டீலரில் சர்வீஸுக்கு வந்த 4 டஸ்ட்டர் எஸ்யூவிகளை எளிதாக ஆட்டையை போட்டுச் சென்ற திருடர்கள்!

Written By:

சர்வீஸ் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி கார்களை அசால்ட்டாக ஆட்டை போட்டு சென்றுள்ளனர் கார் கொள்ளையர்கள். இந்த சம்பவம் உணர்த்தும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

 டீலரில் சர்வீஸுக்கு வந்த 4 டஸ்ட்டர் கார்கள் திருட்டு!

நொய்டா நகரில் செக்டார் 63ல் ஏவியா ஆட்டோ சர்வீஸ் என்ற பெயரில் ரெனோ கார் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப் செயல்பட்டு வருகிறது. இந்த டீலரில் சர்வீஸுக்காக விடப்பட்டிருந்த 4 டஸ்ட்டர் எஸ்யூவிகளை கார் கொள்ளையர்கள் மிக எளிதாக திருடிச் சென்றுள்ளனர்.

 டீலரில் சர்வீஸுக்கு வந்த 4 டஸ்ட்டர் கார்கள் திருட்டு!

இரவு 3 மணியளவில் சர்வீஸ் மையத்தில் அதிரடியாக புகுந்த கொள்ளையர்கள் காவலாளியை ஆயுதங்களை காட்டி மிரட்டி சிறைபிடித்தனர். பின்னர், அந்த டீலரின் சர்வீஸ் மையத்தில் நின்றிருந்த 4 டஸ்ட்டர் எஸ்யூவிகளை மிக எளிதாக திருடிச் சென்றுள்ளனர்.

 டீலரில் சர்வீஸுக்கு வந்த 4 டஸ்ட்டர் கார்கள் திருட்டு!

சர்வீஸ் மையத்தில் நிறுத்தப்பட்டிருந்த டஸ்ட்டர் எஸ்யூவிகளில் சாவி காரிலேயே இருந்ததும் கொள்ளையர்களுக்கு வசதியாக போய்விட்டது. இதுதொடர்பாக, போலீசாரிடம் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 டீலரில் சர்வீஸுக்கு வந்த 4 டஸ்ட்டர் கார்கள் திருட்டு!

இருப்பினும், இதுவரை திருடிச் செல்லப்பட்ட 4 டஸ்ட்டர் எஸ்யூவிகளையும் கண்டறியப்படவில்லை. இந்த நிலையில், இந்த கார் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்களில் ஒருவர் முன்னாள் அல்லது தற்போது பணிபுரிந்து வரும் ஊழியராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

 டீலரில் சர்வீஸுக்கு வந்த 4 டஸ்ட்டர் கார்கள் திருட்டு!

ஏனெனில், எப்போது ஷோரூமில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்கும், காரிலேயே சாவி இருக்கும் விஷயங்கள் கொள்ளையர்களுக்கு தெரிந்து துல்லியமாக திருடியுள்ளனர். எனவே, ஊழியர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 டீலரில் சர்வீஸுக்கு வந்த 4 டஸ்ட்டர் கார்கள் திருட்டு!

இந்த நிலையில், திருடு போன 4 டஸ்ட்டர் எஸ்யூவி உரிமையாளர்களிடத்திலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகேட்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும், டீலர் சார்பில் ஒத்துழைப்பு மட்டுமே அளிக்க இயலும் என்று தெரிவித்துவிட்டனர்.

 டீலரில் சர்வீஸுக்கு வந்த 4 டஸ்ட்டர் கார்கள் திருட்டு!

ஏனெனில், டீலரில் காரை ஒப்படைக்கும்போது கொடுக்கப்படும் சர்வீஸ் கோரிக்கை படிவத்தில் காருக்கு இதுபோன்று ஏற்படும் இழப்புகளுக்கு டீலர் பொறுப்பாகாது என்ற விபரமும் கொடுக்கப்பட்டு விடுகிறது.

 டீலரில் சர்வீஸுக்கு வந்த 4 டஸ்ட்டர் கார்கள் திருட்டு!

இதனால், கார்களை பறிகொடுத்த 4 டஸ்ட்டர் உரிமையாளர்களும் இன்ஸ்யூரன்ஸ் மூலமாகவே காருக்கான இழப்பீடை பெறும் வாய்ப்புள்ளது. இதனால், காரை பறிகொடுத்தவர்கள் பெரும் இழப்பையும், தேவையற்ற அலைச்சலையும் சந்திக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

4 டஸ்ட்டர் எஸ்யூவிகளை ஒன்றன்பின் ஒன்றாக திருடிச் செல்லப்படும் வீடியோவை காணலாம்.

Via- Rushlane

மேலும்... #ரெனோ #renault
English summary
Duster SUVs Stolen From Renault Dealership.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark