முதல் அமைச்சர்னா இப்படி இருக்கனும்... தரமான சம்பவத்தை செய்த கெஜ்ரிவால்... இந்தியாவிற்கே முன்னுதாரணம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்தியாவிற்கே முன்னுதாரணமாக தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளார்.

முதல் அமைச்சர்னா இப்படி இருக்கனும்... தரமான சம்பவத்தை செய்த கெஜ்ரிவால்... இந்தியாவிற்கே முன்னுதாரணம்

கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸ், தற்போது உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத அசாதாரண சூழலை, கோவிட்-19 ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கூறப்படும் கோவிட்-19 வைரஸ், உலக வல்லரசான அமெரிக்காவையே ஆட்டி படைத்து வருகிறது.

முதல் அமைச்சர்னா இப்படி இருக்கனும்... தரமான சம்பவத்தை செய்த கெஜ்ரிவால்... இந்தியாவிற்கே முன்னுதாரணம்

அமெரிக்கா தவிர இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளும் மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, உலகின் பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவை தற்போது அமலுக்கு கொண்டு வந்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

MOST READ: ஷாருக்கானுக்கு ஆம்னி... சச்சின் டெண்டுல்கரின் முதல் கார் எதுன்னு தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க...

முதல் அமைச்சர்னா இப்படி இருக்கனும்... தரமான சம்பவத்தை செய்த கெஜ்ரிவால்... இந்தியாவிற்கே முன்னுதாரணம்

இந்தியாவை பொறுத்தவரை வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. நீண்ட நாட்களாக ஊரடங்கு அமலில் இருப்பதால், தொழிலாளர்கள் பலர் வேலையிழந்துள்ளனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில், பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அவை போதுமானதாக இல்லை என்று தொழிலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

முதல் அமைச்சர்னா இப்படி இருக்கனும்... தரமான சம்பவத்தை செய்த கெஜ்ரிவால்... இந்தியாவிற்கே முன்னுதாரணம்

குறிப்பாக ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதை போல், ஆட்டோக்களும் தற்போது இயக்கப்படுவதில்லை. இதனால் ஆட்டோ டிரைவர்கள் வருமானம் இல்லாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இவர்களில் பலர் தினந்தோறும் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்துபவர்கள்.

MOST READ: வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... அதிரடி முடிவை எடுத்த பெட்ரோல் பங்க் டீலர்கள்... என்னனு தெரியுமா?

முதல் அமைச்சர்னா இப்படி இருக்கனும்... தரமான சம்பவத்தை செய்த கெஜ்ரிவால்... இந்தியாவிற்கே முன்னுதாரணம்

இதனால் அரசு உதவி செய்ய வேண்டும் என ஆட்டோ டிரைவர்களின் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. அவர்களின் கோரிக்கைகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி மாநில அரசு பரிசீலனை செய்தது. இதன்பின் ஆட்டோ டிரைவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

முதல் அமைச்சர்னா இப்படி இருக்கனும்... தரமான சம்பவத்தை செய்த கெஜ்ரிவால்... இந்தியாவிற்கே முன்னுதாரணம்

சொன்னதை போலவே ஆட்டோ டிரைவர்களின் வங்கி கணக்குகளில் தலா 5 ஆயிரம் ரூபாயை செலுத்தும் பணிகளை டெல்லி மாநில அரசு தற்போது தொடங்கியுள்ளது. 23 ஆயிரம் ஆட்டோ டிரைவர்களின் வங்கி கணக்குகளில் தற்போது தலா 5 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் இந்த தகவலை கூறியுள்ளார்.

MOST READ: இதுவரை யாருமே கையில் எடுக்காத புதிய அஸ்திரம்... கொரோனாவிற்கு ஸ்கெட்ச் போட்ட கேரளா... வேற லெவல் சார்...

முதல் அமைச்சர்னா இப்படி இருக்கனும்... தரமான சம்பவத்தை செய்த கெஜ்ரிவால்... இந்தியாவிற்கே முன்னுதாரணம்

கொரோனா வைரஸ் ஊரடங்கின்போது, நேரடி பரிமாற்ற திட்டத்தின் மூலமாக, 23 ஆயிரம் ஆட்டோ ரிக்ஸா டிரைவர்களுக்கு, தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் நேற்று (ஏப்ரல் 20) தெரிவித்தார். இதன் காரணமாக ஆட்டோ டிரைவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

முதல் அமைச்சர்னா இப்படி இருக்கனும்... தரமான சம்பவத்தை செய்த கெஜ்ரிவால்... இந்தியாவிற்கே முன்னுதாரணம்

இது தொடர்பாக கைலாஷ் கெலாட் கூறுகையில், ''ஒட்டுமொத்தமாக 1.60 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. இதில், 23 ஆயிரம் ஆட்டோ டிரைவர்களுக்கு, நேரடி பரிமாற்ற திட்டத்தின் மூலமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆதார் மற்றும் அக்கௌண்ட் எண்களை சரிபார்த்த பிறகு, இந்த தொகை கொடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

MOST READ: உல்லாச கப்பல்களின் அதிர வைக்கும் மறுபக்கம்... ரகசிய சிறைச்சாலை, பிணவறை இருப்பது எதற்காக தெரியுமா?

முதல் அமைச்சர்னா இப்படி இருக்கனும்... தரமான சம்பவத்தை செய்த கெஜ்ரிவால்... இந்தியாவிற்கே முன்னுதாரணம்

இதுகுறித்து கைலாஷ் கெலாட் மேலும் கூறுகையில், ''இதுதவிர இன்னும் சுமார் 20 ஆயிரம் விண்ணப்பங்களை நாங்கள் சரிபார்த்துள்ளோம். அவர்களின் வங்கி கணக்குகளில் எந்த நேரத்திலும் பணத்தை செலுத்துவோம்'' என்றார். டெல்லி அரசின் இந்த அதிரடி நடவடிக்கை ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் அமைச்சர்னா இப்படி இருக்கனும்... தரமான சம்பவத்தை செய்த கெஜ்ரிவால்... இந்தியாவிற்கே முன்னுதாரணம்

இது தொடர்பாக பேசியுள்ள ராகுல் குமார் என்ற ஆட்டோ டிரைவர், லைசென்ஸ் வெப்சைட்டில் விண்ணப்பம் செய்ததாகவும், அடுத்த மூன்றே நாட்களில் அவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''லைசென்ஸ் வெப்சைட்டில் விண்ணப்பித்தேன். அதன் பின் எனது வங்கி கணக்கில் மூன்றே நாட்களில் பணம் வந்து விட்டது.

முதல் அமைச்சர்னா இப்படி இருக்கனும்... தரமான சம்பவத்தை செய்த கெஜ்ரிவால்... இந்தியாவிற்கே முன்னுதாரணம்

லாக் டவுன் நேரத்தில், அரசாங்கத்திடம் இருந்து ஒருவர் 5 ஆயிரம் ரூபாயை பெறுவது என்பது உண்மையில் மிகப்பெரிய விஷயம்'' என்றார். அதே சமயம் தொழில்நுட்பம் தெரியாத காரணத்தால், ஒரு சில ஆட்டோ டிரைவர்களால் இந்த திட்டத்தின் பலனை பெற முடியவில்லை என்று மற்றொரு ஆட்டோ டிரைவரான சிவக்குமார் என்பவர் கூறியுள்ளார்.

முதல் அமைச்சர்னா இப்படி இருக்கனும்... தரமான சம்பவத்தை செய்த கெஜ்ரிவால்... இந்தியாவிற்கே முன்னுதாரணம்

இதுகுறித்து அவர் கூறுகையில், ''முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மிகவும் அருமையான திட்டம் இது. ஆனால் ஒரு சில ஆட்டோ டிரைவர்களுக்கு இதன் பலனை எப்படி பெறுவது என்பது தெரியவில்லை. எனவே அவர்களுக்காகவும் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நான் கேட்டு கொள்கிறேன்'' என்றார்.

முதல் அமைச்சர்னா இப்படி இருக்கனும்... தரமான சம்பவத்தை செய்த கெஜ்ரிவால்... இந்தியாவிற்கே முன்னுதாரணம்

ஆட்டோ டிரைவர் ராகுல் குமார் சொன்னது போல், இந்த ஊரடங்கு நேரத்தில் அரசாங்கத்திடம் இருந்து ஒருவர் 5 ஆயிரம் ரூபாயை பெறுவது என்பது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்தான். ஊரடங்கால் முடங்கி கிடக்கும் ஆட்டோ டிரைவர்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் இந்த தொகை உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

முதல் அமைச்சர்னா இப்படி இருக்கனும்... தரமான சம்பவத்தை செய்த கெஜ்ரிவால்... இந்தியாவிற்கே முன்னுதாரணம்

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. ஆட்டோ, பேருந்து சேவைகள் மட்டுமல்லாது, ரயில், விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கார், பைக் போன்ற தனியார் வாகனங்களும் பெரும்பாலும் சாலைக்கு வருவதில்லை. இதனால் இந்திய சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதுடன், பெட்ரோல், டீசல் விற்பனை சரிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Delhi: Rs.5,000 Transferred Into 23,000 Auto-rickshaw Drivers Bank Accounts During Covid-19 Lockdown. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X