விமான பயணங்களை பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ளக் கூடாத முக்கிய தகவல்கள்... ரகசியம்... பரம... ரகசியம்.!

விமான பயணங்களை மேற்கொள்பவர்கள் இந்த பக்கத்தில் உள்ள தகவல்களை நிச்சயம் படித்துப்பார்க்கவும்.

இன்று விமான போக்குவரத்து மிகவும் சகஜமாகி விட்டது. ஆனால் விமானம் தொடங்கிய நாள் முதல் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலைமை அப்படி இல்லை.

இன்று அதிக தூரம் கொண்ட பயணங்களுக்கு பலரும் விமானத்தை முதல்நிலை வாகனமாக தேர்வு செய்து வருகிறார்கள். அதை வளப்படுத்தும் திட்டங்களும் அரசிடம் அதிகம் உள்ளன.

விமான பயணங்களை பற்றி இதுவரை தெரியாத தகவல்கள்..!!

இன்று விமானம் பயணம் என்றால் ஜாலி என்று சொல்லும் அளவிற்கு நம்மில் பலர் இருக்கிறார்கள். இந்த பயணம் அதிக பாதுகாப்பு கொண்டது தான் என்றாலும், அதில் சில கூறப்படாத தகவல்கள் பல உள்ளன.

அவற்றை ஒவ்வொன்றாக ஜாலியாக கிழே படித்து பாருங்கள்...

முதன்முறை டேக் ஆஃப் அனுபவம்

முதன்முறை டேக் ஆஃப் அனுபவம்

முதல்முறை விமான பயணத்தின் போது பலரும் பயப்படுவது 'டேக் ஆஃப்' தான். இன்றும் கூட அவரவருக்கு தங்களது முதல் டேக் ஆஃப் சிலிர்ப்பை தரும்.

டேக் ஆஃபை நீங்கள் முதன்முதலாக உணர்ந்த போது, ஏதோ நீங்கள் கீழே விழுந்து கொண்டு இருப்பது போல தோன்றி இருக்கும். ஆனால் நிஜத்தில் ’டேக் ஆஃப்’ சமயத்தில் விமானம் கீழே விழுந்தால் கதம் கதம் தான்.

அழுக்கு நிறைந்த விமானம்

அழுக்கு நிறைந்த விமானம்

விமானங்களை நாம் பார்க்கும் போது, அவை மிகவும் சுத்தம் இருப்பது போல தெரியும். உண்மையில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் பல அசுத்தங்கள் தினமும் ஏற்படுகின்றன.

பயணிகளின் எண்ணிக்கை இன்று அதிகம் என்பதால், விமானங்களும் அதன் நிலையங்களும் அசுத்தமாவது எளிது. வரிசையில் நிற்கும் போதும்,

இருக்கையில் அமரும் போதும், சீட் பெல்டு போடும்போதும் விமானத்தின் எல்லா இடங்களிலுமே அசுத்தங்கள் மற்றும் கிருமிகள் பரவிக்கிடைக்கின்றன.

விமானிகள் தேவையே இல்லை

விமானிகள் தேவையே இல்லை

தானாகவே விமானங்கள் இயங்கக்கூடிய அளவிற்கு இன்று தொழில்நுட்பங்கள் முன்னேறிவிட்டன. அதனுடைய இயக்கத்தை எல்லாம் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட கணினிகள் தான் கட்டுபடுத்தும்.

ஒரு கணினியின் கட்டுபாட்டில் நீங்கள் பயணிக்கும் அந்த தருணம் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். வருங்காலத்தில் இது நிச்சயம் நடக்கும்.

800 அடிக்கு மேல் சென்று கொண்டு இருக்கும் விமானத்தில் சீட் பெல்டு அணிந்து கொண்டு நீங்கள் பயணிக்கும் போது, காக்பிட்டில் விமானி இல்லை என்பதை நினைத்தால் இப்போதே கிலி ஏற்படுகிறது.

அவசர வழி கதவு

அவசர வழி கதவு

பல ஹாலிவுட் படங்களில் பறந்து கொண்டு இருக்கும் விமானத்தில் திடீரென்று கதவு திறந்து ஹீரோ ஆக்ரோஷமாக வில்லனோடு சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்.

அப்போது உள்ளே இருக்கும் அனைத்து பொருட்களும் காற்றின் வேகத்தால் சிதறடிக்கப்படும். இவ்வாறு நீங்கள் பயணிக்கும் விமானத்தில் இந்த நிலை ஏற்பட்டால் கதவோடு நெருக்கமாகவே இருங்கள்.

இப்படி நடைபெற வாய்ப்பில்ல தான், ஆனால் நடக்கவே நடக்காது என்று சொல்லிவிட முடியாது. இப்படி திடீரென்று எமெர்ஜென்சி கதவு திறந்துக்கொண்டால் கதவிற்கு தூரமாக இருந்தால் சீக்கிரமாகவே நமது கதை முடிந்துவிடும்.

கதவோடு கதவு ஒட்டிக்கொண்டு இருந்தால், கீழ் நோக்கி விமானம் பாய்ந்தால் மயிரிழையில் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது. இதை நீங்கள் பல ஹாலிவுட் படங்களிலும் பார்த்திருக்கலாம்.

ஏர்லைன் உணவுகளை விமானிகள் உண்பார்களா?

ஏர்லைன் உணவுகளை விமானிகள் உண்பார்களா?

நம்மை பத்திரமாக சேரும் இடத்திற்கு கொண்டு சேர்க்கும் விமானிகள் எதை சாப்பிடுகிறார்கள் என்று எப்போதாவது யோசித்தது உண்டா? எப்போதும் விமானத்தில் கிடைக்கும் உணவுகளை விமானிகள் சாப்பிடுவதில்லை.

பெரும்பாலான நேரங்களில் விமானங்களில் உணவு என்பது சுகாதாரமாக இருப்பதில்லை. அதனால் தான் விமானிகளுக்கு எப்போதும் சிறப்பு உணவுகளே தரப்படும்.

நினைத்துப்பாருங்கள், ஏதாவது கேடு விளைந்த உணவை தின்றுவிட்டு வயிறு பிடுங்குகிறது, வாய் பிடுங்குகிறது என்று விமானிகள் படுத்துக்கொண்டால், பயணிகளில் கதி அதோ கதி தான். அதனாலேயே விமானிகள் சுகாதாரம் நிறைந்த சிறந்த உணவுகளை மட்டுமே உட்கொள்வர்.

ஆக்சிஸன் மாஸ்கின் பயன்பாடு

ஆக்சிஸன் மாஸ்கின் பயன்பாடு

விமானங்களில் அதிகபட்சமாக ஆக்சிஸன் மாஸ்குகள் 15 நிமிடங்களே தாக்கு பிடிக்கும். காரணம் விமான வழிப்பாதையில் கோளாறு என்றால் விமானி 15 நிமிடங்களுக்குள் விமானத்தை தரையில் இறக்கி விடுவார்.

அதனால் வெறும் 15 நிமிடங்கள் தாக்குபிடிக்கும் அளவிற்கே, விமானங்களில் பயணிகளுக்கான இருக்கைக்கு அருகில் ஆக்சிஸன் நிரப்பி வைக்கப்படும்.

இதை பலரும் தெரிவிப்பத்தில்லை. காரணம் கோளாறு ஏற்படும் நேரத்தில் விமானத்தை கீழே இறக்க 15 நிமிடங்களுக்கு மேல் ஆனால், என்ன செய்ய முடியும். அதனால் தான் இந்த திட்டம்.

எல்லாமே பழைய பீஸ் தான்

எல்லாமே பழைய பீஸ் தான்

’ஏர்ஃபேர் வாட்ச்டாக்’ என்ற ஊடகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, நமது தலைமேல பறக்கும் பெரும்பாலான விமானங்கள் எல்லாமே பழைய மாடல்கள் தான்.

பல போயிங் ரக விமானங்கள் உட்பட எதுவுமே புதிதல்ல. உங்கள் தாத்தா பயணம் செய்த அதே விமானத்தில் தான் நீங்களும் பயணித்து வருகிறீர்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

காக்பிட்டில் தூங்கும் விமானிகள்

காக்பிட்டில் தூங்கும் விமானிகள்

சில ஆய்வுகளின் படி, பல விமானிகள் காக்பிட்டில் இருக்கும் போதே தூங்கி விழுவார்களாம். பிறகு சுதாரித்துக்கொண்டு விமானத்தை இயக்குவார்களாம்.

இதற்கு காரணம் அவர்களது பனிச்சுமையே. எப்போது தூங்குகிறோம், எப்போதும் வேலைக்கு வருகிறோம் என விமானிகளுக்கு கணக்கே கிடையாது.

அடுத்தமுறை நீங்கள் விமானத்தில் செல்லும் போது எதற்கும் பனிப்பெண் அனுமதித்தால், ஒருமுறை காக்பிட்டை செக் செய்து கொள்வது நல்லது.

எஞ்சின் ஆயுட்காலம்

எஞ்சின் ஆயுட்காலம்

எல்லா ரக விமானங்களில் உள்ள எஞ்சின் அதிக ஆயுட் காலம் கொண்டவையாக இருக்கும். சில பழமையான எஞ்சின்கள் அப்போ அப்போ கோளாறு தரும்.

கோளாறு வருகிறது என்றால் அதை விமானிகள் உங்களுக்கு தெரியப்படுத்த மாட்டார்கள் காரணம் பயம் தான். பயணிகளுக்கு எல்லாமே ஒரு முடிவு கட்டத்தை எட்டிய பிறகு தான் தெரியும்.

விமான பயணங்களை பற்றி இதுவரை தெரியாத தகவல்கள்..!!

சில உண்மைகளும், சில கற்பனைகளும் நிறைந்த இந்த செய்தி தொகுப்பு, விமானங்களில் நாம் பயணிக்கும் போது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவே.

Most Read Articles
English summary
Disturbing Facts That You Should not Know About Airplanes Because That’ll Make You Think Twice About Flying. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X