பறக்கும் காரை தொடர்ந்து, அடுத்து பறக்கும் பைக்!

பறக்கும் காரை உருவாக்குவதில், பல நாட்டு எஞ்சினியர்கள் தொடர்ந்து தீவிர முயற்சிகளை செய்து வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த டெர்ரஃப்யூஜியா என்ற நிறுவனம் வர்த்தக ரீதியிலான பறக்கும் காரை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், பறக்கும் பைக் ஒன்றை செக் குடியரசு நாட்டை சேர்ந்த எஞ்சினியர்கள் வடிவமைத்துள்ளனர்.

கான்செப்ட் நிலையிலான இந்த பைக்கை சமீபத்தில் அந்நாட்டிலுள்ள பிரேக் லெட்னனி கண்காட்சி அரங்கில் வைத்து சோதனை செய்யப்பட்டது. அப்போது, சில நிமிடங்கள் இந்த பைக் வெற்றிகரமாக பறந்து தரையிறங்கியுள்ளது. அந்த காட்சிகளையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

 டம்மியுடன் பறந்த பைக்

டம்மியுடன் பறந்த பைக்

இந்த பைக்கில் பொம்மை மனிதனை வைத்து முதல்கட்டமாக சோதனை செய்துள்ளனர்.

புரொப்பல்லர்கள்

புரொப்பல்லர்கள்

இந்த பைக்கின் பின்புறம் 3 புரொப்பல்லர் ஃபேன்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த புரொப்பல்லர்கள் பைக்கை மேலே எழும்ப செய்கின்றன.

ரிமோட் கன்ட்ரோல்

ரிமோட் கன்ட்ரோல்

இந்த பைக் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

 எடை

எடை

100 கிலோ எடை கொண்டதாக இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

இந்த பைக் பேட்டரியில் இயங்குகிறது.

அடுத்த கட்டம்

அடுத்த கட்டம்

தற்போது கான்செப்ட் நிலையில் இருப்பதால், பொம்மை மனிதனை வைத்து சோதனை நடத்தியதாகவும், அடுத்த கட்டமாக நிஜமாகவே மனிதரை உட்கார வைத்து சோதனை செய்யும் திட்டம் இருப்பதாகவும், இந்த பைக்கை வடிவமைத்த குழுவில் ஒருவரான மிலன் டுசெக் கூறியுள்ளார்.

கனவு திட்டம்

கனவு திட்டம்

இந்த பைக்கை வர்த்தக ரீதியில் விற்பனைக்கு கொண்டு வருவதும், லாப நோக்கிலும் கொண்டு வடிவமைக்கவில்லை. எங்களை போன்று சிறு வயது முதல் சைக்கிளில் பறக்க எத்தனித்தவர்களின் கனவை நனவாக்கும் முயற்சி இது என்று டிசைன் குழுவில் இடம் பெற்றிருந்த மற்றொரு எஞ்சினியர் அலிஸ் கோபிலிக் கூறியிருக்கிறார்.

வெற்றி பெறுமா?

வெற்றி பெறுமா?

பறக்கும் கார் வணிக ரீதியிலான முயற்சிகள் வெற்றி பெறும் நிலைக்கு வந்துள்ளது. இதேபோன்று, இந்த பறக்கும் பைக் முயற்சியும் வணிக ரீதியில் அறிமுகம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Most Read Articles
English summary
Several Czech scientists, earlier this week, realized their childhood dreams by successfully test flying a bicycle. The test flight was conducted in Prague´s Letnany exhibition grounds, with a dummy onboard instead of a human.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X