தனிபட்ட வாகனங்களை அதிகமாக பயன்படுத்தும் நகரங்கள்... 2-வது இடத்தில் சென்னை

Written By:

தனி வாகனங்கள் மூலம் அதிகமான மக்கள் பயணிக்கும் நகரங்களின் பட்டியலில் டெல்லி முதல் இடத்திலும், அதற்கு அடுத்த இடத்தில் சென்னையும் உள்ளது.

இந்தியாவின் எந்த நகரத்தில் உள்ள மக்கள், கார், வேன் அல்லது ஜீப் போன்ற தனி வாகன போக்குவரத்து முறைகளை அதிகமாக உபயோகபடுத்துகின்றனர் என உங்களுக்கு தெரியுமா?

இது குறித்த விவரங்கள் வரும் ஸ்லைடர்களில் உங்களுக்கு வழங்கப்படுகிறது.

அதிக தனிநபர் போக்குவரத்து கொண்ட நகரங்கள்;

அதிக தனிநபர் போக்குவரத்து கொண்ட நகரங்கள்;

2011-ஆம் ஆண்டில் எடுக்கபட்ட சென்சஸ் கணக்கெடுப்பின் படி, டெல்லியில் தான் கார், வேன் அல்லது ஜீப் போன்ற அதிக அளவிலான தனிபட்ட போக்குவரத்து வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர்.

டெல்லியில், 10.79 சதவிகிதம் என்ற மிக அதிக அளவிலான பணியாளர்கள், தனிபட்ட போக்குவரத்து வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர்.

இதற்கு அடுத்த இடத்தில், சென்னையில் உள்ள பணியாளர்கள், 6.14 சதவிகிதம் என்ற அளவில் தனிபட்ட போக்குவரத்து வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர்.

மும்பையில், 4.78 சதவிகிதம் என்ற அளவிலான பணியாளர்கள், தனிபட்ட போக்குவரத்து வழிமுறைகளை உபயோகிக்கின்றனர்.

கொல்கத்தாவில் உள்ள 2.93 சதவிகிதம் என்ற அளவிலான பணியாளர்கள், தனிபட்ட போக்குவரத்து வழிமுறைகளை உபயோகிக்கின்றனர்

பெங்களூரூவில் உள்ள 2.72 சதவிகிதம் என்ற அளவிலான பணியாளர்கள், தனிபட்ட போக்குவரத்து வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர்.

டெல்லி மக்களின் போக்குவரத்து பற்றிய அலசல்;

டெல்லி மக்களின் போக்குவரத்து பற்றிய அலசல்;

இந்தியாவின் வேறு எந்த நகரங்களையும் ஒப்பிடுகையில், டெல்லியில் நல்ல மெட்ரோ போக்குவரத்து திட்டம் நடைமுறையில் உள்ளது. வார நாட்களில், காலை 8 மணி முதல் 11 மணி முதல் வரை மட்டும் சுமார் 1 லட்சம் பேர், டெல்லி மெட்ரோ போக்குவரத்தை உபயோகம் செய்கின்றனர்.

எனினும், போக்குவரத்து துறை அமைச்சகத்தின் தகவல்களின் படி, டெல்லியில் தான் அதிக அளவிலான கார்கள் உள்ளது.

இது குறித்து, "உச்சி வேளையில் கூட்டம் மிகுந்த ரயில்களில் செல்வீர்களா அல்லது நெறுக்கடியான சாலைகளில் பயணிப்பீர்களா?" என்று டெல்லி மக்கள் ஒரு சிலரிடம் கருத்துகள் கேட்கபட்டது.

இது குறித்து பதில் அளித்த திலீப் சிங் என்ற ஜெனரல் மேனேஜர், "டெல்லி போன்ற அதிக அளவிலான மக்கள் கொண்ட நகரத்தில், காலை மற்றும் மாலை நேரங்களில், ரயில்களில் பயணிக்கும் மக்களின் அளவை மெட்ரோ தாங்கும் அளவில் இல்லை. மேலும், டெல்லியில் கார் வைத்திருப்பது ஒரு சமுதாய அந்தஸ்து சின்னமாக உள்ளது என திலீப் சிங் கூறினார்.

சென்னை மக்களின் போக்குவரத்து பற்றிய அலசல்;

சென்னை மக்களின் போக்குவரத்து பற்றிய அலசல்;

சென்னையில் பொது போக்குவரத்து அமைப்புகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக கருதப்படுகிறது. இதனால், பணியாளர்கள் கார்கள் மற்றும் வேன்களை உபயோகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சோழிங்கநல்லூரில் தகவல் தொழில்நுட்பதுறையில் பணி புரியும் ராஜீவ் பல்ராம், "நாங்கள் செல்லும் பணி இடங்களுக்கு ஒரு குறிபிட்ட அளவுக்கு மேல், ரயில், பஸ் போன்ற பொது போக்குவரத்து வழிமுறைகளை உபயோகம் செய்ய முடியவில்லை. அதன் பின்னர், ஷேர் ஆட்டோக்கள், கேப்கள் மற்றும் கார்களின் உதவியை நாட வேண்டிய நிலை உள்ளது" என கூறுகிறார்.

கொல்கத்தா மக்களின் போக்குவரத்து பற்றிய அலசல்;

கொல்கத்தா மக்களின் போக்குவரத்து பற்றிய அலசல்;

இந்தியாவிலேயே, கொல்கத்தா தான் மிகவும் நீடித்து நிலைக்க கூடிய வகையிலான போக்குவரத்து அமைப்பு கொண்டுள்ளது என உலக வங்கி மூலம் தேர்வு செய்யபட்டுள்ளது.

அங்கு, 3 சதவிகிதத்திற்கும் குறைவான மக்கள், பணியிடங்களுக்கு தாங்களே வாகனங்களை இயக்கி செல்கின்றனர்.

கொல்கத்தாவில், மெட்ரோ, பஸ்கள், ஆட்டோக்கள், டிராம்கள் உள்ளிட்ட நல்ல நிலையில் இயங்கும் போக்குவரத்து அமைப்புகள் செம்மையாக இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடதக்கது.

டெல்லி / கொல்கத்தா போக்குவரத்து ஒப்பீடு;

டெல்லி / கொல்கத்தா போக்குவரத்து ஒப்பீடு;

கொல்கத்தாவில் அங்கு இயங்கும் ரயில் நெட்வர்க்களை, ஒரு நாளைக்கு 35 லட்சம் பேர் உப்யோகிக்கின்றனர். மெட்ரோ ரயில் சேவையை 5 லட்சம் பயணிகள் உபயோகம் செய்கின்றனர்.

டிராம்கள் மற்றும் டேக்ஸிகளை, 6 முதல் 7 சதவிகித மக்கள் பிரயோகின்றனர். ஆக மொத்தம், இவ்வகை போக்குவரத்து வழிகளை மொத்தம் 16 லட்சம் பேர் உப்யோகிக்கின்றனர் என்று தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து ; இந்திய போக்குவரத்து அமைப்புகளுக்கு புத்துயிர் ஊட்ட பட வேண்டும்.

உங்களிடம் இதற்கான யோசனைகள் உள்ளதா?

English summary
Delhi, Chennai Tops The List For Highest Commuters By Car according to Census Data. The 2011 Census data shows that, Delhi has the highest number of workers who commute by car at 10.79%. In second is Chennai at 6.14% and Mumbai in third at 4.78%.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark