விபத்து நடந்தாலும் பாதுகாப்பான விமான நிறுவனம் எமிரேட்ஸ் என கொண்டாடுவது ஏன் தெரியுமா?

Written By:

கடந்த புதன்கிழமை திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் நிறுவனத்தின் தரையிறங்கும்போது தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. அதிரடி மீட்புப் பணிகளால், அதில் பயணித்த 300 பேரையும் விமான நிலைய மீட்புப் படையினர் மீட்டனர். இந்த பயங்கர விபத்தில் துணிச்சலாக செயல்பட்ட தீயணைப்பு ஊழியர் ஒருவர் தீயில் சிக்கி துரதிருஷ்டவசமாக உயிரிழந்தார்.

சர்வதேச அளவில் அதிக விமானங்களை இயக்கும் உலகின் மிகப்பெரிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் விளங்கும் நிலையில், இந்த தீவிபத்து அந்த நிறுவனத்தின் பெயருக்கு எவ்விதத்திலும் களங்கம் ஏற்படுத்தவில்லை. மாறாக, அந்த நிறுவனத்தின் சேவை குறித்த அனைவரும் பாராட்டுகின்றனர். அந்த நிறுவனத்தின் விமானம் தீ விபத்தில் சிக்கினாலும், அந்த நிறுவனம் உலகின் மிகவும் பாதுகாப்பான நிறுவனம் என ஊடகங்கள் வாயார புகழ்ந்து வருகின்றன. அதற்கான காரணம் என்ன, விபத்தில் சிக்கினாலும், எமிரேட்ஸ் விமானங்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதற்குமான விஷயங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

அப்படியா...

அப்படியா...

எமிரேட்ஸ் விமான நிறுவனம் துவங்கப்பட்டு 31 ஆண்டுகள் ஆன நிலையில், அதன் வரலாற்றில், இதுவரை அந்த நிறுவனத்தின் விமானத்தில் பயணித்த ஒருவர் கூட இதுவரை உயிரிழந்தது கிடையாது. மேலும், planecrashinfo.com தளத்தின் 20 ஆண்டு கால புள்ளிவிபரங்களின்படி, எமிரேட்ஸ் நிறுவனம் ஒருமுறைகூட பெரிய அளவிலான விபத்தில் சிக்கிய சம்பவங்கள் இதுவரை இல்லை.

பாதுகாப்பான நிறுவனம்

பாதுகாப்பான நிறுவனம்

airlineratings நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மதிப்பீடுகளின்படி, உலக அளவில் செயல்பட்டு வரும் 407 விமான நிறுவனங்களில் மிகவும் பாதுகாப்பான முதல் 20 நிறுவனங்களில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனமும் ஒன்று. மேலும், பாதுகாப்பு தர மதிப்பீடுகளுக்காக இந்த நிறுவனம் வழங்கும் புள்ளிகளில் 7/7 என்ற தர மதிப்பீட்டை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்றொரு சான்று...

மற்றொரு சான்று...

JACDEC வழங்கியிருக்கும் தர மதிப்பீடுகளின்படியும், 2015 மற்றும் 2016ம் ஆண்டில் கத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு அடுத்து உலகின் மிக பாதுகாப்பான இரண்டாவது விமான நிறுவனம் என்ற பெருமையும் எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு உண்டு.

அதுமட்டுமல்ல...

அதுமட்டுமல்ல...

எமிரேட்ஸ் நிறுவனம் முழமையாக விமானத்தை இழந்திருப்பதும் இதுதான் முதல்முறையாம். அதாவது, Hull loss என்று குறிப்பிடுவர். சரிசெய்து பயன்படுத்த முடியாத அளவுக்கு முழுமையாக சேதமடைந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விபத்தும் உணர்த்துகிறது...

விபத்தும் உணர்த்துகிறது...

விமானம் தீப்பிடித்து தரையிறக்கப்பட்ட நிலையில், அதில் இருந்த 226 இந்தியர்கள் உள்பட 282 பயணிகள் மறறும் 18 ஊழியர்கள் அவசர கால வழி வழியாக பத்திரமாக வெளியேறியதும் குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது. ஏனெனில், மீட்புப் படையினரின் துரித செயல்பாடு, பைலட்டுகள் மற்றும் பணியாளர்களின் விரைவான செயல்பாடுகளால் அவ்வளவு பேரும் பத்திரமாக வெளியேறியது சாதனை.

அனுபவசாலிகள்

அனுபவசாலிகள்

எமிரேட்ஸ் விமானங்களை இயக்கும் பைலட்டுகள் மிகவும் அனுபவசாலிகள். நேற்றுமுன்தினம் இயக்கப்பட்ட விமானத்தை இயக்கிய பைலட்டுகள் இருவரும் தலா 7 ஆயிரம் மணி நேரத்திற்கும் அதிகமாக விமானங்களை இயக்கி அனுபவம் வாய்ந்தவர்கள். அதனால்தான், அவசர சமயத்தில் மிக சுதாரிப்பாக விமானத்தை தரையிறக்கி, பயணிகளின் உயிரையும் காத்திருக்கின்றனர்.

முக்கிய காரணம்...

முக்கிய காரணம்...

தரையிறக்க முற்பட்டபோது காற்றின் வேகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் அல்லது சூறாவளி காரணமாக விமானம் நிலைகுலைந்திருக்கிறது. அதையடுத்து, சுதாரித்துக் கொண்டு மீண்டும் விமானத்தை வானில் செலுத்தி, கட்டுக்குள் வந்து விமானத்தை தரையிறக்க முற்பட்டபோதே விபத்து நிகழ்ந்திருக்கிறது.

முக்கிய காரணம்...

முக்கிய காரணம்...

தரையிறக்க முற்பட்டபோது காற்றின் வேகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் விமானம் நிலைகுலைந்திருக்கிறது. அதையடுத்து, சுதாரித்துக் கொண்டு மீண்டும் விமானத்தை வானில் செலுத்தி, கட்டுக்குள் வந்து விமானத்தை தரையிறக்க முற்பட்டபோதே விபத்து நிகழ்ந்திருக்கிறது.

போயிங் விமானம்

போயிங் விமானம்

விபத்தில் சிக்கிய விமானம் 2003ம் ஆண்டு டெலிவிரி எடுக்கப்பட்டது. போயிங் 777-300 ரக விமான மாடல்தான் அது. எப்படி எமிரேட்ஸ் நிறுவனத்தை பாராட்டுகின்றனரோ, அதேபோன்று, இந்த விமான மாடலும் உலகின் மிக பாதுகாப்பானதாக குறிப்பிடப்படுகிறது. இதுவரை பயன்பாட்டில் இருக்கும் விமானங்கள் சிறிய விபத்துக்களில் சிக்கினாலும், பெரிய அளவிலான விபத்துக்கள் இல்லாத வரலாற்றை கொண்டிருக்கிறது.

எஞ்சின் பிரச்னை

எஞ்சின் பிரச்னை

EK521 என்ற எண் கொண்ட அந்த எமிரேட்ஸ் நிறுவனத்தின் போயிங் 777-300 விமானத்தில் இரண்டு ரோல்ஸ்ராய்ஸ் டிரென்ட் 800 எஞ்சின்கள் பொருத்தப்பட்டிருந்தன. வழக்கமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஓர் ஆண்டு ஆனதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரத்தில், ஒவ்வொரு முறையும் எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் முறையாக ஆய்வுகள் செய்யப்பட்ட பிறகே இயக்கப்படுகின்றன.

 பராமரிப்பு இடைவெளி

பராமரிப்பு இடைவெளி

இருப்பினும், ஓர் ஆண்டு ஆன நிலையில், காற்றின் திடீர் சுழற்சியால் எஞ்சினில் பிரச்னை ஏற்பட்டு தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உலகின் மிகவும் பாதுகாப்பான விமான சர்வீஸ் நிறுவனமான எமிரேட்ஸ் இதற்கு விரைவில் விளக்கம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எமிரேட்ஸ் சுவாரஸ்யங்கள்

எமிரேட்ஸ் சுவாரஸ்யங்கள்

கடந்த 1985ம் ஆண்டு அக்டோபர் 25ந் தேதி எமிரேட்ஸ் நிறுவனம் சேவையை துவங்கியது. துபாய் விமான நிலையத்தை தலைமை செயல் இடமாக கொண்டு இயங்கும், அந்த நிறுவனத்திடம் தற்போது 221 விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய விமான நிறுவனமாகவும் விளங்குகிறது.

 வழித்தடங்கள்

வழித்தடங்கள்

இந்தியா உள்பட உலகின் 142 நகரங்களுக்கு சேவை வழங்கி வருகிறது. எமிரேட்ஸ் நிறுவனத்தின் 36.5 சதவீத வருவாய் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து கிடைக்கிறது. அதேநேரத்தில், அந்த நிறுவனத்தின் வருவாயில் 35.1 சதவீதம் எரிபொருளுக்காக செலவிடப்படுகிறது.

பணியாளர்கள்

பணியாளர்கள்

120 நாடுகளை சேர்ந்த 80 மொழிகளை பேசும் சுமார் 10,000 பணியாளர்கள் எமிரேட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். பல்வேறு கலாச்சாரம், மொழி, இன பேதங்களை கடந்து வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறது.

பல்க் ஆர்டர்

பல்க் ஆர்டர்

கடந்த 2013ம் ஆண்டு மட்டும் 200 புதிய விமானங்களை வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்திருக்கிறது எமிரேட்ஸ். அதாவது, ஓர் ஆண்டில் மிக அதிக விமானங்களை வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்த நிறுவனம் என்ற பெருமையும் இந்த நிறுவனத்திற்கு உண்டு.

பெரிய விமானம்

பெரிய விமானம்

போயிங் 777 மற்றும் உலகின் மிகப்பெரிய விமானமான ஏர்பஸ் ஏ380 ஆகிய விமானங்களை அதிக அளவில் இயக்கும் விமானங்களை விமான நிறுவனம் என்ற பெருமையும் இந்த நிறுவனத்திற்கு உண்டு. மேலும், சமீபத்திய ஆய்வுபடி, சர்வதேச வழித்தடங்களில் உலகிலேயே அதிக இருக்கை வசதியை கொண்ட பெரிய நிறுவனமாகவும் உள்ளது.

இந்தியர்களுக்கு நெருக்கம்..

இந்தியர்களுக்கு நெருக்கம்..

வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள் அடிக்கடி எமிரேட்ஸ் விமானங்களில் பறக்கும் வாய்ப்பை பெற்று வருகின்றனர். அத்தோடு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு துபாய் வழியாக செல்லும் இந்தியர்கள் பெரும்பாலும் எமிரேட்ஸ் விமானங்களிலேயே பயணிக்கும் வாய்ப்பை பெறுவதுடன், சிறந்த பயண அனுபவத்தை பெற்று வருகின்றனர்.

போயிங் 777 விமானத்தின் சிறப்பம்சங்கள் விபரம்!

போயிங் 777 விமானத்தின் சிறப்பம்சங்கள் விபரம்!

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Emirates is one of the safest airline service in the world... Why?.
Story first published: Friday, August 5, 2016, 13:01 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark