முதல்ல உலோக விற்பனைனுதான் சொல்லிட்டு வந்தாங்க... மஹிந்திரா நிறுவனம் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஷ்ய தகவல்கள்

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் பற்றி நம்மில் பலர் அறிந்திரா சுவாரஷ்ய தகவல்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

கார் விற்பனையில் ஜொலிக்கும் மஹிந்திரா முதன் முதல்ல எத விற்பனை செஞ்சாங்க தெரியுமா? சொன்ன நம்பவே மாட்டீங்க!

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் மஹிந்திரா (Mahindra) நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் இந்திய சந்தையில் பல தசாப்தங்களாக வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிறுவனம் நாட்டை மையமாகக் கொண்டு பல தொழில்களில் ஈடுபட்டு வந்தாலும், வாகன வணிகத்திற்கே பெயர்போன நிறுவனமான இது காட்சியளிக்கின்றது.

கார் விற்பனையில் ஜொலிக்கும் மஹிந்திரா முதன் முதல்ல எத விற்பனை செஞ்சாங்க தெரியுமா? சொன்ன நம்பவே மாட்டீங்க!

ஆனந்த் மஹிந்திரா

நிறுவனத்தின் தயாரிப்புகளான எக்ஸ்யூவி300, எக்ஸ்யூவி500, தார் மற்றும் சமீபத்திய அறிமுகமான எக்ஸ்யூவி700 உள்ளிட்ட கார்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இத்தகைய ஓர் நிறுவனத்தை உங்களில் பலருக்கு தெரியாத சில முக்கிய தகவல்களையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றது. வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

கார் விற்பனையில் ஜொலிக்கும் மஹிந்திரா முதன் முதல்ல எத விற்பனை செஞ்சாங்க தெரியுமா? சொன்ன நம்பவே மாட்டீங்க!

ஜேசி மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் முதலில் வாகன நிறுவனமே அல்ல:

மேலே ஏதோ மாத்தி டைப் பண்ணிட்டாங்களோனோ நினைக்காதீங்க. சரியாகதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் முதன் முதலில் உலோக வர்த்தக நிறுவனமாகவே தொடங்கப்பட்டது. இந்த பணியை 1945ஆம் ஆண்டில் தொடங்கியது மஹிந்திரா குழுமம். மஹிந்திரா சகோதரர்கள் மற்றும் குலாம் முகமது ஆகியோரின் ஒத்துழைப்பால் தொடங்கப்பட்டதே இந்நிறுவனம் ஆகும்.

கார் விற்பனையில் ஜொலிக்கும் மஹிந்திரா முதன் முதல்ல எத விற்பனை செஞ்சாங்க தெரியுமா? சொன்ன நம்பவே மாட்டீங்க!

கேசி மஹிந்திரா

நிறுவனத்தின் அசல் பெயர் மஹிந்திரா மற்றும் முகமது ஆகும். இருப்பினும், 1948ம் ஆண்டில் முகமது பாகிஸ்தான் நாட்டின் முதல் பிரதரமானார். இதையடுத்து மஹிந்திரா சகோதரர்கள் மட்டும நிறுவனத்தை கையாளும் நிலை உருவாகியது. இதன் பின்னர் நிறுவனம் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா லிமிடெட் என்று பெயர் மாற்றப்பட்டது.

கார் விற்பனையில் ஜொலிக்கும் மஹிந்திரா முதன் முதல்ல எத விற்பனை செஞ்சாங்க தெரியுமா? சொன்ன நம்பவே மாட்டீங்க!

வாகனத்துறையில் மஹிந்திராவின் என்ட்ரீ

இந்த மாற்றங்களுக்கு பின்னரே மிகப் பெரிய வரலாற்று பதிவை மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனம் செய்தது. நிறுவனம் வாகனத்துறையில் கால் தடம் பதித்தது. அது 1954ம் ஆண்டிலேயே இந்த பணியில் களமிறங்கியது. இதற்காக நிறுவனம் கைகோர்த்த நிறுவனம் வில்லிஸ் ஓவர்லேண்ட் கார்ப்பரேஷன் (Willys Overland Corporation).

கார் விற்பனையில் ஜொலிக்கும் மஹிந்திரா முதன் முதல்ல எத விற்பனை செஞ்சாங்க தெரியுமா? சொன்ன நம்பவே மாட்டீங்க!

இந்நிறுவனத்துடனான இணைவின் வாயிலாகவே நிறுவனம் ஜீப் ரக வாகனத்தை உருவாக்கியது. இதுவே நிறுவனம் வாகன உலகில் கால் தடம் பதித்து உருவாக்கிய முதல் வாகனமாகும். இந்த தொடக்கமே தற்போது மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் மாடலில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. வரும் காலத்தில் இன்னும் பல புதிய தயாரிப்புகளைக் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

கார் விற்பனையில் ஜொலிக்கும் மஹிந்திரா முதன் முதல்ல எத விற்பனை செஞ்சாங்க தெரியுமா? சொன்ன நம்பவே மாட்டீங்க!

இதுமட்டுமின்றி, ராணுவ பயன்பாட்டு வசதிக் கொண்ட வாகனங்கள், விவசாய பணிகளுக்கு உதவக் கூடிய வாகனங்கள் மற்றும் விமானம்-ஹெலிகாப்படர்களுக்கான கூறுகள் ஆகியவற்றை தயாரிக்கும் பணிகளையும் நிறுவனம் தற்போது தயாரித்து வருகின்றது. நிறுவனத்தின் குறிப்பிட்ட சில தயாரிப்புகளுக்கு இந்திய அரசு துறைகளில் மிகப் பெரிய வரவேற்பு நிலவுவது குறிப்பிடத்தகுந்தது.

கார் விற்பனையில் ஜொலிக்கும் மஹிந்திரா முதன் முதல்ல எத விற்பனை செஞ்சாங்க தெரியுமா? சொன்ன நம்பவே மாட்டீங்க!

சிஆர்டிஇ (CRDe) எஞ்ஜினை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நிறுவனம்:

காமன் ரெயில் டீசல் எஞ்ஜின் எனப்படும் மோட்டாரை இந்தியாவில் முதன் முதலில் அறிமுகப்படுத்திய நிறுவனமாக மஹிந்திரா இருக்கின்றது. 2005ம் ஆண்டு இந்த எஞ்ஜின் முதல் முறையாக நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை பெற்ற முதல் தயாரிப்பு ஸ்கார்பியோ ஆகும். இந்தியாவில் ஸ்கார்பியோவை மிகவும் பிரபலமான வாகனமாக மாற்ற பெரும் உதவியாக இருந்தவைகளில் இந்த எஞ்ஜினும் ஒன்று.

கார் விற்பனையில் ஜொலிக்கும் மஹிந்திரா முதன் முதல்ல எத விற்பனை செஞ்சாங்க தெரியுமா? சொன்ன நம்பவே மாட்டீங்க!

மின்சார வாகன உலகில் கால் தடம் பதித்த மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் புதுமைகளுக்கு பெயர்போன நிறுவனம். எந்த நிறுவனம் முன்னெடுக்காத நிலையில், முன்னெடுக்க தயங்க நிலையில், மஹிந்திரா நிறுவனம் மின் வாகன பிரிவில் கால் தடம் பதித்தது. நிறுவனம் ரிவா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் 55 சதவீத பங்குகளை 2010 இல் கையகப்படுத்தியது.

கார் விற்பனையில் ஜொலிக்கும் மஹிந்திரா முதன் முதல்ல எத விற்பனை செஞ்சாங்க தெரியுமா? சொன்ன நம்பவே மாட்டீங்க!

இதைத்தொடர்ந்து, மிக சிறிய உருவம் கொண்ட ரெவா எலெக்ட்ரிக் காரை நிறுவனம் இந்தியாவில் களமிறக்கியது. இந்த நிலையிலேயே ரெவா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முழு (100 சதவீத) பங்கையும் நிறுவனம் கையகப்படுத்தியது. இதன் பின்னர் அந்நிறுவனத்திற்கு மஹிந்திரா எலெக்ட்ரிக் எனும் பெயர் மாற்றத்தை அது வழங்கியது.

கார் விற்பனையில் ஜொலிக்கும் மஹிந்திரா முதன் முதல்ல எத விற்பனை செஞ்சாங்க தெரியுமா? சொன்ன நம்பவே மாட்டீங்க!

மிக சிறந்த வாகன விற்பனையாளர்களில் மஹிந்திராவும் ஒன்று

மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகள் பாதுகாப்பு மற்றும் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுக்கு பெயர்போனவையாக இருக்கின்றது. பாதுகாப்பு மிக சிறந்த உதாரணமாக எக்ஸ்யூவி300 எஸ்யூவி கார் மாடல் இருக்கின்றது. இந்த கார் மாடல் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்தி மோதல் ஆய்வில் ஐந்திற்கு ஐந்து நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது.

கார் விற்பனையில் ஜொலிக்கும் மஹிந்திரா முதன் முதல்ல எத விற்பனை செஞ்சாங்க தெரியுமா? சொன்ன நம்பவே மாட்டீங்க!

இதுமட்டுமின்றி நாட்டின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காரிலும் இந்த கார் குறிப்பிடத்தகுந்த நல்ல இடத்தை பிடித்துள்ளது. கடந்த நவம்பர் மாத விற்பனையில் 4006 யூனிட்டுகள் எனும் உச்ச விற்பனையைப் பெற்று இக்கார் நாட்டின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களின் பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடித்தது.

கார் விற்பனையில் ஜொலிக்கும் மஹிந்திரா முதன் முதல்ல எத விற்பனை செஞ்சாங்க தெரியுமா? சொன்ன நம்பவே மாட்டீங்க!

இதற்கு அடுத்தபடியாக மிக சிறந்த தொழில்நுட்பங்களுக்கு உதாரணமாக எக்ஸ்யூவி700 வந்திருக்கின்றது. இந்த காரில் அடாஸ் மற்றும் ஸ்மார்ட் ரக கை பிடிகள் என பல அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை மஹிந்திரா நிறுவனம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமாதிரியான சிறப்பு வசதிகளின் காரணத்தினால் இக்காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கிய இரண்டே நாட்களில் 50 ஆயிரம் யூனிட்டுகள் புக்கிங்கை அது பெற்றது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Did you know these things about mahindra and mahindra
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X