TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
ஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ! லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது
லைசென்ஸ், ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ் போன்ற வாகனம் தொடர்பான ஆவணங்களின் ஒரிஜினலை கேட்டு, வசூல் வேட்டையில் ஈடுபடும் போலீசாருக்கு ஆப்பு வைக்கும் வகையிலான உத்தரவை அரசு வெகு விரைவில் பிறப்பிக்கவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
வாகன தணிக்கையில் ஈடுபடும் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் ஆகியோர் வாகன ஓட்டிகளின் டிரைவிங் லைசென்ஸ், வாகனத்தின் ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிபிகேட் (ஆர்சி புத்தகம்), இன்சூரன்ஸ், மாசு கட்டுப்பாடு சான்றிதழ் ( PUC சர்டிபிகேட்) உள்ளிட்ட ஆவணங்களை சோதனையிடுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆவணங்களின் டிஜிட்டல் வெர்ஷனை, அதிகாரிகளும், போலீசாரும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை கொடுத்து வருகிறது. ஏனெனில் மேற்கண்ட ஆவணங்கள் அனைத்தும் மிக மிக முக்கியமானவை.
அந்த ஆவணங்களின் ஒரிஜினலை எந்நேரமும் வாகனங்களில் வைத்து கொண்டு பயணிக்க முடியாது. ஏனெனில் இந்த ஆவணங்கள் தொலைந்து விட்டால், அதனை மீண்டும் பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் நிலவி வருகின்றன.
எந்த வகையான வாகனம் ஓட்டினாலும், ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு அமல்படுத்தியது. இதை பயன்படுத்தி கொண்டு தமிழகம் முழுவதும் ஒரு சில போலீசார் வசூல் வேட்டையில் இறங்கினர்.
எனவே ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க உத்தரவிட வலியுறுத்தி, லாரி டிரைவர்கள் சம்மேளனத்தினர் உள்பட வாகன ஓட்டிகள் பலர் நீதிமன்ற படியேறிய விஷயம் அனைவரும் அறிந்ததே.
போலீசாரின் வசூல் வேட்டை இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், ஒரிஜினல் ஆவணம் தொலைந்து விட்டால், அதை மீண்டும் பெறுவதில் உள்ள சிக்கல்கள்தான், வாகன ஓட்டிகளையும், சமூக ஆர்வலர்களையும் அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு குரல் கொடுக்க தூண்டியது.
எனவே லைசென்ஸ், ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களின் டிஜிட்டல் வெர்ஷனை, வாகன தணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளும், போலீசாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற குரல் வாகன ஓட்டிகள் மத்தியில் மிக நீண்ட நாட்களாகவே ஒலித்து கொண்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கோஷம் நாடு முழுவதும் ஒலித்து கொண்டிருக்கும் வேளையில், வாகனம் தொடர்பான ஆவணங்களின் டிஜிட்டல் வெர்ஷனை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்? என்றும் வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கு மத்திய அரசு தற்போது செவிமடுத்துள்ளது. வாகனம் தொடர்பான ஆவணங்களின் டிஜிட்டல் வெர்ஷனை, போக்குவரத்து துறை அதிகாரிகளும், போலீசாரும் கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற விதி மிக விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.
இதற்காக மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இரு தினங்களில் வெளியாகலாம் என்ற தகவல்கள் வந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த விதி அமல்படுத்தப்பட்டு விட்டால், டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ், பியூசி சர்டிபிகேட் உள்பட வாகனம் தொடர்பான அனைத்து ஆவணங்களின் டிஜிட்டல் வெர்ஷனை அதிகாரிகளும், போலீசாரும் கட்டாயமாக ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
எனவே முக்கியமான ஆவணங்களின் ஒரிஜினல்களை வீட்டிலேயே பத்திரமாக வைத்து கொள்ள முடியும். அதற்கு பதிலாக அந்த ஆவணங்களை போட்டோ அல்லது ஸ்கேன் செய்யப்பட்ட சாப்ட் காப்பி போன்ற டிஜிட்டல் வடிவில் செல்போனில் பதிவேற்றி வைத்து கொள்ளலாம்.
தேவைப்படும் நேரங்களில், அதிகாரிகளிடமும், போலீசாரிடமும் செல்போனில் உள்ள டிஜிட்டல் வெர்ஷனை மட்டும் காட்டினால் போதுமானது. ஒரிஜினல்தான் வேண்டும் என யாரும் உங்களை கட்டாயப்படுத்த முடியாது. வசூல் வேட்டையிலும் இறங்க முடியாது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்