ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கின் எளிமைக்கு இந்த காரும் ஒரு சான்றுதான்!

ஒருவேளை ஃபேஸ்புக் தலைவர் பதவியில் இருந்தால், நீங்கள் எந்த காரை வாங்குவீர்கள்?. ஒரு புகாட்டி வேரோன், இல்லை ஒரு கோயனிக்செக் அகரா அதுவும் வேண்டாம் எனில், ஒரு பிஎம்டபிள்யூ அல்லது ஆடியாக இருக்கலாம்.

ஆனால், ஃபேஸ்புக் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் எந்த காரை வாங்கி வைத்திருக்கிறார் தெரியுமா? ஒரு ஃபோக்ஸ்வேகன் ஹேட்ச்பேக் காரைத்தான் வாங்கி பயன்படுத்தி வருகிறார்.

இதனை கேள்விப்பட்ட ஃபோக்ஸ்வேகன் ஆச்சரியத்தில் மூழ்கி, தனது பிராண்டை தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவருக்கு ஒரு பரிசையும் அனுப்பியுள்ளது. அதுபற்றிய கூடுதல் தகவல்களுடன் ஒரு செய்தித் தொகுப்பு.

 ஃபோக்ஸ்வேகன் கார்

ஃபோக்ஸ்வேகன் கார்

கருப்பு நிறத்திலான ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் எம்கே6 ஜிடிஐ காரை வாங்கி பயன்படுத்தி வருகிறார் மார்க். தினசரி அலுவலகம் செல்வதற்கு இந்த காரையே பயன்படுத்துகிறார்.

கையும் களவுமாக?

கையும் களவுமாக?

கடந்த 20 நாட்களுக்கு முன் அலுவலகத்திற்கு கொண்டிருந்த மார்க் கார் ஓட்டிக் கொண்டே மொபைல்போனில் டைப் செய்து செல்வதை ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

மீடியாவின் வருத்தம்?

மீடியாவின் வருத்தம்?

அமெரிக்கர்கள் பெரும்பாலும் ஆட்டோமேட்டிக் கார்களே அதிகம் விரும்புகின்றனர். ஆனால், மார்க் வைத்திருக்கும் கார் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது. இதனையே, மேலைநாட்டு இணையதளங்கள், மார்க் காரில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கூட இல்லையே என குறைப்பட்டுக் கொண்டு எழுதியுள்ளன.

கோல்ஃப் எம்கே6 ஜிடிஐ

கோல்ஃப் எம்கே6 ஜிடிஐ

எம்கே5 காருக்கு மாற்றாக வந்த கோல்ஃப் எம்கே6 ஜிடிஐ கார் 2008ம் ஆண்டு பாரிஸ் மோட்டார் ஷோவில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. அதே ஆண்டு இறுதியில் ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனைக்கு சென்றது.

உலகின் சிறந்த கார் விருது

உலகின் சிறந்த கார் விருது

கடந்த 2009ம் ஆண்டின் உலகின் சிறந்த கார் மாடல் விருதை பெற்றது. யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட் சோதனையில் பாதுகாப்பான கார் என்ற அந்தஸ்து கிடைத்தது. இதுதவிர, ஏராளமான விருதுகளை இந்த கார் வென்றது.

எஞ்சின்

எஞ்சின்

மார்க் வைத்திருக்கும் கார் சாதாரண ஹேட்ச்பேக் காராக கூற முடியாது. அது பவர்ஃபுல் ஹேட்ச்பேக் கார்தான். அவர் வைத்திருக்கும் காரில், 210 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டது.

எஞ்சின்

எஞ்சின்

மார்க் வைத்திருக்கும் கார் சாதாரண ஹேட்ச்பேக் காராக கூற முடியாது. அது பவர்ஃபுல் ஹேட்ச்பேக் கார்தான். அவர் வைத்திருக்கும் காரில், 210 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டது.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

மார்க் பயன்படுத்தும் காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது. இந்த கார் டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

0-100 வேகத்தை 6.9 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்ட இந்த கார் உச்சபட்சமாக மணிக்கு 240 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமையும், கட்டமைப்பையும் கொண்டது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

அமெரிக்க மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் கோல்ஃப் எம்கே6 ஜிடிஐ மாடலில் 8 ஏர்பேக்குகள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் ஆகியவை நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

விலை

விலை

மார்க் சூபெர்க்பெர்க் வைத்திருக்கும் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் எம்கே6 ஜிடிஐ கார் 40,000 டாலர் விலை கொண்டது.

சர்ப்ரைஸ் கிஃப்ட்

ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க்கிடம் கோல்ஃப் கார் இருப்பதை கேள்விப்பட்ட ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், உடனடியாக அவருக்கு ஒரு அன்பு பரிசை அனுப்பியுள்ளது. அது என்ன பரிசு என்பதை வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வள்ளல் தன்மையிலும் ஒரு லேண்ட்'மார்க்'!

வள்ளல் தன்மையிலும் ஒரு லேண்ட்'மார்க்'!

கடந்த ஆண்டு 1 பில்லியன் டாலர் மதிப்புடைய ஃபேஸ்புக் பங்குகளை சிலிக்கான் வேலி சமூக அறக்கட்டளைக்கு மார்க் ஜுக்கர்பெர்க் நன்கொடையாக வழங்கினார். கடந்த ஆண்டில் உலகில் அதிகம் நன்கொடை அளித்தவராக மார்க் கருதப்படுகிறார். சிலிக்கான் வேலி சமூக அறக்கட்டளை அமைப்பு மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் சமூக நலப்பணிகளுக்கு இந்த தொகை செலவழிக்கப்படுகிறது. கடந்த 2012ம் ஆண்டிலும் அரை பில்லியன் டாலர் மதிப்புடைய ஃபேஸ்புக் பங்குகளை இதே அமைப்புக்கு நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Mark Zuckerberg, buy? He got himself a Volkswagen Mk 6 GTI with a manual transmission. That’s right; his car is so basic, it doesn’t even shift itself. When the fine folks and VW heard about this, they were rather pleased with Zuckerberg’s decision, as you might understand. Accordingly, they decided to send h
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X