டிரைவ்ஸ்பார்க் தமிழ் டேட்டா பேஸில் அதிகம் தேடப்பட்ட டாப்- 10 கார்கள்!

Written By:

ஆட்டோமொபைல் நிகழ்வுகள், சுவாரஸ்ய செய்திகள் மட்டுமின்றி, இணையதள உலகில் புதிய கார்கள் பற்றிய அனைத்து விபரங்களும் அடங்கிய தகவல் களஞ்சிய சேவையை [New Car Data Base], முதல்முறையாக தமிழில் அறிமுகம் செய்த பெருமை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தையே சேரும். புதிய கார் வாங்குவோர் தமிழிலிலேயே அனைத்து தகவல்களையும் ஒரு சில நிமிடங்களில் எளிதாக பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால், அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகம் உள்பட இந்தியாவின் எந்தவொரு பகுதியின் புதிய கார்களின் ஆன்ரோடு விலை குறித்த தகவலை, இ-மெயில், மொபைல்போன் எண் இல்லாமலேயே பெறும் சேவையை அறிமுகம் செய்தோம். இதுவும் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், கார் டேட்டா பேஸ் எனப்படும் இந்த தகவல் களஞ்சிய சேவையின் மூலமாக, வாடிக்கையாளர்களால் அதிகம் தேடப்பட்ட டாப் - 10 கார்களின் விபரங்களை கூகுள் அனலிட்டிக்ஸ் புள்ளி விபரங்களின் அடிப்படையில் இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

 10. புதிய ஃபோர்டு ஃபிகோ

10. புதிய ஃபோர்டு ஃபிகோ

இந்தியாவின் அழகிய ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான ஃபோர்டு ஃபிகோ காரின் புதிய தலைமுறை மாடல் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல் மாடல்களில் அதிக சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்கள், மிகச்சிறப்பான பாதுகாப்பு, தொடர்பு வசதிகளுடன் வந்திருக்கும் இந்த கார் பற்றி அறிந்துகொள்ள வாடிக்கையாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். எமது தகவல் களஞ்சிய பக்கத்தில் அதிகம் தேடப்பட்ட கார் மாடலில் புதிய ஃபோர்டு ஃபிகோ 10வது இடத்தை பெறுகிறது.

புதிய ஃபோர்டு ஃபிகோ காரின் தகவல் களஞ்சிய பக்கம்

 09. டாடா போல்ட்

09. டாடா போல்ட்

டாடாவின் தலையெழுத்தை மாற்றும் விதத்திலான வடிவமைப்பு, வசதிகள், புதிய எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்ட டாடா போல்ட் கார் பற்றி தமிழ் வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டியிருப்பது எமது தகவல் களஞ்சியத்தின் புள்ளி விபரங்கள் மூலமாக தெரிய வருகிறது. வாடிக்கையாளர்கள் மற்றும் வாசகர்களால் அதிகம் தேடப்பட்ட கார் மாடல்களில் டாடா போல்ட் காருக்கு 9வது இடத்தை பெற்றிருக்கிறது.

டாடா போல்ட் காரின் தகவல் களஞ்சிய பக்கம்

08. மாருதி டிசையர்

08. மாருதி டிசையர்

விற்பனையில் மிகச்சிறப்பான பதிவை பெற்று வரும் மாருதி டிசையர் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்த ஆண்டு முதல் காலாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கூடுதல் வசதிகள், வடிவமைப்பில் சிறிய மாற்றங்களுடன் வந்ததையடுத்து, மாருதி டிசையர் காரின் விற்பனை மேலும் பல புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. இந்த நிலையில், எமது தகவல் களஞ்சிய பக்கத்தில் அதிகம் தேடப்பட்ட கார் மாடல்களின் வரிசையில் மாருதி டிசையர் 8வது இடத்தை பெற்றிருக்கிறது.

புதிய மாருதி டிசையர் காரின் தகவல் களஞ்சிய பக்கம்

07. மாருதி ஆல்ட்டோ கே10

07. மாருதி ஆல்ட்டோ கே10

மாருதி கார்களில் டிசையரை போன்றே, மாருதி ஆல்ட்டோ கே10 கார் டிரைவ்ஸ்பார்க் தமிழ் டேட்டா பேஸில் அதிக பார்வைகளை பெற்றிருக்கிறது. ஆல்ட்டோ 800 காரைவிட அதிக சக்திவாய்ந்த 1.0 லிட்டர் எஞ்சின் இருப்பது மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலிலும் வந்ததே, வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வமுடன் இந்த காரின் தகவல்களை அறிந்து கொண்டிருக்கின்றனர் என்பது புலனாகிறது. ஏனெனில், பட்ஜெட் விலையில் ஓர் சிறப்பான ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் என்பதே இதற்கு காரணமாக கூறலாம்.

புதிய மாருதி ஆல்ட்டோ கே10 காரின் தகவல் களஞ்சிய பக்கம்

06. ஹோண்டா மொபிலியோ

06. ஹோண்டா மொபிலியோ

அனைவரும் ஹோண்டா சிட்டி அல்லது அமேஸ் கார்தான் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் என்று கருதியிருக்கலாம். ஆனால், ஆச்சரிய விஷயமாக ஹோண்டா மொபிலியோ கார் தமிழ் வாசகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் அதிகம் தேடப்பட்ட கார் மாடலாக இடம்பெற்றிருக்கிறது. அதிக பார்வைகளை பெற்றதன் அடிப்படையில், எமது பட்டியலில் 6வது இடத்தை ஹோண்டா மொபிலியோ பெற்றிருக்கிறது.

ஹோண்டா மொபிலியோ காரின் தகவல் களஞ்சிய பக்கம்

05. மஹிந்திரா டியூவி 300

05. மஹிந்திரா டியூவி 300

மஹிந்திரா நிறுவனத்தின் டியூவி 300 எஸ்யூவி 5வது இடத்தை பெற்றிருக்கிறது. தோற்றம், வசதிகள், 7 சீட்டர் ஆப்ஷன், ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆகியவற்றுடன் பட்ஜெட் விலையிலான ஓர் சிறப்பான டீசல் எஸ்யூவியாக வந்ததால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. எமது டேட்டா பேஸ் தளத்தில் அதிகம் தேடப்பட்ட கார் மாடல்களின் பட்டியலில் 5வது இடத்தை மஹிந்திரா டியூவி 300 பெற்றிருக்கிறது.

புதிய மஹிந்திரா டியூவி 300 தகவல் களஞ்சிய பக்கம்

 04. ஹூண்டாய் க்ரெட்டா

04. ஹூண்டாய் க்ரெட்டா

இந்தியர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று பீடு நடை போட்டு வரும் ஹூண்டாய் க்ரெட்டா பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வாடிக்கையாளர்களிடம் அதிக ஆர்வம் காணப்பட்டது. அந்த விதத்தில், ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி எமது டேட்டா பேஸ் தளத்தில் அதிகம் தேடப்பட்ட கார் மாடல்களின் பட்டியலில் 4வது இடத்தை பெற்றிருக்கிறது.

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் தகவல் களஞ்சிய பக்கம்

03. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

03. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

வாடிக்கையாளர்களின் மனதில் நீங்கா பிடித்த எஸ்யூவி மாடல் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ. ஸ்டைல், வசதிகள், சக்திவாய்ந்த எஞ்சின் என அனைத்திலும் புதிய ஸ்கார்ப்பியோ மிகச்சிறப்பான இடத்தை வாடிக்கையாளர்களின் மனதில் பதிய செய்துவிட்டது. எமது டேட்டா பேஸ் தளத்தில் அதிகம் தேடப்பட்ட கார் மாடல்களில் 3வது இடம் ஸ்கார்ப்பியோவுக்குத்தான்.

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியின் தகவல் களஞ்சிய பக்கம்

02. ரெனோ க்விட்

02. ரெனோ க்விட்

ரெனோ நிறுவனமே எதிர்பார்க்காத இமாலய வரவேற்பை ரெனோ க்விட் பெற்றிருக்கிறது. ஸ்டைலான தோற்றம், இடவசதி, வசதிகள், குறைந்த விலை போன்ற காரணங்கள் இந்த புதிய காரை மிகப்பெரிய வெற்றியை நோக்கி எடுத்துச் சென்றிருக்கிறது. எமது செய்தி தளத்தில் மட்டுமல்ல, டேட்டா பேஸ் தளத்திலும் அதிகம் தேடப்பட்ட மாடல் என்ற பெருமையை ரெனோ க்விட் பெற்றிருக்கிறது. நீங்களும் ரெனோ க்விட் காரின் ஏ டு இசட் விபரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

புதிய ரெனோ க்விட் காரின் தகவல் களஞ்சிய பக்கம்

 01. டட்டன் கோ ப்ளஸ்

01. டட்டன் கோ ப்ளஸ்

இந்த பட்டியலில் நம்பர்-1 இடத்தை பிடித்து ஆச்சரியத்தை தந்திருக்கும் மாடல் டட்சன் கோ ப்ளஸ். 4 மீட்டரில் ஓர் 7 சீட்டர் மாஜிக் என்று நாம் எழுதியது போலவே, எம்பிவி கார் மார்க்கெட்டிற்கும், ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டிற்கும் இணைப்பு பாலமாக இந்த மாடல் விளங்குகிரது. மேலும், டட்சன் கோ ப்ளஸ் கார் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்த மாடல் என்பதை எமது டேட்டா பேஸ் புள்ளி விபரம் மூலமாக புலனாகிறது.

புதிய டட்சன் கோ ப்ளஸ் காரின் தகவல் களஞ்சிய பக்கம்

 
English summary
Here is a list of 10 most searched cars on DriveSpark in 2015.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark