின்றன. ஆனால், இந்த ஸ்விஃப்ட் காரில் அது பொருத்தப்பட்டிருக்கும் இடம் காரின் அழகை குலைப்பதாக இருக்கிறது.

பின்னழகு

பின்னழகு

பம்பர் டிசைனை மாற்றினால் காருக்கு இன்னும் ஸ்போர்ட்டியாக காட்டலாம் என நினைத்து மாற்றங்களை செய்துள்ளனர். அது

உள்பக்கம்

உள்பக்கம்

க்ரீம் கலரின் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது. இருக்கை, டேஷ்போர்டு என எங்கு பார்த்தாலும் க்ரீம் கலராகவே காட்சி தருகிறது. அதில், சிவப்பு நிற வண்ணக்கலவையையும், கருப்பு நிறத்தையும் கலந்து கட்டியுள்ளனர். ஆனால், இது எல்லோரையும் ஈர்க்கும் என்று கூற முடியாது.

லெதர் அப்ஹோல்ஸ்டரி

லெதர் அப்ஹோல்ஸ்டரி

காரின் உட்பக்கம் லெதர் அப்ஹோல்ஸ்டரி கொடுக்கப்பட்டிருப்பதை குறிப்பிட்டு கூறலாம். இந்த காரை கஸ்டமைஸ் செய்வதற்கான கட்டணம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

உங்களது கருத்து

உங்களது கருத்து

ஸ்விஃப்ட் காரின் அழகை டிசி டிசைன்ஸ் மேம்படுத்தியிருக்கிறதா அல்லது குலைத்துவிட்டதா என்பது குறித்த உங்களது கருத்தை கருத்துப் பெட்டியில் பகிர்ந்துகொள்ளலாம்.

 
English summary
Car customisation has been in trend for a long time now. DC Designs has been a major player in this game. Here is a Swift customised by DC, that could have rather looked better without. 
Story first published: Friday, February 6, 2015, 15:42 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark