டிரைவ்ஸ்பார்க் புகைப்பட போட்டிக்கான நிபந்தனைகள் விபரம்!

Written By:

உலக புகைப்பட தினத்தையொட்டி, டிரைவ்ஸ்பார்க் வாசகர்கள் மற்றும் வாகன ஆர்வலர்களுக்கான சிறப்பு புகைப்பட போட்டியை டிரைவ்ஸ்பார்க் தளம் நடத்துகிறது.

ஆட்டோமொபைல் துறையில் தனித்துவம் மிக்க முன்னணி செய்தி தளமாக டிரைவ்ஸ்பார்க் விளங்குகிறது. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 6 மொழிகளில் ஆட்டோமொபைல் துறையின் அன்றாட நிகழ்வுகளையும், சுவாரஸ்யங்களையும் உடனுக்குடன் தந்து வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஆடி கார்
 

இன்று உலக புகைப்பட தினத்தையொட்டி, டிரைவ்ஸ்பார்க் வாசகர்கள் மற்றும் வாகன பிரியர்களுக்கான பிரத்யேக புகைப்பட போட்டி ஒன்றை டிரைவ்ஸ்பார்க் தளம் நடத்துகிறது.

இன்று துவங்கி வரும் 21ந் தேதி மாலை 6 மணி வரை இந்த போட்டியில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாம். இந்த போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் சிறந்த படங்களுக்கு சிறப்புப் பரிசுகளும் காத்திருக்கின்றன.

இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் வாசகர்களும், வாகன பிரியர்களும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சில எளிய நிபந்தனைகளை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

நிபந்தனைகள்:

01. போட்டியில் பங்கேற்பவர்கள் எங்களது ஃபேஸ்புக் பக்கம் மற்றும் டுவிட்டர் சமூக வலைதள பக்கத்தில் விருப்பம் தெரிவித்து பின்தொடர்பவராக இருத்தல் அவசியம்.

02. உங்களது படங்களை எங்களது ஃபேஸ்புக் அல்லது டிவிட்டர் பக்கத்தில் கார் அல்லது பைக்கின் மாடல் விபரத்துடன் பதிவேற்றம் செய்யவும்.[எ.கா: மாருதி டிசையர்/ஹோண்டா ஆக்டிவா]

03. படங்களை பதிவேற்றும்போது #DSPhotoContest என்ற எங்களது சமூக வலைதள ஹேஷ்டேக்குடன் பதிவேற்றம் செய்வது அவசியம்.

04. உங்களது சொந்த புகைப்படங்களை மட்டுமே பதிவேற்றம் செய்யவும். இணையதளங்களிலிருந்து எடுத்து பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்கள் தகுதி நீக்கம் செய்யப்படும்.

05. கார் மற்றும் பைக் படங்களை மட்டுமே பதிவேற்றம் செய்யவும்.

06. படங்களை பதிவேற்றம் செய்யும்போது நண்பர்களையும் டேக் செய்யவும். ஏனெனில், அதிக லைக்குகள் மற்றும் பகிர்வுகளை பெறும் படத்திற்கு கூடுதல் புள்ளிகளை பெறும்.

இதர முக்கிய விஷயங்கள்

  • டிரைவ்ஸ்பார்க் தளத்தின் தொழில்முறை புகைப்பட கலைஞர்கள் அடங்கிய நடுவர் குழு பரிசுக்குரிய படங்களை தேர்வு செய்யும்.
  • ஆகஸ்ட் 22ந் தேதி போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள். அதிலிருந்து 10 நாட்களுக்குள் பரிசுகள் வழங்கப்படும்.
  • புகைப்பட போட்டியில் பங்குபெறும் படங்களை டிரைவ்ஸ்பார்க் தளம் படத்தின் உரிமைக்குரியவரின் விபரங்களுடன் எதிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்ளும்.

இந்த எளிய நிபந்தனைகளை மனதில் வைத்து, உங்களது படங்களை இப்போதே எங்களது சமூக வலைத் தள பக்கங்களில் பதிவேற்றம் செய்யலாம். உங்களது படமும் வெற்றி பெற்று பரிசுகளை வெல்லும் வாய்ப்புள்ளது.

ஸ்டார்ட் மியூசிக்... !!

எங்களது ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய க்ளிக் செய்யவும்.

எங்களது டிவிட்டர் பக்கத்தை பின்தொடர க்ளிக் செய்க.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
DriveSpark Photography Contest Is Here And You Can Be A Winner!

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark