உச்ச நீதிமன்ற உத்தரவு... இ-ரிக்ஷா பதிவை நிறுத்தியது டெல்லி... என்ன காரணம் தெரியுமா?

உச்ச நீதிமன்ற உத்தரவின் காரணமாக மின்சார ஆட்டோ ரிக்ஷா பதிவை டெல்லி அரசு நிறுத்தியுள்ளது. இதற்கான முழு காரணத்தையும் இப்பதிவில் காணலாம்.

உச்ச நீதிமன்ற உத்தரவு... இ-ரிக்ஷா பதிவை நிறுத்தியது டெல்லி... என்ன காரணம் தெரியுமா?

உலகம் முழுவதும் மின் வாகன ஊக்குவிப்பு மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தியாவிலும் இந்த நிலை சற்று தீவிரமெடுத்தே காணப்படுகின்றது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் மின் வாகனங்களை பதிவு செய்வதற்கு அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த செய்தியை கார் அண்ட் பைக் தளம் வெளியிட்டிருக்கின்றது.

உச்ச நீதிமன்ற உத்தரவு... இ-ரிக்ஷா பதிவை நிறுத்தியது டெல்லி... என்ன காரணம் தெரியுமா?

மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்தவர் கனிஷ்க் சின்ஹா. இவர் ஓர் வழக்குரைஞர் ஆவார். மின் வாகனங்களைப் பதிவு செய்வதற்கான உரிமத்தை இவர் பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. 20 வருடங்களுக்கான உரிமத்தை இவர் பெற்றிருக்கின்றார்.

உச்ச நீதிமன்ற உத்தரவு... இ-ரிக்ஷா பதிவை நிறுத்தியது டெல்லி... என்ன காரணம் தெரியுமா?

ஆகையால், எந்தவொரு நிறுவனமோ அல்லது மாநிலமோ அல்லது யூனியன் பிரதேசமோ எதுவாக இருந்தாலும் இவரின் ஒப்புதலைப் பெறுவது அவசியம். இதையே தற்போது உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருக்கும் உத்தரவிலும் கூறப்பட்டுள்ளது. கனிஷ்க் சின்ஹா தற்போது தனது உரிமத்தை அமித் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு குத்தைக்குக் கொடத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்ற உத்தரவு... இ-ரிக்ஷா பதிவை நிறுத்தியது டெல்லி... என்ன காரணம் தெரியுமா?

எனவே, எந்தவொரு மின் வாகன வாடிக்கையாளரும் தங்களது வாகனத்தை பதிவு செய்ய அமித் இன்ஜினியரிங் நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது. ஆனால், இதனை ஒரு சில மாநில அரசுகள் பின்பற்றவில்லை என தெரிகின்றது.

உச்ச நீதிமன்ற உத்தரவு... இ-ரிக்ஷா பதிவை நிறுத்தியது டெல்லி... என்ன காரணம் தெரியுமா?

இதனை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே தற்காலிமாக மின் வாகனங்களின் பதிவிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவைத் தொடர்ந்து டெல்லி அரசாங்கம் தனது புதிய மின் வாகன பதிவை நிறுத்தியுள்ளது. குறிப்பாக, இ ரிக்ஷாக்களின் பதிவு முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவு... இ-ரிக்ஷா பதிவை நிறுத்தியது டெல்லி... என்ன காரணம் தெரியுமா?

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திலும் இதே தடை உத்தரவு தற்போது செயல்பாட்டில் இருக்கின்றது. விரைவில் பிற மாநிலங்களிலும் இந்த நிலை தென்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் குறிப்பிட்ட சில மாநில அரசுகள் மின்சார வாகனத்தைப் பயன்பாட்டில் கொண்டு வருவதில் அதி தீவிரம் காண்பித்து வருகின்றது.

உச்ச நீதிமன்ற உத்தரவு... இ-ரிக்ஷா பதிவை நிறுத்தியது டெல்லி... என்ன காரணம் தெரியுமா?

அந்தவகையில், டெல்லி அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை மிக அதி தீவிரமானதாக காட்சியளிக்கின்றது. குறிப்பாக, அது அண்மையில் தொடங்கி வைத்த ஸ்விட்ச் டெல்லி திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக பல்வேறு சிறப்பு சலுகைகளை அரசு வழங்கி வருகின்றது.

உச்ச நீதிமன்ற உத்தரவு... இ-ரிக்ஷா பதிவை நிறுத்தியது டெல்லி... என்ன காரணம் தெரியுமா?

வரி சலுகை, விலை தள்ளுபடி, பதிவு கட்டணம் ரத்து மற்றும் மானியம் போன்ற பல்வேறு சலுகைகளை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு செய்து வருகின்றது. இவரின் இந்த செயலைக் கண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கமல் ஹாசன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தையும், பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Due To Supreme Court Order Delhi Stops E-Rickshaw Registration. Read In Tamil.
Story first published: Tuesday, February 9, 2021, 14:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X