படு ரகசியம் காக்கப்படும் அமெரிக்காவின் ஸ்டீல்த் ரக போர் விமானங்கள் பற்றிய தகவல்கள்!

Written By:

எதிரி நாட்டு ரேடார்களில் சிக்காமல் சென்று தாக்குதல் நடத்தும் திறன் படைத்த போர் விமானங்களை ஸ்டீல்த் ஜெட் என்று குறிப்பிடுகின்றனர். இந்த விமானங்களின் வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும் எதிரி நாட்டு ரேடார்களால் கணித்து கண்டறிய முடியாத அளவுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

எனவே, ஸ்டீல்த் ரக போர் விமானங்களை வடிவமைப்பதில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், உலகின் மிகச் சிறந்த ஸ்டீல்த் ரக போர் விமானங்களை அமெரிக்கா தயாரித்து வருகிறது. மிக மிக ரகசியமாக ஸ்டீல்த் ரக போர் விமானங்களை அமெரிக்க தயாரித்து வரும் நிலையில், அந்த விமானங்களில் இருக்கும் சில விசேஷ சிறப்புகள் மற்றும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

அமெரிக்காவின் ஸ்டீல்த் ரக போர் விமானங்கள் பற்றிய தகவல்கள்!

1970களில் ஸ்டீல்த் ரக விமான தயாரிப்பை அமெரிக்க துவங்கிவிட்டது. வழக்கமான போர் விமான மாடல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வடிவமைப்புடன் அந்த கால கம்ப்யூட்டர்களை வைத்து ஸ்டீல்த் ரக போர் விமான தயாரிப்பை அமெரிக்கா துவங்கியது.

அமெரிக்காவின் ஸ்டீல்த் ரக போர் விமானங்கள் பற்றிய தகவல்கள்!

ரேடார்களின் சிக்னல்களில் சிக்காதாவாறு இந்த விமானங்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. முதல் ஸ்டீல்த் ரக போர் விமானத்தின் வடிவமைப்பு மீது அதன் பொறியாளர்களுக்கே சற்று சந்தேகத்தை ஏற்படுத்தியது. பறக்கும்போது இந்த விமானத்தின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது.

அமெரிக்காவின் ஸ்டீல்த் ரக போர் விமானங்கள் பற்றிய தகவல்கள்!

போர் விமானங்களுக்கு அதிக செயல்திறன், ஏரோடைனமிக்ஸ் உள்ளிட்ட தத்துவங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால், அவை இரண்டுக்கும் முக்கியத்துவம் தராமல், ரேடாரில் சிக்காமல் எதிரி இலக்குகளை தாக்குதல் நடத்தி திரும்ப வேண்டும் என்பதை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டது. மேலும், இந்த விமானத்தை பைலட்டுகள் மேனுவலாக இயக்க முடியாது. கம்ப்யூட்டர்களின் கட்டுப்பாட்டில் அடிப்படையிலேயே இயக்கப்படுகிறது.

அமெரிக்காவின் ஸ்டீல்த் ரக போர் விமானங்கள் பற்றிய தகவல்கள்!

மேலும், வழக்கமான போர் விமானங்களை போல அல்லாமல், வால் பகுதி இல்லாமல், முடிந்தவரை தட்டயைான வடிவமைப்பை பெற்றது. இதன்மூலமாக, ரேடார்களின் கழுகு பார்வையிலிருந்து இந்த விமானம் எளிதாக தப்பிவிடும்.

அமெரிக்காவின் ஸ்டீல்த் ரக போர் விமானங்கள் பற்றிய தகவல்கள்!

இந்த விமானத்தின் மேல்புறத்தில் ஐயன் பால் பெயிண்ட் என்ற விசேஷ பெயிண்ட் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. ரேடார்களிலிருந்து வரும் மின்காந்த அலைகளை இந்த பெயிண்ட் உறிஞ்சுக் கொள்வதால், திரும்பவும் ரேடார்களுக்கு சிக்னல் செல்லாது அல்லது அந்த சிக்னல்களை வலுவிழக்கச் செய்துவிடும்.. எனவே, இதனை கண்டறிவது சுலபமானதல்ல. இரவுநேரத்தில் இந்த விமானங்களை காண்பதும் எளிதானதன்று.

அமெரிக்காவின் ஸ்டீல்த் ரக போர் விமானங்கள் பற்றிய தகவல்கள்!

விமானம் பயணித்து திரும்பியவுடன் விமானத்தின் பெயிண்ட்டில் கீறல்கள் எதுவும் இருக்கிறதா என்பதை ஒவ்வொரு முறையும் பரிசோதிக்கப்படும். இதுமட்டுமல்ல, விமானத்தின் அனைத்து தொழில்நுட்ப விஷயங்களும் ஒவ்வொரு முறையும் மிக தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, மீண்டும் பறக்க அனுமதிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் ஸ்டீல்த் ரக போர் விமானங்கள் பற்றிய தகவல்கள்!

விமானத்தில் உள்ள எரிபொருள் டேங்க்குகள் வெப்பத்தை உறிஞ்சும் தன்மை கொண்டதாக இருப்பதுடன், புகைப்போக்கி குழாயிலிருந்து வெளியேறும் அபரிதமான வெப்பக் காற்றை தணிக்கும் விதமாக விசேஷ குளிர்ச்சிக் காற்றை செலுத்தும் அமைப்பும் உள்ளது.

அமெரிக்காவின் ஸ்டீல்த் ரக போர் விமானங்கள் பற்றிய தகவல்கள்!

அமெரிக்க விமானப்படைக்காக 2,457 ஸ்டீல்த் ரக போர் விமானங்களை சேர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 1.5 டிரில்லியன் டாலர்களை கொட்டிக் கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த போர் விமானங்கள் 2070ம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருக்கும்.

அமெரிக்காவின் ஸ்டீல்த் ரக போர் விமானங்கள் பற்றிய தகவல்கள்!

அமெரிக்காவின் ஸ்டீல்த் ரக போர் விமானங்களில் லாக்ஹீட் எஃப்-35 போர் விமானம்தான் ரேடார் கண்களில் எளிதாக சிக்காத மிகவும் சிறப்பு வாய்ந்த போர் விமானமாக கூறப்படுகிறது. இதன் இன்டீரியர் வெளியில் தெரியாத வகையிலும், சமிக்ஞைகளை கண்டறிய முடியாத வகையிலும், காக்பிட்டில் விசேஷ பிலிம் ஒட்டப்பட்டு இருக்கிறது.

அமெரிக்காவின் ஸ்டீல்த் ரக போர் விமானங்கள் பற்றிய தகவல்கள்!

பைலட்டுகளுக்கு கொடுக்கப்படும் ஹெல்மெட்டில் இருக்கும் திரை மூலமாக விமானத்தின் வேகம், விமானம் பறந்து கொண்டிருக்கும் உயரம், இலக்கு உள்ளிட்டவற்றை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இதன் முக்கிய விஷயம், ஹெல்மெட்டுடன் கீழ் நோக்கி பார்த்தால், தரைப்பகுதி எளிதாக தெரியும். இப்போது பல நாடுகளில் இதுபோன்ற விசேஷ ஹெல்மெட்டுகள் போர் விமான பைலட்டுகளுக்கு கொடுக்கப்படுகிறது.

அமெரிக்காவின் ஸ்டீல்த் ரக போர் விமானங்கள் பற்றிய தகவல்கள்!

விமானத்தின் வெளியில் பொருத்தப்படும் ஏவுகணைகளை எதிரி நாட்டு ரேடார்கள் எளிதாக கண்டுபிடித்து விட முடியும். எனவே, லாக்ஹீட் எஃப்-35 போர் விமானத்தில் நான்கு ஏவுகணைகளை பொருத்துவதற்கான தனி அறைகள் இந்த விமானத்தில் இருக்கின்றன. இரண்டு வான் இலக்குகளை குறிவைத்தும், இரண்டு தரை இலக்குகளை குறிவைத்தும் ஏவ முடியும். இந்த விமானத்ில் 25மிமீ விட்டமுடைய குழல்கள் கொண்ட துப்பாக்கியும் உள்ளது.

அமெரிக்காவின் ஸ்டீல்த் ரக போர் விமானங்கள் பற்றிய தகவல்கள்!

ஸ்டீல்த் ரக போர் விமானங்களில் மிகப்பெரிய குறை என்ன தெரியுமா? வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளை விடுவிப்பதற்காக திறக்கப்படும்போது, அவை ஸ்டீல்த் அம்சத்தை இழந்துவிடும். ஏவுகணைகள் செலுத்தப்பட்ட பின்னர், அந்த கதவுகள் மூடிய பின்னர்தான் மீண்டும் ஸ்டீல்த் அம்சத்தை பெறும்.

அமெரிக்காவின் ஸ்டீல்த் ரக போர் விமானங்கள் பற்றிய தகவல்கள்!

அதேநேரத்தில், சில குறைபாடுகளும் உண்டு. எஃப்-35 லைட்னிங்- 2 விமானத்தில் சாஃப்ட்வேர் பிரச்னை இருக்கிறது. அத்துடன், அவசர காலத்தில் விமானி வெளியேறுவதற்கான இருக்கையும் சரிவர இயங்காத தொழில்நுட்ப பிரச்னை இருப்பதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும், உலகின் மிகச் சிறந்த ஸ்டீல்த் ரக விமானங்களை தயாரிப்பதிலும், பயன்படுத்துவதிலும் அமெரிக்க வழக்கம்போல் முன்னோடியாக விளங்குகிறது.

அமெரிக்காவின் ஸ்டீல்த் ரக போர் விமானங்கள் பற்றிய தகவல்கள்!

இந்த ஸ்டீல்த் ரக விமானத்தின் தயாரிப்பு செலவு மிக அதிகம். ஒரு விமானத்தின் விலை 2.13 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டது. அத்துடன், ஒரு மணி நேரம் பறப்பதற்கான செலவு 1.35 லட்சம் டாலர்களாக இருக்கிறது. தற்போது லாக்ஹீட் மார்ட்டின் ஸ்டீல்த் போர் விமானங்கள் அமெரிக்க விமானப் படையின் முக்கிய பலமாக இருந்து வருகின்றன.

அமெரிக்காவின் ஸ்டீல்த் ரக போர் விமானங்கள் பற்றிய தகவல்கள்!

அமெரிக்காவில் 35 ஆண்டுகளுக்கு முன் ஸ்டீல்த் ரக போர் விமானங்கள் தயாரிப்புப் பணிகள் துவங்கி, 10 ஆண்டுகளுக்கு முன் விமானப்படை பயன்பாட்டிலும் வந்துவிட்டது. ஆனால், இந்தியாவில் தற்போது இந்த வகை விமானங்களை வடிவமைப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகள் துவங்கியுள்ளன.

அமெரிக்காவின் ஸ்டீல்த் ரக போர் விமானங்கள் பற்றிய தகவல்கள்!

ரஷ்யா ஒத்துழைப்புடன் இந்த ஸ்டீல்த் ரக விமானத்தை தயாரிக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது மத்திய அரசு. இன்னும் ஒரு தசாப்தத்திற்குள் இந்த வகை விமானங்களை இந்திய விமானப்படையின் பயன்பாட்டிலும் காணும் வாய்ப்புள்ளது.

அம்மாடியோவ்... என்னா ஒரு பிரம்மாண்டம்!

இன்று பெங்களூரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்தியன் சீஃப்டெயின் டார்க் ஹார்ஸ் மோட்டார்சைக்கிளின் பிரத்யேக படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Little Known facts about US Air Force stealth Fighter Jets

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark