இவர் டோணியும் இல்லை, கோலியும் இல்லை... யார் இவர்?!

Posted By:

உலகின் கடும் சவால்கள் நிறைந்த டக்கார் ராலியில் பங்கெடுத்த முதல் இந்திய வீரரான சி.எஸ்.சந்தோஷ் இன்று காலை நாடு திரும்பினார்.

பெங்களூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய சி.எஸ்.சந்தோஷுக்கு மோட்டார் பந்தய ரசிகர்களும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

குழுமிய ரசிகர்கள்

குழுமிய ரசிகர்கள்

கிரிக்கெட் வீரர்களுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் மட்டும்தான் விமான நிலையங்களில் திடீரென கூட்டம் கூடும். ஆனால், முதல்முறையாக ஒரு பைக் பந்தய வீரரை பாராட்ட ஏராளமானோர் அங்கு குழுமியிருந்தனர்.

சந்தோஷ் உற்சாகம்

சந்தோஷ் உற்சாகம்

பத்திரிக்கையாளர்கள், ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பார்த்து சி.எஸ்.சந்தோஷ் மிகுந்த உற்சாகத்துடன் பேசினார். அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

நாட்டுக்கு பெருமை

நாட்டுக்கு பெருமை

டக்கார் ராலியில் பல வீரர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் பாதியில் கழன்றுகொண்ட நிலையில், முதல்முறையிலேயே இறுதி வரை சளைக்காமல் போராடி 36வது இடத்தை பிடித்து சாதித்திருக்கிறார் சி.எஸ்.சந்தோஷ். மேலும், டக்கார் ராலியில் பங்கு கொண்ட முதல் இந்தியர் சி.எஸ்.சந்தோஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 நிறைவு

நிறைவு

கடும் போராட்டத்திற்கு பின்னர் டக்கார் ராலி பந்தயத்தை நிறைவு செய்தபோது தேசியக் கொடியுடன் பதக்கத்தை பெருமிதமாக காட்டி மகிழும் சி.எஸ்.சந்தோஷ்.

வாழ்த்துகள் சந்தோஷ்

வாழ்த்துகள் சந்தோஷ்

சி.எஸ்.சந்தோஷுக்கு டிரைவ்ஸ்பார்க் எடிட்டர் ஜோபோ குருவில்லா மற்றும் ஆங்கில துணை ஆசிரியர் ராஜ்கமல் நேரில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

 
English summary
CS Santosh Arrives To India After The Historical Ride In 2015 Dakar Rally.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark