மணிக்கு 1,200 கிமீ வேகத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து: துபாய் களமிறங்கியது!

By Saravana Rajan

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா எலெக்ட்ரிக் கார் நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க், ஹைப்பர் லூப் என்ற புதிய போக்குவரத்து சாதனத்தின் மாதிரி வடிவத்தை இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டார். இது உலக அளவில் தொழில்நுட்ப வல்லுனர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும், இந்த மாதிரி வடிவத்தை நிஜமாக்கும் விதத்தில், பிரத்யேக சோதனை ஓட்ட மையத்தை ஏற்படுத்தி, ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்தநிலையில், ஹைப்பர்லூப் சாதனத்தை பயன்படுத்துவதற்கு துபாய் அரசு நிர்வாகமும் ஆர்வமாக இறங்கியிருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூட்டமைப்பில் உள்ள மற்றொரு முக்கிய நகரமான ஃபியூஜைராவுக்கு ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஆய்வுகளில் துபாய் அரசு நிர்வாகம் இறங்கியிருக்கிறது.

விரைவு

விரைவு

துபாய்- ஃபியூஜைரா நகருக்கு இடையிலான 105 கிமீ தூரத்தை வெறும் 10 நிமிடங்களில் கடப்பதற்கு ஏதுவாக இந்த ஹைப்பர்லூப் சாதன போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த துபாய் ஆர்வமாக இறங்கியிருக்கிறது.

பயண நேரம்

பயண நேரம்

மேற்கு- கிழக்கு பகுதிகளில் அமைந்திருக்கும் இந்த இரு ஐக்கிய அரபு அமீரக நகரங்களையும் மிக விரைவாக இணைப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தற்போது இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் இரண்டு மணி நேரமாக உள்ளதை, வெறும் 10 நிமிடங்களாக குறைக்கும் முயற்சியாக இது இருக்கும்.

டிசைன் போட்டி

டிசைன் போட்டி

இரு நகரங்களுக்கு இடையில் இயக்குவதற்கான ஹைப்பர்லூப் சாதனத்தின் மாதிரி வடிவத்தை உருவாக்குவதற்காக வரும் செப்டம்பர் 26ந் தேதி, Build Earth Live என்ற பெயரில் போட்டி ஒன்றையும் அறிவித்துள்ளது. 48 மணி நேரத்தில் ஹைப்பர்லூப் சாதனத்தின் மாதிரியை வடிவமைத்து தருவதே இந்த போட்டியின் நோக்கம்.

சர்வதேச போட்டி

சர்வதேச போட்டி

இந்த வடிவமைப்பு போட்டியில் உலக அளவில் 100 பேர் கலந்து கொள்ள இருக்கின்றனர். அவர்களது மாதிரி வடிவத்தில் சிறந்ததை தேர்வு செய்வதற்காக 6 குழுவினரும், சர்வதேச அளவில் சிறந்த வடிவமைப்பு பொறியாளர்கள் அடங்கிய நடுவர் குழுவினரும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

நடுவர் குழு

நடுவர் குழு

இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மாதிரி வடிவத்தின் அடிப்படையில், இரு நகரங்களுக்கு இடையிலான ஹைப்பர்லூப் போக்குவரத்துக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. வரும் 2020ம் ஆண்டிற்குள் ஹைப்பர்லூப் அல்லது மணிக்கு 1,200 கிமீ வேகத்தில் செல்வதற்கான போக்குவரத்து கட்டமைப்பை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று இலக்கு வைத்து துபாய் அரசு களமிறங்கி இருக்கிறது.

ஹைப்பர்லூப்

ஹைப்பர்லூப்

ராட்சத குழாய் அமைப்பிற்குள் கேப்சூல் போன்ற போக்குவரத்து சாதனங்களை மணிக்கு 1,200 கிமீ வேகம் வரை இயக்குவதற்கான கட்டமைப்பை ஹைப்பர்லூப் என்று குறிப்பிடுகின்றனர். டெஸ்லா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க் இந்த யோசனையை முதலில் தெரிவித்ததோடு, இதனை மேம்படுத்துவதற்கு உலக அளவில் அனைத்து பொறியாளர்களும் தங்களது பங்களிப்பை வழங்குமாறும் அறைகூவல் விடுத்தார்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் இந்த ஹைப்பர்லூப் கட்டமைப்பு பாதிக்கப்படாது. அனைத்து செயல்பாடுகளும் தானியங்கி முறையில் நடக்கும். இதனால், மனித தவறால் ஏற்படும் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

சோதனை

சோதனை

கடந்த மே மாதம் ஹைப்பர்லூப் சாதனத்தின் ஸ்கேல் மாடல், அமெரிக்காவில் உள்ள பிரத்யேக சோதனை களத்தில் வைத்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது நினைவிருக்கலாம். தொடர்ந்து இதனை மேம்படுத்தும் பணிகளில் எலான் மஸ்க் மற்றும் அவரது நிறுவனத்தின் நிபுணர் குழுவினரும் ஈடுபட்டிருக்கின்றனர்.

கடல்வழி போக்குவரத்து

கடல்வழி போக்குவரத்து

தரைவழி போக்குவரத்து மட்டுமின்றி, கடல் வழியாக ஹைப்பர்லூப் போக்குவரத்து கட்டமைப்புகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் எலான் மஸ்க் தலைமையின் கீழ் இயங்கும் ஸ்பேஸ்எக்ஸ் என்ற விண்வெளி நிறுவனம் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

வரப்பிரசாதம்

வரப்பிரசாதம்

தரை வழி போக்குவரத்தில் மிக அதிவேக சாதனமாக புல்லட் ரயில்கள் கருதப்படுகின்றன. மணிக்கு 600 கிமீ வேகம் வரை புல்லட் ரயில்கள் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில், எதிர்காலத்தில் புல்லட் ரயில்களை அதிவேகமான, அதேநேரத்தில் பாதுகாப்பான தரை வழி போக்குவரத்து சாதனம் நிச்சயம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

மணிக்கு 600 கிமீ வேகத்தை கடந்து சாதித்த புல்லட் ரயில்!

மணிக்கு 600 கிமீ வேகத்தை கடந்து சாதித்த புல்லட் ரயில்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Dubai Announces New Hyperloop Design Contest.
Story first published: Thursday, August 11, 2016, 10:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X